கேட்டாரே ஒரு கேள்வி
“To play a second fiddle” என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். Play the first fiddle என்று ஒன்று உண்டா?”
*****************
Bigwig என்றால் யார்?
அதிகாரத்தில் உள்ள வி.ஐ.பி.க்களைக் குறிக்கப் பயன்படும் சங்கேத வார்த்தை இது. அந்தக் காலத்தில் நீதிபதிகள் பெரிய (Big) Wig-களைத் தலையில் அணிந்தனர். இதைத் தொடர்ந்துதான் Bigwig என்ற வார்த்தை உருவாகி இருக்க வேண்டும்.
We are invited to a lunch with local bigwigs. Bigwig என்பதற்கு இணையான வார்த்தையாக High Ranking என்பதைக் குறிக்கலாம். எக்கச்சக்கப் பணம் அல்லது அதிகாரம் கொண்டவரை ‘fat cat’ என்றும் குறிப்பிடுவதுண்டு.
*****************
கேட்டாரே ஒரு கேள்விக்கான விடை இது.
முதலில் Playing second fiddle என்பதன் பொருளைப் பார்த்துவிடுவோம். Fiddle என்பது வயலின். Second fiddle என்றால் அதற்கான மதிப்பு குறைவுதான். நாதஸ்வரக் கலைஞரின் அந்தஸ்து ஒத்து ஊதுபவருக்குக் கிடையாது இல்லையா அது போலத்தான். A junior employee is always expected to play second fiddle to his senior.
First fiddle-ம் உண்டு! The scientists played the first fiddle to take leading part in development of nuclear capability of the country.
11CH_Bigwigs100
‘Drown one’s sorrows’ என்றால் சோகத்தில் மூழ்குவது என்ற பொருளா?
இல்லை. மதுவில் மூழ்குவது என்று பொருள். அதாவது மதுவை உட்கொள்வதன் காரணமாகச் சோகத்தைப் புதைப்பது (என்று நினைத்துக்கொள்வது). Jack is in the bar drowning his sorrows.
*****************
Methodology-யும் methods-ம் ஒன்றா?
இல்லை. நீங்கள் ஒரு குழுவுக்குப் பயிற்சி அளிக்கிறீர்கள். இதற்காக விரிவுரை அளிக்கிறீர்கள். குறுந்தகடு மூலம் ஒரு படத்தைப் போட்டுக் காட்டுகிறார்கள். உங்கள் விரிவுரையின் சாரத்தைச் சிறு நூலாகப் பிரதிகள் எடுத்து விநியோகிக்கிறீர்கள். இவை ஒவ்வொன்றும் ஒரு method. இத்தனை methods-ஐயும் நீங்கள் பயன்படுத்தும் விதம் methodology.
*****************
Pseudonym என்பதும், nickname என்பதும் ஒன்றுதானே?
Nickname என்றால் additional name. பண்டைய ஆங்கிலத்தில் ‘ekename’ என்பது அதிகப்படுத்துதல் என்பதைக் குறித்தது. அதாவது, nickname என்றால் அதிகப்படியான பெயர்.
திருமணப் பத்திரிகைகளில் nickname-ஐ அடிக்கடி காணலாம். பாப்பா என்ற அங்கயற்கண்ணி, வெங்கடசுப்ரமணியன் (அ) சிண்டு போன்றவற்றில் பாப்பா, சிண்டு போன்றவை nicknames.
நெருங்கிய உறவுகளும் நண்பர்களும் ஒருவரைச் செல்லமாக அழைக்கும் பெயர் என்று nickname-ஐக் குறிப்பிடலாம். பள்ளிக்கூடங்களில் nicknames வெகு சகஜம்.
Pseudonym என்பது தனது சொந்தப் பெயருக்குப் பதிலாக ஒருவர் வைத்துக்கொள்ளும் புனைபெயர். பெரும்பாலும் எழுத்தாளர்கள் புனைபெயர்களை வைத்துக்கொள்கிறார்கள்.
விதிவிலக்குகள் உண்டு. என்றாலும் nickname என்பது பிறரால் சூட்டப்படுகிறது. Pseudonym என்பது நாமே நமக்கு வைத்துக்கொள்வது.
அதற்காக நடிகர் திலகம், தளபதி போன்றவற்றை எல்லாம் இந்த வகையில் சேர்ப்பதில்லை. அவற்றை titles என்கிறார்கள்.
*****************
ஆங்கிலப் புத்தகங்களின் பெயர்களை எழுதும்போது எந்தெந்த இடத்தில் Capital Letter-ஐப் பயன்படுத்துவது என்பதில் குழப்பம் வருகிறதே. என்ன செய்யலாம்?
நூலின் முதல் எழுத்து Capital Letter-ல் இருக்க வேண்டும் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்.
மற்றபடி ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தையும் Capital Letter-ல் எழுதலாம். விதிவிலக்குகள் இவைதாம்:
(a) Articles (a, an, the)
(b) Conjunctions (and, if, but போன்றவை)
(c) சிறிய prepositions (in, with போன்றவை).
இந்த விதி நாளிதழ்களுக்கும், பருவ இதழ்களுக்கும் பொருந்தும். கீழே உள்ள சில எடுத்துக்காட்டுகள் மேலும் தெளிவைத் தரும்.
In Search of Lost Time
War and Peace
One Hundred Years of Solitude
The Sound and the Fury
New York Times
The Hindu
The Times of India
தொடக்கம் இப்படித்தான்
Computer bug என்கிறோமே bug என்றால் மிகச் சிறிய பூச்சி. பொதுவாக மூட்டைப் பூச்சியைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
அப்படியானால், Computer bug என்ற பெயர் எதனால் வந்தது? தொடக்கக் காலத்தில் உருவான கணினிகளில் ஒன்று திடீரென்று தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. காரணம் அந்தக் கருவிக்குள் எப்படியோ ஒரு பூச்சி புகுந்து ரிலே சுவிட்சின் நகரும் பாகங்களுக்கிடையே சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக அந்தக் கணினி ‘ஜாம்’ ஆகிவிட, அந்தக் கணினியைப் பயன்படுத்த முடியாமல்போனது.
பிறகு கணினி இயங்காமல் போவதற்குக் கணினி வைரஸ் காரணமாக இருந்தாலும் அதை, ‘Computer bug’ என்றேகூறத் தொடங்கிவிட்டார்கள்.
சிப்ஸ்
Droop என்றால்?
மிகவும் களைப்புடன் சரிந்து உட்கார்வது. அதாவது ‘தொய்ந்துபோவது’.
Good for a laugh என்பதன் பொருள் என்ன?
சிரிப்பை வரவழைக்கும். ஆனால், அதைத் தவிர வேறெந்த பலனும் இல்லை.
Lighted, Lit ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கிடையே ஏதாவது வேறுபாடு உண்டா?
இல்லை.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago