சேதி தெரியுமா? | Weekly News updates

By தொகுப்பு: மிது

மே 25: ஆறாவது கட்டமாக மக்களவைக்கு உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியாணா உள்பட ஏழு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 59% வாக்குகள் பதிவாயின.

மே 25: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனியார் பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். இதில் 12 பேர் சிறுவர், சிறுமியர்.

மே 26: சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ‘சன் ரைசர்ஸ் ஹைதராபாத்’ அணியை வீழ்த்தி ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி கோப்பையை வென்றது. இது கொல்கத்தா வெல்லும் மூன்றாவது ஐபிஎல் கோப்பை.

மே 26: வணிக ரீதியில் தாய்ப்பால் விற்பனை செய்வதை உடனே நிறுத்தும்படி தாய்ப்பால் வங்கிகளுக்கு உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் எச்சரித்துள்ளது.

மே 27: வங்கக் கடலில் உருவான ரீமல் புயல் இந்தியாவின் மேற்கு வங்கத்துக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கரையைக் கடந்தது. சூறைக் காற்றாலும் கன மழையாலும் மேற்கு வங்கத்தில் ஆறு பேரும் வங்கதேசத்தில் பத்துப் பேரும் உயிரிழந்தனர்.

மே 27: இந்தியாவின் ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலத்தை ஒரு மாதக் காலம் நீட்டித்து மத்தியப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 30 வரை இந்தப் பொறுப்பில் அவர் நீடிப்பார்.

மே 28: ரீமல் புயலின் தாக்கத்தால் மிசோராம் மாநிலத்தில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர்.

மே 29: கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக சி.ஜி. கர்ஹாதர் நியமிக்கப்பட்டார்.

மே 31: பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியிலிருந்து திரும்பிய நிலையில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

ஜூன் 1: மக்களவைக்கு ஏழாவது மற்றும் இறுதிக் கட்டமாக உத்தரப் பிரதேசம். பீஹார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 58.3% வாக்குகள் பதிவாயின.

ஜூன் 2: அருணாச்சல பிரதேசத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 46 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. சிக்கிமில் 32 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது.

ஜூன் 2: அனைத்துவிதமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்தார். 28 டெஸ்ட், 94 ஒரு நாள் போட்டிகள், 60 டி20 போட்டிகள், 257 ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

ஜூன் 2: இருபது நாடுகள் பங்கேற்கும் எட்டாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் தொடங்கியது.

ஜூன் 4: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. ‘இண்டியா’ கூட்டணி 232 தொகுதிகளில் வென்றது.

ஜூன் 4: மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி வென்றது.

ஜூன் 4: ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் 133 தொகுதிகளில் வென்று தெலுங்கு தேசம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 13 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

ஜூன் 4: ஒடிசாவில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளில் வென்று முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஆளும் பிஜூ ஜனதாதளம் 51 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதன்மூலம் 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஜூன் 4: காலியாக இருந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 91,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஜூன் 5: தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொகுப்பு: மிது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்