இணையவழிக் கல்வி: அடுத்த தலைமுறைத் தரவுத்தளம்

By முகமது ஹுசைன்

உலகின் சிறந்த திறமைகள் பெரும் நிறுவனங்களின் ஆய்வகங்களில் மட்டுமே உள்ளன. தரமான மென்பொருட்களைத் வடிவமைப்பதற்கு அவர்களால் மட்டுமே முடியும் என்பதுதான் பெரும்பாலோரின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையைத் தகர்த்த பெருமை ஓபன் சோர்ஸ் மென்பொருளைச் (Open-source Software) சாரும்.

ஓபன் சோர்ஸ் மென்பொருள் ஆய்வகங்களுக்குள் உருவாக்கப்படுவதல்ல. அது ஆய்வகத்துக்கு வெளியே இருக்கும், தொழில்நுட்பத்தில் தேர்ச்சிப் பெற்ற பயனீட்டாளர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படுகிறது. மேலும் அவர்களின் தேவைக்கு ஏற்ப அந்த மென்பொருளின் திறன் அவர்களால் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. அவை இன்றும் பயனீட்டாளர்களுக்கு இலவசமாகதான் வழங்கப்படுகின்றன.

ஆனால், தொடர்ந்து திறனேற்றப்படும் இந்த ஓபன் சோர்ஸ் மென்பொருள், அது அறிமுகமான காலத்தில் ஏளனமாகவே பார்க்கப்பட்டது. அதையும் மீறி, ஆய்வகங்களுக்கு வெளியே பரவியிருக்கும் திறமைகளுக்கு எல்லையே இல்லை என்பதை ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்கள் இன்று நிரூபித்துள்ளன.

லினக்ஸ், ஆண்ட்ராய்டு என்று அதற்குச் சான்றாகப் பெரும் பட்டியலே உள்ளது. அந்தப் பட்டியலில் இப்போது இணைந்திருக்கிறது மோங்கோடிபி தரவுத்தள (MongoDB Database). பல நிறுவனங்களும் அதை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளன.

புதிய மென்பொருள் என்பதால் அதில் தேர்ச்சிபெற்ற பொறியியலாளர்கள் குறைவாகவே உள்ளனர். எனவே, இதைக் கற்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதைக் கற்றுத் தேர்வது ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல. இதை எளிதாக இலவசமாகவே கற்றுக்கொள்ள முடியும்.

மோங்கோடிபி என்பது என்ன?

ஓபன் சோர்ஸ் மென்பொருளான இது ஒரு NoSQL வகை தரவுத்தளம். SQL வகை தரவுத்தளங்கள், தரவுகளை அட்டவணைகளில் பதிவுசெய்யும். ஆனால், இந்த NoSQL தரவுத்தளத்தில் அட்டவணைகள் (Tables) பயன்படுத்தப்படுவதில்லை. இதில் தரவுகள் தனித் தனி ஆவணங்களில் (Documents) சேமிக்கப்படுகின்றன.

அட்டவணைகளில் தரவுகளைச் சேமிப்பது கடினமானது மட்டுமல்ல, அயர்ச்சியையும் அளிக்கும் வேலையாகும். ஆனால், இந்த NoSQL தரவுத்தளத்தில் அந்தத் தொந்தரவுகள் கிடையாது. இது துண்டுக் காகிதத்தில் எழுதிவைப்பதைப் போன்று மிகவும் எளிதாக இருக்கும். அதே நேரம் தேவைப்படும் நேரத்தில் தேவையான தகவலை எளிதில் எடுக்கும்வண்ணம் முறையாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

SQL வகை தரவுத்தளங்களைப் போன்று அல்லாமல், இந்த MongoDB-ல் தரவுகளைச் சேர்ப்பதும் எடுப்பதும் அழிப்பதும் மிகவும் எளிது. அதேபோன்று இதன் தரவுத்தளத்தை விரிவுபடுத்துவதும் மிகவும் எளிது. அதன் விரிவாக்கத்துக்கு எல்லையே இல்லை.

