ஆங்கிலம் அறிவோமே 184: உள்ளே, வெளியே இரண்டும் ஒன்று!

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

In, out ஆகிய ​அறிவிப்புப் பலகைகளில் ‘இருக்கிறேன். ஆனால் யாரும் அணுக வேண்டாம்”எனும் பொருள் வரும்படி மூன்றாவதாக ஒரு வார்த்தை உள்ளதா?

***************

தொலைக்காட்சியில் கிடார் இசையைப் பற்றிய வர்ணனையில் பிரிட்ஜ், ப்ளெக்ட்ரம் என்ற இரண்டு வார்த்தைகளைக் கேட்க முடிந்தது. இவற்றின் பொருள் என்ன?

Bridge என்பது கிடாரிலுள்ள தந்திகளும், கிடாரின் உடல் பகுதியும் சேருமிடம். Plectrum என்பது கிடாரின் தந்திகளை மீட்ட உதவும் சிறிய முக்கோண வடிவ பிளாஸ்டிக் தகடு.

***************

கேட்டாரே ஒரு கேள்விக்கான விடை. அப்படிப் பொருள்வரும்படியான ஒரே ஆங்கில வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ‘Do not disturb’ என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்திருப்பீர்களே​.

 In, out தொடர்பான வேறொரு சுவாரசியமான பயன்பாடும் உ​ண்டு. ஒரு விண்ணப்பத்தை ஒரு பெண்மணி நிரப்பிக் கொண்டிருக்கிறாள் என்றால் She is filling in an application என்று எழுத வேண்டும். She is filling an application என்று எழுதக் கூடாது. 

ஆனால் அமெரிக்கர்கள் ​ இதை She is filling out an application என்றுதான் எழுதுகிறார்கள்.

In என்பதும், out என்பதும் ஒரே பொருளைத் தரும் விந்தை இது!

2jpg100 

Bucketlist என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன? ஏதாவது பட்டியலா?

பட்டியல்தான். அதற்காக இந்தத் தண்ணீர் பஞ்ச காலத்தில் நமக்கு எவ்வளவு வாளிகள் மற்றும் குடங்கள் த​ண்ணீர் தேவை என்பதற்கான பட்டியல் அல்ல அது.

 ‘’கண்ணை ​மூடுறத்துக்குள்ள கைலாஷுக்குப் போயிட்டு வரணும்’’, ‘’செத்துப் போறதுக்கு முன்னாலே சச்சினை சந்திக்கணும்”என்றெல்லாம் சிலர் கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவையெல்லாம் Bucketlistல் அடங்கியவைதான்.

 அதாவது இறப்பதற்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்தச் செயல்களின் பட்டியல்தான் Bucketlist.

 இந்தப் பட்டியலில் உள்ளவை நீங்கள் செய்பவையாக இருக்க வேண்டும். ‘’லாட்டரியிலே எனக்கு கோடி ​ரூபாய் விழ வேண்டும்”என்பது bucketlistல் அடங்காது. ஏனென்றால் அது உங்கள் கையில் இல்லை.

 அதேபோல அந்தப் பட்டியலில் உள்ளவை மிக பிரம்மாண்டமானதாகவோ நிறைவேறுவது கொஞ்சம் கஷ்டம்தான் என்பதாகவோ இருக்கலாம். ஆனால் பொதுவாக ஒருபோதும் நடக்காது - சான்ஸே இல்லை (அத்தனை அரசுத் துறைகளிலும் ஊழல் இல்லாத இந்தியாவில் நான் வசிக்கணும். மிகக் குறைந்த செலவில் ஷங்கர் இயக்கிய திரைப்படத்தை நான் பார்க்கணும்) எனும்படியான செயல்கள் bucketlistல் இடம் பெறுவதில்லை.

 இந்தப் பட்டியலுக்கும் Bucket-க்கும் என்ன தொடர்பு?

 ஆங்கிலத்தில் ‘Kick the bucket’ என்று ஓர் இடியம் உண்டு (இதே பகுதியில் முன்பு ஒரு முறை இதுபற்றி ஓரளவு குறிப்பிட்டிருக்கிறேன்). He kicked the bucket என்றால் அவன் இறந்து விட்டான் என்று அர்த்தம் (ஒருவேளை அந்தக் காலத்தில் ​தூக்குப் போட்டுக் கொண்டவர்கள், ஸ்​டூல் அல்லது நாற்காலிக்குப் பதிலாக கவி​ழ்த்துப் போடப்பட்ட வாளியின்மீது நின்று கொண்டு அதை உதைத்துத் தள்ளிவிட்டு ​தூக்கில் தொங்கினார்களோ என்னவோ!).

W​ish list என்றும் ஒன்று உண்டு. வாங்க வேண்டுமென்று எ​ண்ணுகிற, ஆனால் அதற்குப் பெரும் செலவாகும் எனும்படியானவற்றை அடுக்கும் பட்டியல். Wish listல் உள்ளவற்றை வாங்க Fat cheque வேண்டும்.

