ஆங்கில​ம் அறிவோமே 181: இது வரவேற்புப் பானம்!

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

Bank என்றாலும் embankment என்றாலும் ஒன்றுதானே?

*************

“Bonnet, boot ஆகிய இரண்டும் காரின் ஒரே பகுதிகளைத்தான் குறிக்கின்றனவா?”என்று சந்தேகம் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

காரின் முன்புறமுள்ள, மேற்புறமாகத் தூக்கிவிடப்படக்கூடிய அகலமான பகுதிதான் bonnet. இதுதான் அதன் இன்ஜினை மூடி பாதுகாத்துவருகிறது.

பெண்கள், குழந்தைகள் ஆகியோர் தலையில் அணிந்துகொள்ளும் ஒரு வித குல்லா, கழுத்தின் இருபுறமும் நாடாக்களால் நீட்டப்பட்டு முகவாய்க்குக் கீழே முடிச்சு போடப்பட்டிருக்கும். இந்த வகைக் குல்லாவையும் bonnet என்பார்கள்.

Boot என்பது ஒருவிதக் காலணியைக் குறிக்கும். அதாவது பாதத்தையும் கணுக்காலையும் மறைக்கும் தடிமனான காலணி. A pair of boots was purchased.

Boot என்பது எட்டி உதைப்பதையும் குறிக்கும். He got a boot in the stomach.

எனினும், அமெரிக்கப் பேச்சு வழக்கில் boot என்பது காரின் பின்புறம் சாமான்கள் வைக்கப் பயன்படும் பகுதியைக் குறிக்கிறது.

bootjpg100 

 

Literally என்றால் என்ன பொருள்?

ஒரு நூலை மொழிபெயர்க்கும்போது அதிலுள்ள உணர்வுக்கும் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் வார்த்தைகளை மட்டும் மனதில் கொண்டு மொழிபெயர்த்தால், you have translated it literally என்று பொருள்.

பல idioms-ஐ அப்படியே மொழிபெயர்த்துப் பொருள் கொண்டால் வேடிக்கையாகவோ விபரீதமாகவோ இருக்கும். இதோ அப்படிப்பட்ட சில idioms. To turn over a new leaf, a snake in the rat, to smell a rat, to read between the lines.

ஒரு விஷயத்தின் தீவிரத்தை உணர்த்தவும் literally என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. திரையில் கதாநாயகன் ஒரு குத்து கொடுத்ததும், the villan literally flew across the room. I was literally stumped by the news.

*************

Bank என்றால் வங்கி என்று உங்களுக்குத் தெரியும்.

Bank என்பது நதிக்கரையையும் குறிக்கும். Chennai is situated on the banks of bay of Bengal. Trichy is situated on the banks of Cauvery.

Embankment என்பதிலுள்ள bank ‘கரையை’ அடிப்படையாகக் கொண்டது. நதிநீர் ஒரு பகுதிக்குள் நுழைந்துவிடாமல் இருக்க, எழுப்பப்படும் சுவரைத்தான் embankment என்கிறோம்.

*************

“ஒரு acronym ஒன்றைத்தான் குறிக்கும் அல்லவா?”

சில நேரம் அப்படி இருப்பதில்லை. CPR என்ற acronym மருத்துவ உலகில் Cardio Pulminary Resuscitation என்பதைக் குறிக்கிறது. Cardio என்றால் இதயம் தொடர்பானது, Pulminary என்றால் நுரையீரல் தொடர்பானது, Resuscitation என்றால் மீட்பது அல்லது இயங்கச்செய்வது.

சட்டரீதியாக, CPR என்பது Continuing Process Records என்பதைக் குறிக்கும்.

POS என்பது குற்றவியல் துறையில் Proof of Summons என்பதைக் குறிக்கும். சந்தைப்படுத்தும் துறையின் பட்டியலில் Public Opinion Strategies என்பதை உணர்த்துகிறது. E-commerce கோணத்தில் இது Point of Sale என்பதைக் குறிக்கிறது.

பொதுவாக acronym-ஐப் பயன்படுத்தும்போது, (எல்லோரும் அறிந்த வார்த்தையாக இருந்தாலும் சரி!) முதல் முறை அதற்கான விரிவாக்கத்தை அடைப்புக் குறிகளுக்குள் எழுதுவது நல்லது.

Acronyms குறித்து நான் படித்த ஒரு சுவாரசியமான நிகழ்வு இது. கலிபோர்னியாவில் ஓர் ஆம்புலன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார் ஜோன் என்ற பெண்மணி. ஆம்புலன்ஸ் தொடர்பான அடிப்படைத் தன்மைகளை வரிசைப்படுத்தினார். Attitude, integrity, dependability and service. இவற்றின் acronym ஆக AIDS என்ற வார்த்தையை உருவாக்கினார். ஆஹா என்ன ஒரு பொருத்தமான, அற்புதமான acronym என்று குதூகுலப்பட்டார்.