மோங்கோடிபி எப்படி உருவானது?

ட்விட் மெர்ரிமான், எலியட் ஹோரோவிட்ஸ் எனும் பொறியாளரால் இது உருவாக்கப்பட்டது. அதைப் பணி நிமித்தமாகத்தான் அவர்கள் உருவாக்கினார்கள். டபிள் கிளிக் எனும் நிறுவனத்தில் அவர்கள் SQL வகை தரவுத்தளத்தைப் பயன்படுத்தி ஒரு இணைய அப்ளிகேசனை வடிவமைத்தனர். அப்போது அந்தத் தரவுத்தளத்தை விரிவுபடுத்துவது அவர்களுக்கு மிகவும் சவாலாகவும் அயர்ச்சியாகவும் இருந்தது. ஒருகட்டத்தில் அவர்கள் அந்த முயற்சியில் வெறுத்துப் போய் ஏன் புதிதாக ஒரு தரவுத்தளத்தை வடிவமைக்கக் கூடாது என்று யோசித்தனர்.

அந்த யோசனையின் விளைவுதான் இன்று நம்மிடையே இருக்கும் இந்த MongoDB. 2009-லேயே இந்தத் தரவுத்தளம் பொது உபயோகத்துக்கு வந்துவிட்டாலும், இப்போதுதான் பெரிய நிறுவனங்கள் இதன் ஆற்றலின் மகிமையை உணர்ந்துள்ளன.

வணிகம், இணைய விளையாட்டுகள், தகவல் தொடர்பு, சமூக வலைத்தளங்கள், அரசுத் துறைகள், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல பிரிவுகளில் மோங்கோடிபியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சிஸ்கோ, இ.ஏ., இ.பே., எரிக்ஸன், ஃபோர்ப்ஸ், இண்ட்யுட், எஸ்.ஏ.பி. (SAP), டெலிஃபொனிகா போன்ற பல நிறுவனங்களில் மோங்கோடிபி மட்டும்தான் இப்போது பயன்பாட்டில் உள்ளது.

வருங்காலம் எப்படி இருக்கும்?

உணவைப் போன்று தகவலும் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. சொல்லப்போனால், தகவல்கள்தாம் மனித இனத்தின் வளர்ச்சியையும் மலர்ச்சியையும் தீர்மானிக்கின்றன. தகவல்களைச் சேமிப்பதும் அதைத் தேடித் எடுப்பதும் இனி ஒரு போதும் நிற்கப்போவதில்லை. ஆதலால், தரவுத்தளத் துறையின் வளர்ச்சி வருங்காலத்தில் மிகவும் அபரிமிதமாகத்தான் இருக்கும். மோங்கோடிபி அடுத்த தலைமுறை தரவுத்தளம் என்பதால், அதைக் கற்பது நல்ல வேலையை உங்களுக்குப் பெற்றுத் தரும்.

எங்கே படிக்கலாம்?

மோங்கோடிபியை இலவசமாகப் படிப்பதற்குத் தரமான இணைய வகுப்புகள் உள்ளன. மோங்கோடிபி நிறுவனத்தின் இணையத்தளத்தில் இருக்கும் இணைய வகுப்புகளே இதை முழுவதும் கற்றுக்கொள்வதற்குப் போதுமானது. அது போதாது என்று நினைப்பவர்கள் கீழே உள்ள இணைப்புகளின் வழி கிடைக்கும். இலவச இணைய வகுப்புகளைப் பயன்படுத்தலாம்.

https://university.mongodb.com/

https://www.edx.org/school/mongodbx

https://www.coursera.org/learn/introduction-mongodb

https://www.lynda.com/MongoDB-training-tutorials/1475-0.html

https://www.class-central.com/provider/10gen

https://www.udemy.com/topic/mongodb/

https://www.simplilearn.com/big-data-and-analytics/mongodb-certification-training

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்