அ
ரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச டியூஷன் சென்டர்களை நடத்துவதோடு அந்தக் குழந்தைகளுக்குக் கலையிலும் விளையாட்டிலும் கணினி போன்ற பல திறன் பயிற்சிகளையும் அளிக்கும் சேவை பாராட்டுக்குரியது. அத்தகைய சிறப்பான பணியில், கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுவருகிறது தென்காசிக்குப் பக்கத்திலிருக்கும் ஆய்க்குடி ஸ்ரீசுப்ரமண்யா அறக்கட்டளை. இதன் நிறுவனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அன்பான அரவணைப்பின் கீழ் இரண்டு குழந்தைகளோடு தொடங்கப்பட்ட கல்விச் சேவை இன்றைக்கு 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குக் கிடைத்துவருகிறது.
பீடிசுற்றுவதிலிருந்து பீடுநடை
ஆய்க்குடியைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் முக்கியமான குடிசைத் தொழில் பீடிசுற்றுதல். இங்கு உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் சிதறுதல், இடைநிற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. தங்களுடைய குழந்தைகளை ஏறக்குறைய 10, 12 மணி நேரங்களுக்குப் பீடிசுற்றும் பணியில் ஈடுபடுத்திய குடும்பங்களும் இங்கு உண்டு.
அப்படிப்பட்ட குடும்பங்களிலிருந்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளித்து படிப்பிலும் பிற கலை வடிவங்களிலும் ஆர்வம் உண்டாக்கியது ஸ்ரீ சுப்ரமண்யா அறக்கட்டளை. அதுமட்டுமல்லாமல், 10-ம் வகுப்புத் தேர்வில் 450, 460 மதிப்பெண் வாங்கவைத்து, பீடுநடை போடவைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுசெயல்படுகிறது இவ்வமைப்பு.
தொடங்கிய இருவர்
“மாரியம்மாள், சுகந்தா என்னிடம் பாட்டு கற்றுக்கொள்ள வந்தபோது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்கள். பாட்டு தவிரப் பாடங்களில் அவர்களுக்கு இருந்த சந்தேகங்களையும் தீர்த்துவைத்தேன். அடுத்து, அந்தக் குழந்தைகள் அவர்களோடு படிக்கும் மற்ற குழந்தைகளையும் அழைத்துவந்தனர். ஏறக்குறைய 25 குழந்தைகள்வரை சேர்ந்துவிட்டனர். வீட்டில் இடம் போதவில்லை. அத்தோடு, குழந்தைகள் அதிகமாகும்போது சில பொறுப்புகளும் சேர்ந்தன. அதனால், ஸ்ரீசுப்ரமண்யா அறக்கட்டளையை 2006-ல் தொடங்கினோம்.
சில நாட்களில் 60 குழந்தைகள்வரை சேர்ந்துவிட்டனர். கிராமத்தில் இருக்கும் பலரும் எங்களுக்கு உதவினர். ஒருவர் தன் வீட்டு கார் ஷெட்டைக் கொடுத்தார். இன்னும் சிலர் வீட்டின் மொட்டை மாடியை ஒதுக்கிக் கொடுத்தனர். இப்படி நான்கு ஐந்து இடங்களில் இலவசமாகக் குழந்தைகளுக்குத் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடம் கற்பிக்கும் சேவையைத் தொடங்கினோம். 2 முதல் 11-ம் வகுப்புவரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை நாங்கள் அனுமதிக்கிறோம்.
வளரிளம் பருவத்து மாணவர்கள் தீய பழக்கங்களுக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்குப் பல கலைகளையும் பயிற்சிகளையும் அளிக்கிறோம். இதன் மூலம் அவர்களுடைய தனித் திறன் வளர உதவுகிறோம்” என்கிறார் லக்ஷ்மி.
img249 லஷ்மி ராமகிருஷ்ணன் கைகொடுக்கும் கலைகள்
குழந்தைகளுக்குப் படிப்பு தவிர வீணை, வயலின், கீபோர்ட், வாய்ப்பாட்டு, பரத நாட்டியம், கணினிப் பயிற்சி, தையல் பயிற்சி, கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுத்தருவது, யோகா, கராத்தே, சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பேணுவதற்கான பயிற்சி, நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களைப் படிக்கும் பயிற்சி, தன்னம்பிக்கைப் பயிற்சிகள், கல்விசார்ந்த சுற்றுலாக்கள் அழைத்துச் செல்லுதல், செஸ், கேரம்போர்ட் போன்ற உள் விளையாட்டுகளிலும் கால்பந்தாட்டம் போன்ற மைதானங்களில் ஆடப்படும் விளையாட்டுகளிலும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளித்து மாணவர்களின் திறமைகளை வளர்க்கிறார்கள்.
இப்படிப் பயிற்சிபெறும் மாணவர்கள் பள்ளிகளுக்கு இடையிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வாகைசூடுகிறார்கள்.
ஓடி, ஆடி விளையாடு
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை அளிப்பதோடு, ஆய்க்குடியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கீழப்புலியூர் கிராமத்தில் விளையாட்டுத் திடல் அமைக்கும் முயற்சியிலும் அறக்கட்டளையின் சார்பாக முன்முயற்சி எடுத்துவருகிறார்கள். நல்ல மனம் கொண்ட கொடையாளர்கள் வழங்கும் நிதியிலிருந்துதான் இதுபோன்ற செயல்களைச் செய்ய முடிகிறது. சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே நாம் படித்த பள்ளியில் ஆசிரியராவதுதான். அதுபோல என்னிடம் முதன்முதலாகப் படித்த மாரியம்மாள், சுகந்தா ஆகியோரில் ஒருவர் பொறியாளர் பட்டம் பெற்றுப் பணியில் இருக்கிறார். இன்னொருவர், பட்டம் பெற்று அறக்கட்டளை குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருகிறார்” என்றார் லக்ஷ்மி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago