வரலாறு தந்த வார்த்தை 24: இது ‘ஜென்டில்மேன்’ விளையாட்டல்ல!

By ந.வினோத் குமார்

வி

ளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். ஆனால், வெற்றி பெறுவதற்காகச் செய்யும் தில்லுமுல்லுகள்… அராஜகம்! எல்லா விதமான விளையாட்டுகளிலும் அராஜகங்கள் நடக்கின்றன என்றாலும், கிரிக்கெட் விளையாட்டில்தான் அதன் உச்சநிலை தெளிவாகத் தெரியும். அதற்குச் சமீபத்திய உதாரணம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ‘கை’ங்கர்யம்.

‘பால் டேம்பரிங்’ என்று சொல்லப்படும் பந்தைச் சேதப்படுத்தி, அதன் மூலம் பேட்ஸ்மேன்களைத் திக்குமுக்காடச் செய்து, விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறலாம் என்று அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பந்து வீச்சாளர் கேமரூன் பான்கிராஃப்ட் சேர்ந்து திட்டம் தீட்டினர்.

ஆனால், கேமரா கண்களிலிருந்து யார்தான் தப்ப முடியும்? மூவரும் வசமாக மாட்டிக்கொண்டார்கள். விளைவு தண்டனை, தடை, தூற்றுதல், கண்ணீர் மல்கக் கேட்ட மன்னிப்புகள்!

அவர்கள் மூவரும் தங்கள் விளையாட்டுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை. தங்கள் நாட்டுக்கும் தங்களை முன்மாதிரியாக எண்ணிக் கொண்டாடிய ரசிகர்களுக்கும் சேர்த்தே துரோகம் செய்திருக்கிறார்கள்.

நிற்க, பல்வேறு விளையாட்டுகளிலிருந்து, ஆங்கில மொழிக்கு நிறைய சொற்றொடர்கள் கிடைத்திருக்கின்றன. இங்கு கிரிக்கெட் விளையாட்டைப் பற்றிப் பேசுவதால், அதிலிருந்து கிடைத்த ஒரு சொற்றொடரை மட்டும் பார்ப்போம்.

பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் வெளியானவுடன், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஸ்டீவ் ஸ்மித் மன்னிப்புக் கோரினார். நடந்த விஷயத்துக்குத் தானே முழுப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவ்வாறு நேர்மையாக நடந்துகொள்வதை ‘play a straight bat’ என்று குறிப்பிடுவார்கள்.

இதே சொற்றொடருக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. ஸ்டீவ் ஸ்மித், பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க, டேவிட் வார்னரோ, நிறைய கேள்விகளுக்குப் பதில் தரவில்லை. ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும், வார்னர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘நான் விடையளிக்காத பல கேள்விகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். காலப்போக்கில் அதற்கான விடைகளை நான் தருவேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு கடினமான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்ப்பதைக் குறிப்பிடவும் மேலே சொன்ன சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

நேர்மையாக நடந்துகொள்வதை விளக்குவதற்கு உலகம் முழுவதும் ‘பிளே எ ஸ்ட்ரெய்ட் பேட்’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டாலும், இங்கிலாந்தில் மட்டும், கடினமான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்ப்பதைக் குறிப்பிடவும் இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பேச்சு வழக்கில் மட்டும்தான்.

உண்மையில், ‘ஸ்ட்ரெய்ட் பேட்’ என்பது, கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனின் விளையாட்டு முறைகளில் ஒன்று. அதாவது, பேட்டை, அந்தப் பக்கம் இந்தப் பக்கம் சாய்க்காமல், நேராகப் பிடித்துப் பந்தை எதிர்கொள்வதற்குப் பெயர்தான் ‘ஸ்ட்ரெய்ட் பேட்’. நேர்மை என்பதும் ஒரு வகையில் எந்தப் பக்கமும் சாயாமல் இருப்பதுதானே!

மற்றபடி, கிரிக்கெட்டை, ‘ஜென்டில்மேன் விளையாட்டு’ என்று சொல்வார்கள். ஆனால், ‘பால் டேம்பரிங்’ எல்லாம் ‘ஸ்ட்ரெய்ட் பேட்’ கிடையாதே..!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்