கேள்வி நேரம் 12: அங்கீகாரம் பெற்ற நம் உரிமைகள்

By ஆதி வள்ளியப்பன்

1. சர்வதேச மனித உரிமை சாசனம் 1948 டிசம்பர் 10-ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதையொட்டியே டிசம்பர் 10 உலக மனித உரிமை நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊர் எது? இந்த ஊர் ஐரோப்பிய நவீனத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

2. “சர்வதேச மனித உரிமை என்பது சிறிய இடங்களில், வீட்டுக்கு அருகே, நமக்கு மிக நெருக்கமான இடத்தில் சிறிய அளவில் தொடங்குகிறது. அதை உலகின் எந்த வரைபடத்திலும் பார்க்க முடியாது” என்று கூறிய நபர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முதல் தலைவராகவும் இருந்தவர். அமெரிக்காவில் நீண்ட நாட்களுக்கு முதல் குடிமகளாக – அதிபரின் மனைவியாக இருந்தவரும்கூட. அவர் பெயர் என்ன?

3. ஐ.நா.வின் துணை அமைப்புகளான உலக சுகாதார நிறுவனம், சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம், மட்டுமின்றி செஞ்சிலுவைச் சங்கம் எனப் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் தலைமையகம் இடம்பெற்றுள்ள நகரம் இது. ஸ்விட்சர்லாந்தின் மக்கள்தொகை அதிகமுள்ள இரண்டாவது நகரமான இங்கேதான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அமைந்துள்ளது. அடிக்கடி செய்திகளில் அடிபடும் இந்த நகரத்தின் பெயர் என்ன?

4. பண்டைய பெர்சியாவின் (ஈரான்) பேரரசர் சைரஸ், பாபிலோனியா நகரத்தைக் கைப்பற்றிய பிறகு அனைத்து அடிமைகளையும் விடுதலை செய்தார். அனைத்து இனத்தினரும் சமமாகவும் அனைத்து மதத்தினரும் சுதந்திரமாகவும் இருக்க உரிமையுண்டு என்று அவர் ஆணையிட்டார். இந்த ஆணை சுட்ட களிமண் உருளையில் கி.மு. 539 பதிவுசெய்து வைக்கப்பட்டது. இந்த ஆணை பிற்காலத்தில் என்னவாக மதிக்கப்பட ஆரம்பித்தது?

5. கேட்பதற்கு ஆச்சரியமாகவும் நகைப்புக்கிடமாகவும் இருந்தாலும் அமெரிக்க மாகாணம் ஒன்றில் திருமணமான பெண்கள் செயற்கைப் பல்லைப் பொருத்திக்கொள்வதற்குக் கணவரிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற வேண்டுமெனச் சட்டம் வைத்துள்ள மாகாணம் எது?

6. எழுத்து மூலமாகவும் பேச்சு மூலமாகவும் தங்கள் கருத்தை வெளிப்படுத்த இந்தியக் குடிமக்களுக்கு உரிமையுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி 3 , பிரிவு 19 (1) அ-வின்படி இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதே சட்டத்தின்கீழ் இன்னொரு பிரிவுக்கும் கருத்தை வெளியிடச் சுதந்திரம் இருக்கிறது. அது எந்தத் தொழில் பிரிவு?

7. 1871-ல் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் வடஇந்திய சமூகங்களைக் குறிவைத்து ஒரு சட்டத்தை உருவாக்கினார்கள். இந்தச் சட்டத்தின்கீழ் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு சாதிரீதியாகப் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பெயரில் தமிழில் சினிமா எடுப்பது குறித்துப் பேசப்பட்டுவருகிறது. அந்தச் சட்டத்தின் பெயர் என்ன?

8. சர்வதேசச் சட்டப்படி உலகெங்கும் திட்டவட்டமாகத் தடை செய்யப்பட்டுள்ள சமூக அவலம் என்ன? அதேநேரம் இன்றைக்கும் இது பல்வேறு வடிவங்களில் உலகில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

9. உலகப் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்பின் நிறுவனரான பீட்டர் பெனென்சன், அந்த அமைப்பின் சின்னத்தைப் பற்றிக் கூறுகையில், ‘இந்தச் சின்னத்தில் இடம்பெற்றுள்ள மெழுகுவர்த்தி நமக்கு ஒளியூட்டுவதற்காக எரியவில்லை. சிறைக்குள், சிறைக்குச் செல்லும்போது கொல்லப்பட்டவர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், ‘காணாமல் போனவர்கள்‘ என நாம் மீட்கத் தவறியவர்களுக்காகவே இந்த மெழுகுவர்த்தி சுடர் விடுகிறது” என்றார். இந்தத் தன்னார்வ அமைப்பு 1977-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றிருக்கிறது. அந்த அமைப்பின் பெயர் என்ன?

10. டிசம்பர் 10-ம் தேதி உலக மனித உரிமை நாளாக அனுசரிக்கப்படும் அதேநேரம், அதே நாளில் மற்றொரு முக்கிய நிகழ்வும் 1901-லிருந்து ஆண்டுதோறும் நிகழ்ந்துவருகிறது. அது என்ன நிகழ்ச்சி?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்