கேள்வி நேரம் 09: இயற்கையின் பெரும் விநோதங்கள்

By ஆதி வள்ளியப்பன்

1. சீனாவில் ஸாங்யே டான்ஸியா தேசிய நிலப் பூங்காவில் வண்ண மயமான பாறை அமைப்புகள் காணப்படுகின்றன. 322 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை அமைப்பின் மற்றொரு பட்டப் பெயர் என்ன?

2. நம் நாட்டின் லடாக் மலைப் பகுதியில் லே என்கிற ஊரில் காந்த மலை என்றொரு பகுதி உள்ளது. இங்கே இருக்கும் சரிவுப் பகுதியில் அமைந்துள்ள சாலை கீழேபோவது போன்ற மாயத் தோற்றத்துடன் இருக்கும். உண்மையில் அது மலையின் மீது ஏறக்கூடிய பாதையே. இந்த மலைப் பகுதியின் இன்னொரு பெயர் என்ன?

3. துருக்மெனிஸ்தானில் தெர்வாஸே என்கிற பகுதியில் உள்ள ஒரு இயற்கை எரிவாயுக் கிணற்றில் 1971-ல் விஞ்ஞானிகள் எதிர்பாராமல் பற்ற வைத்த சிறு தீ, இன்றுவரை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. அது ஒரு எரிவாயுச் சுரங்கமாக மாறிவிட்டது. மீதேன் எரிவாயுப் பரவலைத் தடுப்பதற்காக விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் தீயை மூட்டினார்கள். இன்றைக்கு இந்தச் சுரங்கத்தின் சுற்றளவு 225 அடி, ஆழம் 100 அடி. இந்தப் பகுதியின் பெயர் என்ன?

4. மாலத்தீவு கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கும் பைட்டோ பிளாங்க்டன் மிதவைத் தாவரங்கள் இரவில் ஒளியைப் பாய்ச்சி கடற்கரைக்கு ஒளியூட்டும் அபூர்வ இயற்கைக் காட்சியைப் பார்க்கலாம். இவை எந்த வகை ஒளியை வெளியிடுகின்றன?

5. போலந்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பைன் ஊசியிலை மரங்கள் வளைந்து வளர்ந்திருக்கின்றன. மேற்கு பொமரேனியாவில் உள்ள நவே ஸார்நோவோ பகுதியில் அமைந்துள்ள இந்தக் காட்டின் பெயர் என்ன?

6. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மரணப் பள்ளத்தாக்கில் எடைமிகுந்த கற்கள் நகரும் தன்மையைப் பெற்றுள்ளன. இப்படி அவை நகர்வதன் காரணமாக காய்ந்த சேற்றில் கற்கள் நகர்ந்த தடம் பதிவாகிறது. விநோதமான இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ள கற்களின் பெயர் என்ன?

7. கனடாவில் ஆல்பெர்ட்டா பகுதியில் ஓர் உறைந்த ஏரி உள்ளது. வழக்கமாக ஏரியின் மேல்பகுதி பனியாக உறைந்தும் அடியில் நீராகவும் இருக்கும். வழக்கத்துக்கு மாறாக இந்த ஏரியில் தண்ணீருக்கு அடியில் பனி குமிழ்குமிழாக உறைந்துள்ளது. ஏரியின் அடிப்பகுதியில் இருந்து காற்றுக் குமிழ்கள் உருவாவதே இதற்குக் காரணம். பாக்டீரியா உருவாக்கும் இந்தக் காற்றுக் குமிழ்களில் காணப்படும் வேதிப்பொருள் என்ன?

8. ஃபின்லாந்தின் பனிப்பொழிவில் நனைந்த மரங்கள் பிரம்மாண்டமாகவும் விநோத உருவங்கள் எடுத்து பயமுறுத்துவது போலவும் இருக்கும் பகுதிக்கு என்ன பெயர்?

9. காற்றின் வேகம், வெப்பநிலை, பனிப்பொழிவு ஆகியவை குறிப்பிட்ட வகையில் சேர்வதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள ஒஹையோ மாகாணத்தில் விநோதப் பனி உருவம் உருவாகிறது. இயற்கையாக உருவாகும் இந்த அமைப்புகளின் பெயர் என்ன?

10. மலைகளைச் சுற்றி கேமரா லென்ஸ் போல உருவாகும் பிரம்மாண்ட மேக வடிவத்துக்கு என்ன பெயர்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்