1. சமீபத்தில் இந்த நாட்டின் ஒரு பகுதி தன்னை சுயாட்சிப் பகுதியாக அறிவித்துக்கொண்டதை இந்த நாடு மூர்க்கமாக நசுக்கியது. அதேநேரம் உலகின் பன்மைத்தன்மை நிறைந்த இந்த நாட்டில் அருமையான கடற்கரைகள், பாஸ்தா-மகரோனி போன்ற உணவு வகைகள், கட்டிடப் பொக்கிஷங்கள் நிறைந்திருக்கின்றன. பார்சிலோனா, மாட்ரிட், வாலென்சியா போன்ற நகரங்கள் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புபவை. இந்த நாட்டின் பெயர் என்ன?
2. உலகின் மிகப் பிரபல ஊர் ஒரு நாட்டின் தலைநகரம். இந்த ஊருக்கு ஓராண்டில் 4.5 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கிறார்கள். இந்த நகரின் மிகப் பெரிய கோபுரம் பயணிகளை ஈர்த்துவருகிறது. இந்த ஊரில் உள்ள நாட்டர் டாம் தேவாலயம் புகழ்பெற்றது. உலகின் மிகச் சிறந்த அருங்காட்சியகங்களைக் கொண்ட இந்த ஊர் எது? எந்த நாட்டில் உள்ளது?
3. இந்த நாட்டிலுள்ள சாண்டோரினி பகுதிக் கடற்கரையில் பல்வேறு நிறங்களில் மணல் கிடைக்கிறது. பண்டை காலத்திலிருந்தே உலகெங்கும் அறியப்பட்ட நாடு. ‘மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில்’ என்று அறியப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய இந்த நாடு எது?
4. உலகின் மிக அழகிய நாடுகளுள் ஒன்று. ஏராளமான பண்பாட்டுப் பொக்கிஷங்களையும் அற்புதமான நிலக்காட்சிகளையும் கொண்டது இந்த நாடு. நெடிய பாரம்பரியம் கொண்ட இந்நாட்டின் தலைநகர் பலரும் அறிந்த ஒன்றுதான். அதேநேரம் வெனிஸ், ஃபிளாரன்ஸ் நகரங்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவையே. இது எந்த நாடு?
5. இந்த நாட்டின் அலங்காரக் கட்டிடங்களும் தேவதைக் கதைகளும் உலகப் பிரபலம். இதன் தலைநகரைப் பிரித்த சுவர் இடிக்கப்பட்ட நிகழ்வு வரலாற்றுத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. ஃபிரான்க்பர்ட், மியூனிக் போன்ற தனித்தன்மை கொண்ட நகரங்களைக் கொண்ட இந்த நாட்டின் பெயர் என்ன?
6. உலகின் மிக அழகான நகரங்களைக் கொண்ட இந்நாட்டில், உலகின் மிகப் பெரிய மழைக்காடுகள் அமைந்துள்ளன. இந்த நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவில் ஈஸ்டர் தவக் காலத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படும் ரியோ கார்னிவல் உலகப் பிரசித்தம். சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் பரவலாக்கிய ரியோவில் 1992-ல் நடைபெற்ற பூமி மாநாடும் புகழ்பெற்ற ஒன்றே. கடைசியாக ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நகரமும் ரியோதான். இந்த நகரம் அமைந்துள்ள நாடு எது?
7. ஆதிக்கத்துக்கும் ஆக்கிரமிப்புக்கும் பெயர் போன இந்த நாட்டில் இயற்கை அதிசயங்களும் நிறையவே இருக்கின்றன. உலகின் மிகவும் அகலமான அருவிகளில் ஒன்றும் கிராண்ட் கேன்யன் என்ற பிரம்மாண்டப் பாறைகள் நிறைந்த பகுதியும் இந்த நாட்டின் இயற்கை அடையாளங்களில் சில. இந்த நாட்டின் பெயர் என்ன?
8. விநோத உயிரினங்கள், பல்வேறு சரணாலயங்கள், பல்வேறு வகைப்பட்ட நிலக்காட்சிகள் ஆகியவற்றுடன் உலகின் இயற்கை அதிசயமாகக் கருதப்படும் கிரேட் பாரியர் ரீஃப் எனப்படும் மிகப் பெரிய பவழத்திட்டுத் தொகுப்பைக் கொண்ட நாடு எது?
9. உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட் அமைந்துள்ள நாடு. இந்த நாட்டில் இந்தச் சிகரத்துக்கு சாகர்மாதா (கடலன்னை) என்று பெயர். இமயமலைத் தொடரே ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததுதான். இந்தச் சிகரத்தை முதலில் தொட்ட இருவரில் ஒருவர் இந்த நாட்டைச் சேர்ந்தவர். இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நாடு, அடிக்கடி நிலநடுக்கங்களைச் சந்திக்கக்கூடியதும்கூட. இந்த நாட்டின் பெயர் என்ன?
10. உலகின் மிக உயரமான மலைச் சிகரங்களைக் கொண்ட மலைத் தொடர், ‘மணல் குன்றுகள்’ என்ற பெயரைப் பிரதிபலிக்கும் உலகின் 17-வது மிகப் பெரிய பாலைவனம், 7,500 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரை எனப் பல்வேறுபட்ட நிலப் பகுதிகளைக் கொண்ட நாட்டின் பெயர் என்ன?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago