கேட்டாரே ஒரு கேள்வி
Platform என்பதும், pavement என்பதும் ஒரே பொருள் கொண்ட சொற்களா?
***********
“Ambulance chaser” என்பவர் யார்?
சிலவகை வழக்கறிஞர்களைக் குறிக்கும் சொல் இது.
வீதியில் தோண்டப்பட்ட பள்ளத்தை வெகுநாட்களாக மூடாமலேயே வைத்திருக்கிறது நிர்வாகம். இந்தப் பள்ளத்தில் விழுந்த ஒருவர் படுகாயம் அடைகிறார்.
பெரிய நிறுவனம் ஒன்று தங்களது எட்டாவது மாடியில் உள்ள பால்கனிக்குக் கைப்பிடிச் சுவர் வைக்காமலேயே விட்டுவிட, ஊழியர் ஒருவர் அங்கிருந்து எட்டிப் பார்க்கும்போது கீழே விழுந்துவிடுகிறார்.
இப்படிப் பாதிப்பு ஏற்படுபவர்களின் பக்கம் நின்று நிர்வாகத்தின் மீதோ பெருநிறுவனத்தின் மீதோ வழக்கு தொடுத்து நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுத் தரும் வழக்கறிஞரை Ambulance chaser என்பார்கள்.
அமெரிக்காவில் வழக்கறிஞர்களின் கட்டணம் என்பது இப்படி நஷ்ட ஈடாகக் கிடைக்கும் தொகையிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் என்று கணக்கிடப்படும். இதன் காரணமாகவே இதுபோன்ற வழக்குகளில் ஈடுபடச் சில வழக்கறிஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்தக் கட்டணத்தில்தான் Ambulance chaser என்பது ஒருவரை மட்டம்தட்டும் விதமாகப் பயன்படுகிறது.
***********
கேட்டாரே ஒரு கேள்விக்கான பதில் ‘அல்ல’ என்பதுதான். ரயில் பயணத்தில் platform என்பதை ரயில்பாதை அருகிலுள்ள இடம் என்பதாக நினைத்துக்கொள்கிறோம். Platform என்பது முக்கியமாக ரயில் நிலையங்கள் தொடர்பானதுதான் என்றாலும், உயரத்தில் அமைந்த தட்டையான எந்தப் பரப்பையும் platform எனலாம். Platform என்பது நடைமேடை. நிற்பதற்கான மேடை என்றுகூடச் சொல்லலாம். ஒலிம்பிக் பதக்கங்களைப் பெறும்போது விளையாட்டு வீரர்கள் நிற்கும் இடங்களைக்கூட platforms என்பார்கள். பேசுவதற்கும் இசை நிகழ்ச்சிகளுக்கும் சற்று உயரமான தட்டையான பகுதி அமைக்கப்பட்டால் அதுவும் platformதான்.
சில நேரம் உருவகமாகவும் platform பயன்படுத்தப்படுகிறது. “அவனுக்கு ஒரு நல்ல பிளாட்ஃபார்ம் மட்டும் அமைஞ்சதுன்னா ஓஹோன்னு வந்திடுவான்!”
english 2jpgPedestrian crossing-கும் pavement-ம் ஒன்று அல்ல. Pavement என்பது நடைபாதை. இதை அமெரிக்கர்கள் sidewalk என்று அழைக்கிறார்கள்.
சாலைகளைக் கடக்கச் சில இடங்களில் வெள்ளையும் கறுப்புமாகக் கோடுகளைப் போட்டிருக்கிறார்கள். இது Pedestrian crossing. இதையும் அமெரிக்காவில் வேறுமாதிரிதான் சொல்கிறார்கள்: Crosswalk.
***********
Carrying suitcase என்பதற்கும், holding suitcase என்பதற்கும் என்ன வேறுபாடு என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது ஒரு வாசகருக்கு.
சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு நடந்தால் carrying suitcase. நிற்கும்போது அதைத் தூக்கிக்கொண்டிருந்தால் holding suitcase.
***********
“The property devolved” என்கிறார்களே அதற்கு என்ன பொருள்?
உறவினர் இறந்ததன் காரணமாக அவரது சொத்து மற்றொருவருக்கு வந்து சேர்ந்துவிட்டது என்று பொருள். When Rajesh died, the estate devolved on his son.
உயர்பதவியில் உள்ள ஒருவர் தனக்குக் கீழே பணியாற்றும் ஒருவருக்கு ஓர் அதிகாரத்தையோ பொறுப்பையோ தருவதைக்கூட devolve என்று குறிப்பிடுகிறார்கள்.
***********
Anyone - Any one
“Anyone என்பது ஒரு சொல்லா அல்லது இரண்டு சொற்களா?” என்பது ஒரு வாசகரின் சந்தேகம்.
இரண்டு விதமாகவும் பயன்படுத்தலாம். இரண்டுக்கும் அர்த்தங்கள் வேறு.
Anyone என்றால் யார் வேண்டுமானாலும் என்று அர்த்தம். Anyone can help me என்றால் யார் வேண்டுமானாலும் எனக்கு உதவலாம் என்று பொருள்.
Any one என்றால் யாராவது ஒரு நபர் என்று பொருள். Any one-ஐத் தொடர்ந்து ‘of’ என்ற வார்த்தை அவசியம் இடம் பெறும்.
Anyone என்பதில் எந்த நிபந்தனையும் கிடையாது. Any one என்பது குறிப்பிட்ட கூட்டத்தில் யாராவது ஒருவரைக் குறிக்கிறது. Ask any one of your friends to attend the meeting. Anyone can attend this meeting.
தொடக்கம் இப்படித்தான்
Go berserk என்று ஒரு phrase உண்டு. இதற்குச் சமமான மற்றொரு phrase-ஆக run amok என்பதைக் கூறலாம்.
Berserk என்றால் கட்டுப்பாடற்ற கோபம் என்று பொருள். When he found that his motor bike was taken away by his brother, he was berserk.
8-ம் நூற்றாண்டிலிருந்து 11-ம் நூற்றாண்டுவரை வாழ்ந்த நோர்ஸ் இனத்தைச் சேர்ந்தவர்களை ‘வைகிங்’ என்று அழைப்பார்கள். நிறையக் கடற்பயணங்களை மேற்கொண்டு புதிய குடியிருப்புகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் இவர்கள். நோர்ஸ் என்ற இவர்களது மொழியில் ‘Berserker’ என்பது மிகவும் துணிவாக, ஆக்ரோஷமாகச் சண்டையிடும் போராளியைக் குறிக்கும். இந்தச் சொல் ‘Bear Serk’ என்பதிலிருந்து வந்திருக்கக்கூடும். Bear Serk என்றால் கரடியின் கம்பளி மேல் தோல் என்று பொருள்.
சிப்ஸ்
# Irregardless என்றால்?
Regardless.
# Quantum leap என்பதற்கு ஆழமான அர்த்தம் ஏதாவது உண்டா?
Great change, large progress இவைதான் quantum leap. சொல்லும்போது இனிமையாகவும், ஸ்டைலிஷாகவும் இருப்பதால் quantum leap என்கிறார்கள்.
# What a nerve என்றால்?
‘என்னவொரு தைரியம்!’
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago