1
இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகள் ஒவ்வோர் ஆண்டும் மாறுபட்ட நாட்களில் வருகின்றன. ஆனால், அறுவடைத் திருவிழாவான பொங்கல்-மகர சங்கராந்திக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது எப்போதுமே ஜனவரி 14-15 ஆகிய இரண்டு நாட்களில் ஒன்றில் மட்டுமே வரும். இதற்கான அடிப்படைக் காரணம் என்ன?
2
சூரியன் கடக ராசியிலிருந்து மகர ராசிக்கு நகர்வதே ‘மகர சங்கராந்தி’ என்ற பெயர் வந்ததற்குக் காரணம். எளிதாகப் புரிந்துகொள்வதென்றால் பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் இருந்து வடக்கு அரைக்கோளத்தை நோக்கிய சூரியன் நகர்வு (Solstice) இது.
பூமியில் சூரியக் கதிர்கள் விழும் நிலை திரும்புவதைக் குறிக்கும் இந்த மாற்றம் பருவ நிலையிலும் தாக்கம் செலுத்தும். குளிர் காலத்தின் முடிவாகவும் இதைக் கொள்ளலாம். சரி, சங்கராந்தி என்றால் என்ன அர்த்தம்?
3
கேரளத்தின் அறுவடைத் திருவிழாவான பெரும் பண்டிகை செப்டம்பர் மாதம் வரும். இந்தப் பண்டிகையின்போது ‘சத்யா’ எனப்படும் 50 வகை உணவுப் பண்டங்களை உண்பது வழக்கம். ‘புலிக்களி’ எனும் புலிவேட நடன நிகழ்ச்சியும் இதையொட்டி நடக்கும். அறுவடைத் திருவிழாவாக இது கொண்டாடப்பட ஆரம்பித்தாலும், காலப்போக்கில் வேறு புராணக் கதைகள் பண்டிகையின் அடிப்படையை மாற்றிவிட்டன. இந்தப் பண்டிகையின் பெயர் என்ன?
4
ஆந்திரத்தில் நான்கு நாட்களுக்கு அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையைப் போலவே முதல் நாள் போகி, இரண்டாம் நாள் சங்கராந்தி, மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கலைப் போன்ற கனுமு, நான்காம் நாள் காணும் பொங்கலைப் போன்ற முக்கணுமா கொண்டாடப்படுகிறது. இந்த நான்கு நாள் கொண்டாட்டத்துக்கான பொதுப் பெயர் என்ன?
5
கர்நாடகம், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் மகர சங்கராந்தியின்போது செய்யப்படும் மரபார்ந்த இனிப்பு எந்த மூலப்பொருளை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படுகிறது? மகாராஷ்டிரத்தில் இந்த இனிப்பைப் பல்வேறு வண்ணங்களில் செய்து பரிமாறிக்கொள்வதும் உண்டு.
6
சுக்கி ஹப்பா எனப்படும் அறுவடைத் திருவிழாவின்போது ‘இனிப்பைச் சாப்பிட வேண்டும். நல்லதே பேச வேண்டும்’ என்னும் பழமொழி கூறப்படும் மாநிலம் எது?
7
குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தானின் சில பகுதிகளில் உத்தராயண அறுவடைத் திருவிழா மூன்று நாட்களுக்கு நடைபெறும். இதன் ஒரு பகுதியாக பொரி உருண்டை, கிச்சடி செய்து மாடிகளுக்கு எடுத்துச் சென்று சாப்பிடுவது வழக்கம். அப்போது எல்லோரும் வயது வேறுபாடின்றிப் பங்கேற்கும் விளையாட்டு எது?
8
பஞ்சாப் அறுவடைத் திருவிழாவின்போது வயல்களில் சொக்கப்பனைபோல் தீ மூட்டி சுற்றி நின்று ஆடுவார்கள். நெருப்புக் கடவுளை வணங்கி, நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார்கள். இனிப்பு, கரும்பு, அரிசி உள்ளிட்ட தானியங்கள் போன்றவற்றைத் தீயில் போடுவதும் உண்டு. புகழ்பெற்ற பாங்க்ரா நடனம் இப்பண்டிகையின் முக்கிய அம்சம். பஞ்சாப் தவிர ஹரியாணா, இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையின் பெயர் என்ன?
9
அசாம் மாநிலத்தில் பிஹு என்ற அறுவடைத் திருவிழா ஆண்டில் மூன்று முறை கொண்டாடப்படுகிறது. இதில் ஆற்றங்கரையை ஒட்டிய வயல் பகுதியில் வைக்கோலில் தற்காலிகக் கூரை வேய்ந்து, பக்கத்தில் நெருப்பு மூட்டி கூட்டாகச் சமைத்துச் சாப்பிடுவார்கள். இரவு முழுவதும் பாடி மகிழ்ந்துவிட்டு, அடுத்த நாள் காலையில் நெருப்புக் கடவுளை வணங்கும் பண்டிகையின் பெயர் என்ன? இது ஜனவரி மாதம் வரும்.
10
நாடு முழுவதும் அறுவடைத் திருவிழா பொதுப் பெயரில் அறியப்பட்டாலும், உத்தரப் பிரதேசத்தில் மாறுபட்ட பெயரில் அறியப்படுகிறது. இந்தப் பண்டிகையின்போது கறுப்பு உளுந்து-அரிசி, எள், வெல்லப்பாகு தானம்செய்வது வழக்கமாக இருக்கிறது. அறுவடைத் திருவிழாவின் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேசத்தின் முக்கியப் பகுதிகளில் பொங்கலைப் போன்று குறிப்பிட்ட உணவு வகை பரவலாகச் செய்யப்படுகிறது. சமீபத்தில் தேசிய உணவு சர்ச்சையில் சிக்கிய உணவு வகையின் பெயரில்தான் இந்த விழாவும் அறியப்படுகிறது. அந்தப் பெயர் என்ன?
விடைகள்
1. அது மட்டுமே சூரிய நாட்காட்டி அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.
2. ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்குச் சூரியன் நகர்வது
3. ஓணம்
4. பெத்த பண்டுக (பெரும் பொங்கல்)
5. எள்ளும் வெல்லமும் கலந்த இனிப்பு அல்லது எள்ளு பெல்லா (எள்ளுருண்டை)
6. கர்நாடகம்
7. பட்டம் விடும் திருவிழா
8. லோஹ்ரி
9. போகாலி பிஹு
10. கிச்சடி பர்வ் அல்லது கிச்சேரி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago