1. எர்னஸ்டோ குவேரா த லா செர்னா என்பதுதான் சே குவேராவின் முழுப் பெயர். ‘சே’ என்கிற அவருடைய முன்னொட்டு எதனால் அவருடைய பெயருடன் ஒட்டிக்கொண்டது?
2. சே குவேரா ஒரு கம்யூனிஸ்டாக மாறுவதற்கு முன் இரண்டு முக்கியப் பயணங்களை மேற்கொண்டார். அவற்றில் இரண்டாவது பயணக் குறிப்புகள் ‘மோட்டார்சைக்கிள் டயரி’ என்கிற பெயரில் புகழ்பெற்ற புத்தகமாக வெளிவந்தது. அதற்கு முன்னதாக 22 வயதில் தனியாளாக முதலாவது பயணத்தை அவர் மேற்கொண்டார். ஒற்றை மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிளில் 1950-ல் அவர் தொடங்கிய வட அர்ஜென்டினா பயணத்தின் மொத்தத் தொலைவு எவ்வளவு?
23CH_Quiz23. மோட்டார்சைக்கிள் பயணத்தின்போது உடன் வந்த நண்பரை, முந்தைய பயணத்தின்போது கார்டோபா நகரில் சே சந்தித்திருந்தார். 1952-ல் மோட்டார்சைக்கிளில் அவருடன் பயணித்த அந்த நண்பரின் பெயர் என்ன? பிற்காலத்தில் கியூபப் புரட்சிக்குப் பிறகு சாண்டியாகோ மருத்துவப் பள்ளியை அந்த நண்பரே நிறுவினார். மருத்துவத் துறையில் கியூபா சாதிப்பதற்கு இவரும் ஒரு முக்கியக் காரணம்.
4. சே தன்னுடைய நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தென்னமெரிக்க கிராமப் பகுதிகளில் 8000 கி.மீ.க்கு மேற்கொண்ட பயணத்தின்போது, தொடர்ச்சியாக பயணக் குறிப்புகளை எழுதிக்கொண்டே வந்தார். அதுவே பிற்காலத்தில் ‘மோட்டார்சைக்கிள் டயரி’ என்கிற புத்தகமாகவும், பின்னர் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமாகவும் வெளியானது. அந்தப் படத்தின் இயக்குநர் யார்?
5. ஆயுதம் தாங்கிய புரட்சியாளராக இருந்த சே குவேராவுக்கு இருந்த முக்கிய உடல்நலப் பிரச்சினை என்ன? வாழ்நாள் முழுவதும் இந்த நோயுடன் போராடியபடியே, மக்களுக்கான விடுதலைக்காக அவர் போரிட்டுக்கொண்டிருந்தார்.
6. கியூபக் கொடுங்கோல் ஆட்சியாளர் ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவை எதிர்த்துப் புரட்சி நடத்தத் திட்டமிட்ட ஃபிடல் காஸ்ட்ரோ, ரால் காஸ்ட்ரோ ஆகிய இருவரும் நாடு கடத்தப்பட்டு வாழ்ந்துவந்தனர். அவர்களை சே குவேரா எங்கே, எப்போது முதலில் சந்தித்தார்?
23CH_Quiz37. கியூபாவில் புரட்சி நடத்துவதற்காக ‘ஜூலை 26 இயக்கம்’ என்றொரு இயக்கத்தை காஸ்ட்ரோ உள்ளிட்டோர் உருவாக்கியிருந்தனர். புரட்சியின்போது சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவராகவே சே குவேரா முதலில் அவர்களுடன் சேர்ந்தார். பின்னர் கெரில்லா போராளிகளில் ஒருவராக மாறினார்.
இரண்டாவது படையின் தளபதியாக சேகுவேராவை காஸ்ட்ரோ நியமித்தார். 1956-ல் கியூபாவைத் தாக்கச் சென்றபோது புரட்சிப் படையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 82. மோதலில் தப்பித்தவர்களின் எண்ணிக்கை 22. அப்போது புரட்சிப் படையினர் சென்ற படகின் பெயர் என்ன?
8. கியூப புரட்சி வென்ற பிறகு 1959 ஜனவரி 1-ம் தேதி புரட்சிப் படை ஆட்சியமைத்தது. கியூப அமைச்சரவையிலும் கியூப நிர்வாகத்திலும் சே குவேராவுக்கு முக்கிய பதவிகளை காஸ்ட்ரோ வழங்கினார். அப்படி சே வகித்த பதவிகள் என்னென்ன?
9. கியூபாவுக்குப் பிறகும் சே குவேரா பல்வேறு நாடுகளில் புரட்சி நடத்துவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கடைசியாக புரட்சி நடத்த அவர் கால் பதித்த நாடு, அவரது தாய்க் கண்டத்தில் உள்ள பொலிவியா. 1966 அக்டோபரில் தொடங்கிய அந்தப் புரட்சி ஓராண்டுக்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை. அவருடைய கடைசி காலமும் புகழ்பெற்ற நூலாக வெளியாகியுள்ளது. அதன் பெயர் என்ன?
10. அவர் புதைக்கப்பட்ட இடம் ஒரு நினைவுச் சின்னமாக மாறிவிடக் கூடாது என்று நினைத்த பொலிவிய அரசு, அவரது சடலம் புதைக்கப்பட்ட இடத்தை மறைத்துவிட்டது. பிற்காலத்தில் கிடைத்த தடயங்களின் அடிப்படையில் பொலிவியாவின் வால்லகிராண்டே விமான ஓடுதளப் பகுதியில் சேகுவேராவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சே குவேராவின் முதல் மகளும் மருத்துவருமான அலெய்டா அந்த இடத்தில் சிறு நினைவிடத்தை உருவாக்கியுள்ளார். அதன் பிறகு கியூபாவில் உள்ள சாண்டா கிளாராவில் சே குவேராவின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. சடலம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago