திண்னைப் பேச்சு 10: அப்பாவின் கலைஞர்!

By தஞ்சாவூர்க் கவிராயர்

அப்பா ஒரு விசித்திரர். அவருக்குக் கலைஞரையும் பிடிக்கும் காந்தியையும் பிடிக்கும். அவர் தமிழாசிரியர். அந்தக் காலத்தில் தமிழாசிரியர்கள் ஒன்று தி.மு.க.காரர்களாக இருந்தார்கள். இல்லாவிட்டால் தி.மு.க. அனுதாபிகளாக இருந்தார்கள். “இடைநிலை ஆசிரியர்களாக இருந்த எங்களைத் தேர்வு எழுதி தமிழாசிரியராக வழிசெய்தவர் கலைஞர்” என்பார் அடிக்கடி. எனக்குப் புரியாது. ஆனால், அவர் கலைஞர் மீது காட்டிய நன்றி உணர்வு என்னைக் கலைஞர் மீது நாட்டம்கொள்ள வைத்தது.

கலைஞர் டீக்கடை: அப்பாவை வழியில் பார்க்கிறவர்கள், “என்ன வாத்யாரைய்யா, இன்னிக்குத் திலகர் திடல்ல மூனாகானா மீட்டிங் இருக்கே போகலையா?” என்பார்கள். “போகணும்… போகணும்…” என்பார் சிரித்தபடி. அப்பா கையைப் பிடித்துக்கொண்டு நானும் கிளம்பிவிடுவேன். நேராகக் குதிரைக்கட்டித் தெருமுனையில் இருக்கும் கலைஞர் டீக்கடைக்குப் போவோம். இந்தக் கடைக்காரர் செல்லப்பா தீவிரமான தி.மு.க. விசுவாசி. கடையைத் திறந்து டபரா, டம்ளர் எல்லாம் கழுவிவைப்பார். பாய்லரைத் துடைப்பார். ஆனால், பற்றவைக்க மாட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE