தீப்பெட்டியிலிருந்து மீண்ட கல்விச் சுடர்

By எல்.ரேணுகா தேவி

இரண்டு சகோதரர்களுடன் பிறந்த கருப்பசாமியின் குடும்பச் சூழ்நிலை அப்பா முருகேசனின் இஸ்திரி போடும் தொழிலை நம்பித்தான் இருக்கிறது.

மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்த கருப்பசாமிக்கான பள்ளிக் கட்டணத்தை அப்பாவால் கட்ட முடியவில்லை. அதனால் அவர் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சாலையில் 8 வயதில் வேலைக்கு அனுப்பப்பட்டார்.

படிக்க வேண்டும் என்ற கருப்பசாமியின் கனவு தீயில் கருகி சாம்பலானது அன்றுதான். தீக்குச்சிகளை மரக்கட்டைகளில் வரிசையாக அடுக்கி வைக்கிற வேலை அவருக்குத் தரப்பட்டது.

குழந்தைகளின் கைகள் சுறுசுறுப்பானவை என்பதால் இன்றும் பெரும்பாலான குழந்தைகள்தான் தொழிலாளர்களாகத் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தீப்பெட்டித் தொழிற்சாலைகள் போன்ற துறைகளில் தமிழகத்தின் 14.6 சதவீத குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்வதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு கூறுகிறது.

‘நேற்றுவரை ஒன்றாகப் படித்துக்கொண்டு இருந்த நண்பர்கள் பள்ளிக்குச் செல்ல, நான் மட்டும் தீக்குச்சிகளைக் கட்டைகளில் அடுக்கிக் கொண்டு இருந்தேன். பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை தொழிற்சாலை வாசலில் நின்று கண்ணீருடன் பார்ப்பேன் ' என்கிறார் கருப்பசாமி.

தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டு இருந்த கருப்பசாமி தமிழ்நாடு தொழிலாளர் ஆணையத்தினரின் சோதனையின்போது மீட்கப்பட்டார். பிறகு குழந்தைத்தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

தீப்பெட்டியிலிருந்து ஒரு கல்விச்சுடர் மீட்கப்பட்டது. அதன் பிறகு அவர் 10 ஆம் வகுப்பில் 467 மதிப்பெண்ணும், +2 பொதுத் தேர்வில் 1098 மதிப்பெண்ணும் எடுத்தார்.

அதிக மதிப்பெண்கள் எடுத்தாலும் கல்லூரிக்குச் செல்ல குடும்பத்தின் நிதி நிலைமை போதுமானதாக இல்லை. அதனால் தொழிலாளர் துறையின் உதவியைக் கேட்டார் கருப்பசாமி.

அப்போதைய மாவட்ட ஆட்சியரும் அவருக்கு உதவினார். அதனால் தூத்துக்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது.

தற்போது 85 சதவீத கல்லூரிப் படிப்பை முடித்து இருக்கும் கருப்பசாமி தீப்பெட்டி கட்டைகளை சுமந்து கொண்டு இருந்த கையில் பொறியியல் பட்டம் வாங்குவதற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.

'என்னுடன் படிக்கிற கல்லூரி நண்பர்களிடம் நான் குழந்தை தொழிலாளியாக இருந்ததை சொன்னால் அப்படியா என ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள் ' என்கிறார்.

''மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி மீது ஆர்வம் வருவதற்கு அதிகாரிகள் என்னை அவர்களிடம் பேசச் சொல்லுவார்கள். அப்போது எல்லாம் தீப்பெட்டி தொழிற்சாலையுடன் முடிந்து போகும் என நினைத்திருந்த வாழ்க்கை இன்று பல குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கிறது என நினைத்துக் கொள்ளுவேன்'' என்கிறார்.

தற்போது குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புத் தினங்களின்போது ஒரு முன் மாதிரி மாணவனாக முன்னாள் குழந்தைத் தொழிலாளி கருப்பசாமி பெரிய கைத்தட்டல்களைப் பெற்று வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்