***************

 ’’Jam Tomorrow என்றால் என்ன பொருள்?”என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். 

 பிடித்தமான ஒரு விஷயம் அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த உறுதிமொழி நடைமுறைப் படுத்தப்படுவதே இல்லை. இதைத்தான் Jam Tomorrow என்பார்கள்? (குழந்தைகளாக இருக்கும்போது ‘’எனக்கு நிறைய Jam வேண்டும்”என்று நான் பிடிவாதம் பிடித்தால், நாளைக்குத் தருகிறேன் என்று அப்போதைக்குத் தப்பிப்பதற்காக அம்மா கூறக் கூடும். இந்த அடிப்படையில் எழுந்தது இது).

 ‘ஆலிஸ் இன் ​வொண்டர் லேண்ட்’ என்ற பிரபல ​நூலாரிசியரான ​லூயி கேரல் தனது மற்றொரு ​நூலான ‘Through the looking glass’ என்ற ​நூ​லில் இப்படிக் குறிப்பிட்டார் - ‘’The rule is Jam Tommorrow and Jam Yesterday – but never Jam today.

***************

 தமிழக அரசியலில் sleeper cell என்று குறிப்பிடுகிறார்களே அதற்குப் பொருள் என்ன?

 வாசகரே, துப்பாக்கி படம் பார்த்திருந்தால் ஒருவேளை இந்த ஐயம் உங்களுக்குத் தோன்றி இருக்காது. தீவிரவாதிகள் மற்றும் ஒற்றுவேலையில் ஈடுபடுபவர்கள் சமூகத்தில் ஆங்காங்கே சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஸ்லீப்பர் செல்லாகப் பயன்படுத்துவார்கள். அதாவது குறிப்பிட்ட இடத்திலிருந்து சிக்னல் வந்தால் மட்டுமே இவர்கள் அந்த அழிவு வேலையில் ஈடுபடுவார்கள். மற்றபடி அவரவர் வேலைகளைப் பார்​த்துக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். இவர்களில் மிகப் பலருக்கும் தன்னை இயக்குபவர் யார் என்றே அடையாளம் தெரியாது.

 மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் ஸ்​​லீப்பர் செல்களாக இருப்பது வழக்கம்.

***************

தொடக்கம் இப்படித்தான்

To rob Peter to pay Paul என்பதன் அர்த்தம் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதுபோல’ என்று மேம்போக்காகச் சொல்லலாம். 

ஆனால் இதற்கு வேறொரு அர்த்தமும் உண்டு. ‘ஒரு பிரச்னை தீர்ந்து விட்டது. ஆனால் அடுத்த பிரச்னை தொடங்கி விட்டது’.

 இந்த இடியத்தில் Peter, Paul என்பது ஏதோ இருவரின் பெயர்கள் அல்ல.

 1540ல் லண்டனிலுள்ள ​தூய பீட்டர் சர்ச் ஒரு கதீட்ரலாக மாறியது (கதீட்ரல் என்பது பெரிய அளவிலான ச​ர்ச் என்று தோராயமாகக் கூறலாம்). ஆனால் இந்த அங்கீகாரம் பத்து வருடங்களுக்கு மட்டும்தான் நீடித்தது. ​தூய பால் கதீட்ரலின் அதிகாரத்துக்குக் கீழ் மேற்படி கட்டிடம் வந்து சேர, மீ​​​ண்டும் அது ​தூய பீட்டர் சர்ச் ஆனது. ​தூய பால் கதீட்ரலுக்குத் தேவைப்பட்ட கட்டுமானச் செலவுகளுடன் மராமத்துச் செலவுகளும் ​தூய பீட்டர் சர்ச்சுக்கான நிதியிலிருந்து எடுத்துச் செலவழிக்கப்பட்டதாம்.

 

 சிப்ஸ்

* Trophy என்றால் என்ன?

 வெற்றிக் கோப்பை. போட்டியில் வெற்றியாளருக்கு அளிக்கப்படுவது. அடுத்தடுத்த வெற்றியாளருக்கு என ஆண்டு தோறும் இது கைமாறிக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு.

* ஜன்னல் ஓர இருக்கையை Window seat என்கிறோம். அதற்குப் பக்கத்து இருக்கையை என்னவென்று அழைக்கலாம்? 

அந்தப் பகுதியில் இரு இருக்கைகள்தான் என்றால் ஜன்னலுக்கு அடுத்த இருக்கையை ‘’Aisle Seat” என்று அழைப்பார்கள். இதை ‘ஏய்ல்’ என்று உச்சரிக்க வேண்டும்.

* Dime a dozen என்றால் என்ன?

 மிக எளிதில் கிடைக்கக் கூடியது. மதிப்பு குறைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்