கேள்வி நேரம் 11: சாதித்த பெண்கள்

By ஆதி வள்ளியப்பன்

1. டெல்லி சுல்தானேட் எனப்பட்ட சுல்தான் வம்சத்தில் முதலும் கடைசியுமான பெண் ஆட்சியாளர் பெயர் என்ன? வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் இந்தியாவில் அரியணை ஏறிய முதல் பெண் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.

28CHGOW_VIJAYALAKSHMI

2. இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளியை 1848-ல் அமைத்தவர். நாட்டின் முதல் ஆசிரியையும் அவரே. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவரும் இவருடைய கணவரும் சமூகநீதியில் பெரும் புரட்சி நிகழ்த்தியவர்கள்.

3. இந்தியாவில் முதன்முதலில் விமானத்தை ஓட்டிய பெண் யார்? அவருடைய கணவர் குடும்பத்தினரில் 9 பேர் விமானிகளாக இருந்ததுடன், இவரையும் விமானி ஆக ஊக்குவித்தனர். ஆயிரம் மணி நேரம் வானில் பறந்ததன் காரணமாக 1936-ல், தன்னுடைய 21 வயதில் விமானிக்கான உரிமத்தை அவர் பெற்றார்.

4. நேருவின் சகோதரியான விஜயலட்சுமி பண்டிட், ரஷ்யாவுக்கான முதல் இந்தியத் தூதராகச் செயல்பட்டவர். 1953-ல் ஐ.நா. பொதுச்சபையின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண், முதல் ஆசியர் என்னும் பெருமைகளைப் பெற்றார். அதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியாவில் ஓர் முக்கியப் பதவியை முதன்முதலாக அவர் வகித்தார். அது என்ன?

5. வங்க எழுத்தாளரான அவர், 1976-ல் நாட்டிலேயே உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற முதல் பெண். கவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர் எனப் பல்வேறு படைப்புத் திறன்களைப் பெற்ற அவருடைய பெயர் என்ன?

6. விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பெண் கவர்னர் என்னும் பெருமையைப் பெற்றவர் யார்? அப்போது ‘யுனைடட் பிராவின்சஸ்’ என்றழைக்கப்பட்ட உத்தரபிரதேசத்துக்கு நாடு விடுதலை பெற்றதில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அவர் கவர்னராக இருந்துள்ளார். கவிஞராக அறியப்பட்டவர்.

7. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் (நாடாளுமன்றம்) கூட்டம் 1947 ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு ‘விதியுடன் ஒரு போராட்டம்’ என்னும் புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். அந்த உரைக்கு முன்னதாக ‘வந்தேமாதரம்’ பாடலைப் பாடியவர் இந்தப் பெண். பின்னால் இந்திய மாநிலம் ஒன்றின் முதல் பெண் முதல்வரான அவருடைய பெயர் என்ன?

28chgow_Ashapurna deviright

8. இந்தியாவிலேயே முதன்முதலாகக் கேரள உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக அன்னா சாண்டி 1959-ல் நியமிக்கப்பட்டார். அதற்கு 32 ஆண்டுகள் கழித்துத்தான் இந்திய உயர் நீதிமன்றம் ஒன்றின் தலைமை நீதிபதியாக ஒரு பெண் உயர முடிந்தது. அப்படி உயர்ந்தவர் யார், எந்த நீதிமன்றம்?

9. இந்திய உச்ச நீதிமன்றத்தில் 1989-ல் ஒரு பெண் முதன்முறையாக நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.  தமிழகத்தின் ஆளுநராக 1997 முதல் 2001 வரை அவர் பதவியும் வகித்துள்ளார். கேரளத்தைச் சேர்ந்த அவர் பெயர் என்ன?

10. மாடலும் விமானப் பணிப்பெண்ணுமான நீர்ஜா பானோட், 1986-ல் தீவிரவாதிகளால் பாகிஸ்தானுக்குக் கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் தப்பிக்க உதவியபோது கொல்லப்பட்டவர்.

அவர் இறந்த பிறகு இந்தியாவின் மிக உயரிய வீரதீர விருதைப் பெற்ற முதல் பெண், இளம் வயதுக்காரர் ஆகிய சிறப்புகளைப் பெற்றார். அவர் பெற்ற விருதின் பெயர் என்ன?

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்