ப
ட்டதாரிகளின் எண்ணிக்கை தேவையை மிஞ்சிவிட்ட இன்றைய காலத்தில், வேலைப் பெறுவதற்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. பட்டதாரிகள் தங்களைக் கூட்டத்திலிருந்து தனித்துக் காட்ட வேண்டியது அவசியமாக உள்ளது. அவர்கள் பட்டப்படிப்புடன் சேர்த்து ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கல்லூரிக்குக் கட்டணம் கட்டியே மாளவில்லை, இன்னும் செலவு செய்ய வேண்டுமா என்று மலைக்க வேண்டாம். படிக்க வேண்டும் என்ற முனைப்பு மட்டும் இருந்தால் செலவு எதுவும் செய்யாமலேயே உங்களால் இப்போது படிக்க முடியும்.
எங்குப் படிக்கலாம்?
Edx எனும் இணைய வகுப்பறை (edx.org) மிகவும் பிரசித்தப் பெற்ற ஒன்று. இதன் சிறப்பு என்னவென்றால் இங்கு அனைத்துப் பாடங்களும் இலவசமாகவே கற்றுத் தரப்படுகின்றன. உங்கள் படிப்புக்கு அங்கீகாரச் சான்றிதழ் வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே அதற்குச் சிறு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஹார்வர்டு, எம்.ஐ.டி.போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள்கூட இலவசக் கல்வியை இணைய வகுப்பில் நடத்துகின்றன.
என்ன படிக்கலாம்?
கணினித் துறை என்றவுடன் பெரும்பாலோர் பொருள் வடிவமைப்பிலும் அதன் புரோகிரமிங் லாங்குவேஜ்களிலும் சுருக்கிக்கொள்கின்றனர். ஆனால், கணினி வடிவமைப்பு, ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நிறுவுதல், நெட்வொர்க் வடிவமைப்பு, தரவுகளைப் பாதுகாத்தல், இணையத்தில் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துதல் என்று அதன் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே செல்லலாம். இதில் தற்போது மிகுந்த தேவையும் ஆள் பற்றாக்குறையும் நிலவும் துறையாகத் திகழும் இணையப் பாதுகாப்பைப் பற்றிப் படிக்கலாம்.
இணையப் பாதுகாப்பு
இணையத்தால் இணைக்கப்பட்டுள்ள இன்றைய நவீன உலகில், உங்கள் தனிமையையும் அந்தரங்கத்தையும் தீர்மானிப்பது நீங்கள் வசிக்கும் வீடோ நீங்கள் அணிந்திருக்கும் உடையோ அல்ல. அவற்றைத் தீர்மானிப்பது இணையப் பாதுகாப்புதான்.
உங்களுடைய தனிமையையும் அந்தரங்கத்தையும் குலைப்பது இப்போது மிகவும் எளிது. உங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டிருந்தாலோ உங்கள் மின்னஞ்சலின் கடவுக்சொல்லோ உங்கள் சமூக வலைத்தளங்களின் கடவுச்சொல்லோ திருடப்பட்டிருந்தாலோ நீங்கள் உங்களுடைய தனிமையையும் அந்தரங்கத்தையும் இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
ஆனால், இன்றும் பெரும்பாலோர் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலோ சோம்பேறித்தனத்தாலோ கணினிக்கும் கைப்பேசிக்கும் எளிதான கடவுச் சொற்களையே பயன்படுத்துகின்றனர். உதாரணத்துக்கு 1234, குழந்தையின் பெயர், மனைவியின் பெயர் போன்றவை. அதில் இன்னும் சிலர் கடவுச்சொல்லே இல்லாமலும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
இணையப் பாதுகாப்பு பற்றிய படிப்பு, உங்கள் கணினிக்கு என்னென்ன ஆபத்துகள் நேரச் சாத்தியமுள்ளது என்பதையும் அந்த ஆபத்துகளை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதையும் கற்றுத் தரும். மேலும் இணையத்தில் உங்கள் தரவுகளுக்கு இருக்கும் ஆபத்துகளையும் அந்தத் தரவுகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் கற்றுத் தரும்.
கற்றுத் தரப்படுபவை
முதலில் இணையப் பாதுகாப்பின் எல்லைகள் உங்களுக்குக் கற்றுத் தரப்படும். பின்பு அங்கு இருக்கும் ஆபத்துகளின் வகைகள் கற்றுத் தரப்படும். இணையத்திலிருந்து உங்கள் நெட்வொர்க் பாதுகாப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என்பதையும் ஆபத்து நேராமல் அதை எப்படிக் கண்காணிக்க வேண்டும் என்பதும் கற்றுத் தரப்படும்.
மேலும், கணினிக்குள் நுழைந்த வைரசை எப்படிக் களைய வேண்டும் என்பதும் அது நுழையாமல் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதும் கற்றுத் தரப்படும். முக்கியமாக நீங்கள் உருவாக்கி இருக்கும் பாதுகாப்பு வளையக் கோட்டையில் இருக்கும் ஓட்டைகளை எப்படி அறிவது என்பதும் அந்த ஓட்டைகளை எப்படி அடைப்பது என்பதும் கற்றுத் தரப்படும்.
இணையப் பாதுகாப்பு பொறியியலாளருக்கான தேவை வருங்காலத்தில் மிக அபரிமிதமாக இருக்கும். இணையப் பாதுகாப்பு இப்போது மிகவும் முக்கியத் துறையாக இருப்பதோடு ஆள் பற்றாக்குறை காரணமாகச் சற்றுத் தடுமாறிக்கொண்டும் உள்ளது. பொறியியல் படிக்கும்போதே இணையப் பாதுகாப்பில் கொஞ்சம் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொண்டால், பட்டதாரியான பின் வேலையைத் தேடி நீங்கள் செல்ல வேண்டாம், வேலை உங்களைத் தேடிவரும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago