இயக்குநரின் குரல்: ஒரு வீட்டின் கதை!

By ஆர்.சி.ஜெயந்தன்

பணிச் சுமையால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, மது, போதைப் பழக்கத்தை நாடுவது ஒருபோதும் தீர்வல்ல என்கிற விழிப்புணர்வை முரண்பாடான கதைக் களத்தின் வழியாகச் சொன்ன படம் ‘வெப்’. நட்டி நடராஜ் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான அந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘7ஜி’ என்கிற தனது இரண்டாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஹாரூண். படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

‘வெப்’ படத்தின் ஐடியா சிறப்பாக இருந்தாலும் அதற்கு வந்த விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்? - நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கவில்லை. குறும்படம்கூட எடுத்ததில்லை. ஆனால், ‘பிக் ஷன், நான் - பிக் ஷன்’ என்று நிறைய வாசிப்பேன். அதுவே எனக்கு நல்லக் கதை அறிவைக் கொடுத்தது. அதை மூலதனமாக வைத்தே எனது திரைக்கதைகளை எழுதினேன். ‘வெப்’ கதையைக் கேட்டதும் நட்டி நடராஜ், ‘இப்போது சொன்னதுபோலவே படத்தை எடுத்துவிடுங்கள்’ என்றார்.

ஆனால், எனக்குக் கிடைத்த பட்ஜெட்டுக்குள் கையைக் கட்டிகொண்டு, திட்டமிட்ட பல காட்சிகளைச் சுருக்கிச் சுருக்கி எடுக்க வேண்டிய நிலை. இது எல்லா முதல் பட இயக்குநர்களுக்கும் ஏற்படக் கூடிய சிக்கல்தான். முதல் படத்தில் கற்ற பாடத்தால், இரண்டாவது படத்தை நண்பர்களிடம் நிதி திரட்டி, ‘ட்ரீம் அவுஸ்’ என்கிற எனது சொந்த பேனரில் படத்தைத் தயாரித்திருக்கிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் பிடிக்கும்.

ஹாரூண்

ஏற்கெனவே ‘7ஜி ரெயின்போ காலனி’ என்கிற தலைப்பில் படம் உள்ளது. நீங்கள் ‘7ஜி’ என்று வைத்திருக்கிறீர்கள். அதில் நடித்திருந்த சோனியா அகர்வால் இருந்தார். இதிலும் இருக்கிறார். சர்ச்சையைக் கிளப்புகிறீர்களா?

சத்தியமாக இல்லை. சென்னை, வேளச்சேரியில் ஒரு பத்துமாடி அடுக்ககத்தில் படப்பிடிப்புக்கு அபார்ட்மெண்ட் பார்த்தோம். ஏனென்றால் இதுவொரு வீட்டின் கதை. அங்கே ஏழாவது தளத்தில் ‘7ஜி’ கதவு எண் கொண்ட அபார்ட்மெண்ட் தான் கிடைத்தது. கதைக் களத்துக்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடிய ‘பர்னிஷ்டு’ ஆகவும் ‘இண்டீரியர் டிசைன்’ செய்யப்பட்டும் இருந்தது. 30 நாளில் படப்பிடிப்பு நடத்தினேன்.

படத்துக்கு முன்னர் ஒரு வீட்டின் பெயரைத் தலைப்பாக வைத்திருந்தோம். கதவில் ‘7ஜி’ என்பது அழகான ஸ்டீல் எழுத்தாக ‘ரிச்’ஆக இருந்தது. அதையே தலைப்பாக வைத்துவிடலாம் என்று முடிவு செய்து தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி கேட்டேன். முதலில் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத் தயாரிப்பு நிறுவனத் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பிறகு ஓகே சொல்லிவிட்டார்கள்.

என்ன கதை, யாரெல்லாம் நடிக்கிறார்கள்? - சோனியா அகர்வால் ஒரு சிங்கிள் மதர். தனது 10 வயது மகனுடன் அபார்ட்மெண்டில் வசிக்கிறார். அதே அபார்ட்மெண்டுக்கு ஸ்மிருதி வெங்கட் தனது கணவர் ரோஷனுடன் (பாபநாசம் புகழ்) குடி வருகிறார். சோனியா அகர்வால் அவரது மகனுடன் இந்த இளம் தம்பதி அன்பாகப் பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்தத் தாயும் மகனும் உண்மையில் மனிதர்கள்தானா என்கிற சந்தேகம் ஸ்மிருதி வெங்கட்டுக்கு வருகிறது.

அதன்பிறகு என்ன நடந்தது என்பது கதை. வழக்கமான ஹாரர் த்ரில்லராக இல்லாமல், இந்தப் படத்திலும் ஒரு சமூகப் பிரச்சினையை உள்ளே வைத்திருக்கிறேன். முழுமையான திரை அனுபவத்துக்கு நான் கேரண்டி. இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளதுடன் படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்