ஆனால், 30 வருடங்கள் கழித்து ஒரு பெரும் சிக்கல் முளைத்தது. Acquired Immunio Deficiency Syndrome என்ற நோயின் சுருக்கமாக AIDS என்பது பரவலாக அறியப்பட்டது. இதைத் தொடர்ந்து AIDS Ambulance ஓட்டுநர்கள் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டனர் தவிர அந்த ஆம்புலன்ஸ்கள் எய்ட்ஸ் நோயாளிகளை மட்டுமே சுமந்து செல்லும் என்றெல்லாம் தவறாகக் கருதப்பட, தனது ஆம்புலன்ஸ்களில் எழுதப்பட்டிருந்த AIDS என்ற acronymஐயே நீக்கிவிட்டார் ஜோன்.

*************

“ஒரு ஹோட்டல் மெனுவில் ‘Mocktail’ என்ற தலைப்பில் சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார்கள். Mocktail என்பது மதுவா, Cocktail என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்”.

நண்பரே, cocktail என்பது மதுவைப் பொறுத்தவரை ஒரு மிக்சர், அவியல்போல. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மது வகைகளின் கலவை.

Mocktail என்பதும் சில பானங்களின் கலவைதான். ஆனால், இவற்றில் ஆல்கஹால் இருக்காது. மென்பானங்கள், பழச்சாறுகள் போன்றவற்றின் கலவை இது. இதைப் பெரும்பாலும் ‘Welcome drink’ எனச் சொல்லிக் குடிக்கிறார்கள்.

Mock என்றால் ஒருவரைக் கிண்டல் செய்வது. இது ஒருவரைப் போலப் பேசியோ நடந்துகாட்டியோ கிண்டலடிப்பதாக இருக்கக்கூடும். அந்த விதத்தில் cocktail-ஐ mock செய்வதுபோல அமைந்தது mocktail.

*************

தொடக்கம் இப்படித்தான்

Fifth column என்ற பயன்பாடு எப்படித் தோன்றியது என்பதைப் பார்ப்போம்.

ஸ்பெயின் நாட்டில் ஓர் உள்ளூர் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 1930-களில் நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரில் ராணுவ அதிகாரியான எமிலியோ மோலா தனது நான்கு படைகளுடன் எதிரிகளைப் பந்தாடக் கிளம்பிச் சென்றுகொண்டிருந்தார். “இது போதுமா?” என்று சிலர் கேட்க, அவர் புன்னகையுடன் “எதிரிகள் உள்ள நகரில் ஐந்தாவதாக எனக்கு ஒரு படை இருக்கிறது. அவர்கள் உளவாளிகள். நாங்கள் அந்த நகரத்தைத் தாக்கும்போது அவர்கள் ஒற்றர்களாகச் செயல்பட்டுத் தகவல்கள் தருவார்கள். எதிர்பாராத விதத்தில் அவர்களும் அந்த நகரத்தைத் தாக்குவார்கள்” என்றார்.

இதற்குப் பிறகு ஒற்றர்களையும், துரோகிகளையும் குறிக்க Fifth column என்பது வழக்கத்துக்கு வந்தது. அதைத்தான் தமிழில் ‘ஐந்தாம் படை’ என்கிறோம்.

சிப்ஸ்

# ஓர் ஆணோ பெண்ணோ family way-ல் இருக்கிறார் என்றால் அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று அர்த்தமா?

ஒரு பெண் கர்ப்பமடைந்திருக்கும்போது மட்டும்தான் ‘She is in the Family way’ என்று குறிப்பிடுவார்கள்.

# ஒரு வேலையை ‘in tandem’ செய்கிறார் என்றால் அவர் அதைச் சரியாகச் செய்கிறார் என்று அர்த்தமா அல்லது குளறுபடி செய்கிறார் என்று அர்த்தமா?

ஒருவர் மட்டும் செய்யும் வேலைக்கு ‘in tandem’ என்கிற வார்த்தை பொருந்தாது. சிலர் ஒன்றை in tandem ஆகச் செய்கிறார்கள் என்றால் அவர்கள் அதை ஒரே நேரத்தில் செய்வதாக அர்த்தம்.

# Founding father என்றால் யார்?

ஒரு நிறுவனத்தை உருவாக்கியவர் அல்லது தொடங்கியவர் அதன் Founding father.

(தொடர்புக்கு: aruncharanya@gmail.com)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்