இருபது ஓவர் கிரிக்கெட் உச்சிக்கு சென்றுள்ள காலம் இது. இதில் பறக்கும் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் மட்டையாளர்களுக்குப் பெயரைப் பெற்று தருகிறது. ஆனால், ஒரு பந்துவீச்சாளருக்கு மட்டும் அவர் கொடுத்த சிக்ஸர்கள், அவரை கிரிக்கெட் உலகில் தனித்து வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்த வீரர் பின்னாளில் ஓர் அசுரனாக உருவெடுத்து பிரபலமடைந்தார். அந்த நாயகம் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட். அந்த நாயகனின் மாயாஜாலத்தை இங்கு காண்போம்.
அதற்கு நாம் டைம் டிராவல் மெஷின் மூலம் 2007க்கு செல்ல வேண்டும். 2007 என்றாலே முதலில் நினைவுக்கு வருவது டி20 உலகக்கோப்பைதான். ஏனெனில், இந்திய அணி எம்.எஸ். தோனி தலைமையில் வென்ற முதல் டி20 உலகப்கோப்பை அதுதான். குறிப்பாக இந்தத் தொடரில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டி நினைவுக்கு வராமல் போகாது.
இந்தியாவின் இளம் புயல் யுவராஜ் என்னும் சூறாவளியிடம் இங்கிலாந்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமானார். இந்த ஆட்டத்தில் யுவராஜின் ருத்ரதாண்டவத்தால் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் என்று மைதானத்தில் பந்துகளைப் பறக்கவிட்டு, ரன் மழை பொழிந்தார். அந்த சூறாவளியிடம் மாட்டிக்கொண்டு, அடிப்பட்ட சிங்கம் போல ஆனார் ஸ்ட்டுவர்ட் பிராட்.
» நடுவுல கொஞ்சம் பேட்டிங்கைக் காணோம்
» நளி நாட்டியம் 03: சும்மா சிரிக்கத்தான் | எடை குறைப்புப் பரிதாபங்கள்!
அந்தக் காலகட்டத்தில் கிண்டலுக்கும் சீண்டலுக்கும் ஆளான அவர், யுவராஜை நினைக்கும் போதெல்லாம் பல நாட்கள் தூக்கம் இல்லாமல் தவித்தார். விமர்சனங்கள் அவரை துரத்தின. ஒரு கட்டத்தில் தேசிய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். ஒரு போட்டி தந்த விளைவால், பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.
இத்தோடு பிராட் அவ்வளவுதான் என்று நினைத்தவர்களுக்கு திமிறிக்கொண்டு எழுந்த சிங்கம் போல கர்ஜிக்கத் தொடங்கினார். 2008இல் நியூசிலாந்து தொடரில் இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டியில் 3 - 2 என்ற கணக்கில் தோற்றது. என்றாலும், பிராட்டின் அதிவேகப் பாய்ச்சலுக்கு நியூசிலாந்து வீரர்கள் இரையானவர்கள். இத்தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பிராட். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஃபார்முக்குத் திரும்பினார்.
சிங்கம் மீண்டும் கர்ஜிக்கத் தொடங்கியது. அதே ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பிராட் 23 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தன்னுடைய ஆக்ரோஷமான பவுலிங்களால் தென் ஆப்பிரிக்க மட்டையாளர்களை நிலைகுலைய செய்தார். இதன்மூலம் சிறந்த பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
தொடர்ந்து சிறந்த ஆல்ரவுண்டராகவும் பரிணமிக்கத் தொடங்கினார். 2010இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 169 ரன்கள் குவித்த பிராட், தன்னை ஒரு மட்டையாளராகவும் அடையாளம் காட்டினார். அவருடைய கொடி பறந்த தருணம் எதுவென்றால் 2011இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான். இத்தொடரில் ஸ்டூவர்ட் பிராட் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆக்ரோஷமான பந்துவீச்சு, இன்சுவிங், அவுட்சுவிங் எனப் பலமுனைத் தாக்குதலால் மிரட்டினார்.
அதேபோல 2018இல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இத்தொடரில் நியூசிலாந்தின் பேட்ஸ்மேன்களை நிலைகுலைச் செய்து தன்னுடைய பந்துவீச்சு தாக்குதலால் பல மட்டையாளர்களின் முகத்தைப் பதம் பார்த்தார். இந்தத் தொடரில்தான் இங்கிலாந்து மக்கள் இவரை தலையில் வைத்துக் கொண்டாடினர். மேலும் ஒரு மைல் கல்லாக இத்தொடரில் தன்னுடைய 400 வது விக்கெட்டை வீழ்த்தி, இளம் வயதில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற அரிய சாதனையையும் படைத்தார்.
பரம வைரிகளாக கருதப்படும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் சாதிப்பதில் இரு நாட்டு வீரர்களுமே கவுரமான ஒன்று. ஆஷஸ் தொடரில் மட்டும் பிராட் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து சார்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் பிராட்தான். அந்த அளவுக்கு இவருடைய பந்துவீச்சு பல மட்டையாளர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரியாக மட்டுமல்லாமல் களத்தில் ஆவேசமாக செயல்பட்டு அவருடைய அணிக்கும் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் பிராட். ஆஸ்திரேலியா அணியின் துருப்புச் சீட்டாக இருக்கும் டேவிட் வார்னர்க்கு இவர்தான் வில்லன். அந்த அளவுக்குக் களத்தில் இருவரும் முட்டி மோதிக்கொள்வார்கள். அதிலும் இவரின் வேகப்பந்து வீச்சும் வார்னரின் கிளாசிக் ஷாட்டும் ஆஷஸ்க்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொல்லிவிடலாம். தற்போது 36 வயதை எட்டிவிட்ட பிராட், இன்றும் இங்கிலாந்து அணியின் ஒரு தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராகவும், தேவைப்படும்போது மட்டையாளராகவும் மிளிர்கிறார்.
ஜூன் 22: ஸ்டூவர்ட் பிராட்டின் பிறந்த நாள்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago