கேட்டாரே ஒரு கேள்வி
He did not go because he was ill – இந்த வாக்கியத்துக்கு ஒரே ஒரு அர்த்தம்தானா?
*********
“Look before you leap என்பதன் பொருள் என்ன?”
Leap வருடம் என்பது வேறு இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் leap வேறு. பிப்ரவரி மாதத்தில் மேலும் ஒரு நாள் அந்த ஆண்டில் இருக்கும். Leap என்பது verb ஆகப் பயன்படுத்தப்படும்போது அதன் பொருள் குதித்தல் அல்லது பாய்தல்.
*********
“Hamlet என்பது ஒரு நபரின் பெயரா அல்லது ஒரு இடத்தின் பெயரா?”
டென்மார்க்கின் இளவரசனாக விளங்கியவன் Hamlet. ஷேக்ஸ்பியரின் ஒரு துன்பியல் நாடகத்தின் கதாநாயகன். இந்த நாடகத்தில் Hamlet பேசும் “To be or not to be, that is the question” என்பது பிரபலமான ஒரு மேற்கோள்.
Hamlet என்பது ஒரு மிகச் சிறிய கிராமத்தையும் குறிக்கிறது - அதாவது மாதாகோயில் இல்லாத ஐரோப்பிய கிராமம்.
மற்றபடி நாம் பாதுகாப்புக்காகத் தலையில் அணிந்துகொள்வது Helmet என்பதும் முட்டை ஆம்லட் என்கிறோமே அந்த ஆம்லட்டின் ஸ்பெல்லிங் Omelette என்பதும் உங்களுக்குத் தெரியும்தானே.
english 2jpg100
கேட்டாரே ஒரு கேள்வி பகுதியில் இடம்பெற்ற வாக்கியத்தை இருவிதமாகப் பொருள்கொள்ளலாம்.
1. உடல்நிலை சரியில்லாததால் அவன் போகவில்லை.
2. அவன் போகாததற்கு உடல்நிலை சரியில்லாதது காரணமல்ல. (அதாவது வேறு ஏதோ காரணம் இருக்கிறது)
முதல் அர்த்தத்தை நீங்கள் உணர்த்த விரும்பினால் வாக்கியத்தின் நடுவே ஒரு கால் புள்ளியைச் சேருங்கள். He did not go, because he was ill. எனக்கென்னவோ இதைவிட Because he was ill, he did not go என்று எழுதிவிடலாம் எனத் தோன்றுகிறது. இரண்டாவது பொருள் வரும்படி வாக்கியத்தை அமைக்க வேண்டுமென்றால் It was not because he was ill that he did not go எனலாம்.
*********
Affect – Effect
Affect என்றால் பாதிப்பது என்று சொல்லலாம். The building was badly affected by the fire. The disease affects pregnant woman. The new rates will affect all consumers.
Effect என்றால் ஒன்றின் விளைவு.
I am suffering from the effects of too little sleep. The anaesthetic took effect after 10 minutes. Effect என்பது noun, verb ஆகிய இருவிதங்களிலும் பயன்படும். The effect was nil. This step effected in his promotion.
Affect என்பது verb ஆகத்தான் பயன்படும். Bad habits will affect your writing.
*********
“Humour me” என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். அவருடைய நண்பர் அடிக்கடி இந்த வாக்கியத்தைக் கூறுகிறாராம்.
நீங்கள் கூறுவது சரியில்லை என்று எதிராளிக்குப் படுகிறது. ஒருவேளை, நீங்கள் கூறுவது முட்டாள்தனமானது என்றுகூட அவருக்குப் பட்டிருக்கலாம். இந்த நிலையில் “Humour me” என்று ஒருவர் கூறினால் “உனக்கு எப்படித் தோன்றினாலும் நான் சொல்வதை ஒத்துக்கொள்” என்று அர்த்தம்.
“Come on. Let us have a ride in my new car”.
“No thanks. I am not interested”
“Come on ... Humour me”!
சிப்ஸ்
Already என்றும், all ready என்றும் இரு வார்த்தைகள் உள்ளனவா?
Already என்றால் ஏற்கெனவே. All ready என்றால் தயார் நிலை. It is already late. Do not worry. Here everything is all ready.
Couch என்றால் என்ன?
சோஃபா. (அமெரிக்க ஆங்கிலம்).
Preventative என்ற ஒரு வார்த்தையைச் சமீபத்தில் படிக்க நேரிட்டது. இது சரியா?
Preventive என்பதைச் சிலர் preventative என்றும் குறிப்பிடுகிறார்கள்.
போட்டியில் கேட்டுவிட்டால்?
Krishnan tries very hard to keep up with his ________ neighbours.
a) Illiterate
b) Lovely
c) Rich
d) Nearby
e) Etiquette
வாக்கியத்தைப் படிக்கும்போது தனது அண்டை வீட்டாருடன் ஏதோ ஒரு விஷயத்தில் சமமாக இருப்பதற்காக கிருஷ்ணன் மிகுந்த முயற்சி எடுப்பதாகத் தெரியவருகிறது.
அவர்கள்போல படிப்பறிவில்லாதவராக இருக்க யாரும் முயற்சிக்க மாட்டார்கள். எனவே illiterate என்பது தவறான விடை.
Neighbours என்பதே அருகில் வசிப்பவர்களைக் குறிக்கும் வார்த்தைதான். எனவே, அதற்கு முன் nearby என்ற வார்த்தையைக் குறிப்பிடுவது அநாவசியம்.
Etiquette என்பது நன்னடத்தையைக் குறிக்கிறது. Neighbours with etiquette என்று வரலாமே தவிர, etiquette neighbours என்று வராது.
மீதமிருக்கும் வார்த்தைகளான lovely, rich என்பதில் rich அதிகம் பொருந்துகிறது.
அண்டை வீட்டுக்காரர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அளவுக்குப் பொருளாதார நிலையில் உயர்வதற்காகக் கிருஷ்ணன் மிகுந்த முயற்சிகளை எடுத்துக்கொள்கிறார் என்பது பொருத்தமாக இருக்கிறது.
Krishnan tries very hard to keep up with his rich neighbours.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago