ஜூன் 15: சாகித்ய அகாடமியின் 2024ஆம் ஆண்டுக்கான ‘பால புரஸ்கார்’ விருது ‘தன்வியின் பிறந்த நாள்’ என்கிற சிறார் கதைத் தொகுப்புக்காக யூமா வாசுகிக்கும் ‘யுவ புரஸ்கார்’ விருது ‘விஷ்ணு வந்தார்’ என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக லோகேஷ் ரகுராமனுக்கும் அறிவிக்கப்பட்டது.
ஜூன் 15, 16: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் அறிவித்தன.
ஜூன் 17: திரிபுரா தலைநகர் அகர்தலாவிலிருந்து மேற்கு வங்கத்தின் சீல்டா நகருக்குச் சென்ற கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர்.
ஜூன் 17: வயநாடு தொகுதி எம்.பி. பதவியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்றும் அத்தொகுதியில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
ஜூன் 19: நீட் தேர்வில் 0.001% அலட்சியம்கூட இருக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஜூன் 19: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயம் வாங்கி குடித்தவர்களில் 3 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
ஜூன் 20: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக கேரள உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ். மணிகுமாரை நியமித்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டார்.
ஜூன் 20: பீஹாரில் 65% இடஒதுக்கீடு நடைமுறையை அந்த மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது.
தொகுப்பு: மிது
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago