திருவண்ணாமலையைக் கதைக் களமாகக் கொண்டு இதுவரை படங்கள் எதுவும் வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக, அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையை ‘பூங்கா நகரம்’ படத்தின் மூலம் பிரதிபலிக்க இருப்பதாகக் கூறுகிறார் அறிமுக இயக்குநர் ஈ.கே.முருகன். இவர் இயக்குநர் ஏ.வெங்கடேஷின் உதவியாளர். இப்படத்தில் தமன் குமார் - ஸ்வேதா டோரத்தி நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள்.
மேலும் பிளாக் பாண்டி உட்படப் பலர் நடித்துவரும் இப்படத்தின் முதல் தோற்றத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்டார். அக் ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரித்து வரும் படத்துக்கு பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்ய, ஹமரா சி.வி. இசையமைக்கிறார்.
பட பூஜைக்கு வந்த ராஜா! - இசைஞானி இளையராஜா, தவிர்க்க முடியாதது என்று தெரிந்தால் மட்டுமே திரைப்பட விழாக்களில் கலந்துகொள்வர். ‘விடுதலை’ படத்துக்கு அவர் வழங்கிய இசையில் இன்னும் லயித்திருக்கும் அவரது ரசிகர்கள், அப்படத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் அவர் என்ன மாயம் செய்திருப்பாரோ என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தனது மகன் கார்த்திக்ராஜா இசையமைக்கும் ‘சாரா’ என்கிற படத்தின் தொடக்க நிகழ்வுக்கு வருகை தந்து படக்குழுவினரை வாழ்த்தியிருக்கிறார் ராஜா. ரஞ்சித் கண்ணா இயக்கும் த்ரில்லர் படமான இதில், சாக்ஷி அகர்வால் முதன்மைக் கதாபாத்திரத்தில் முழுநீள ஆக்ஷன் அவதாரில் வருகிறார். அவருடன் விஜய் விஷ்வா, யோகிபாபு, ரோபோ சங்கர், பொன்வண்ணன், அம்பிகா, ரேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
9 கதாபாத்திரங்கள் 8 பாடல்கள்: தரமான திரை அனுபவத்தைக் கொடுக்கும் கதைக் களங்கள் மட்டுமே புதுமுக நடிகர்களுக்குச் சிறந்த அறிமுகமாக அமைகின்றன. அந்த வரிசையில் ராகுல் ஏ.கிருஷ்ணா இயக்கியிருக்கும் ‘ஐமா’ என்கிற படத்தின் ட்ரைலரைப் பார்த்து, ‘2021இல் வெளியான ‘கடைசீல பிரியாணி’ படம்போல் புது அனுபவம் தரப்போகிறீர்களா?’ எனச் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பல குறும்படங்களை இயக்கியிருக்கும் இப்படத்தின் இயக்குநர், ‘பல தடைகளுக்குப் பிறகு இக்கதையைப் படமாக்கியிருக்கிறேன்’ என்கிறார். தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் யூனஸ் நாயகனாகவும் எல்வின் ஜூலியட் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
புனித பைபிளின் தாக்கத்தில் 9 கதாபாத்திரங்களை இக்கால வாழ்க்கைக்கு பொருந்தும்படி உருவாக்கி சர்வைவல் த்ரில்லராக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். கே.ஆர். ராகுல் அறிமுக இசையில் 8 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 mins ago
சிறப்புப் பக்கம்
28 mins ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago