நி
லவேம்புக் குடிநீர் பற்றிப் பேசியதற்காக கமல்ஹாசனும், ஜி.எஸ்.டி. பற்றி ‘மெர்சல்’ படத்தில் பேசியதற்காக விஜய்யும்தான் தற்போதைய ‘சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்!’
இப்படி எதையாவது ஒரு கருத்தைச் சொல்லி, அடிக்கடி ‘சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்’ ஆகச் சிக்கி ‘சுண்ணாம்பு’ ஆகுபவர்களை, ஊடக நண்பர்கள் “அவர் எப்பவுமே ‘லைம்லைட்டிலேயே’ இருக்காருப்பா!” என்பார்கள்.
ஆங்கிலத்தில் இதை ‘In the limelight’ என்பார்கள். இதைப் பாராட்டாகவும் சொல்லலாம். கிண்டலாகவும் பயன்படுத்தலாம். இந்தச் சொற்றொடர், சுண்ணாம்பிலிருந்து பிறந்த கதை சொல்ட்டா சார்..?
கால்சியம் ஆக்ஸைடை (அதான்… சுண்ணாம்பு) சூடுபடுத்தினால், பிரகாசமான ஒளி தோன்றும். அது பல மைல் தூரத்துக்குச் சுடர்விடும் தன்மைகொண்டதாக இருந்தது. 1826-ம் ஆண்டு தாமஸ் ட்ரம்மாண்ட் எனும் ஸ்காட்லாந்து ராணுவப் பொறியாளர், ஒரு இடத்துக்கும் இன்னொரு இடத்துக்குமான தூரத்தைக் கணக்கிட்டு, ராணுவத்துக்கான வரைபடம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டார்.
அப்போது சில இடங்களில், சிலநேரம் மோசமான வானிலையின்போது, தூரத்தைச் சரியாகக் கணிக்க முடியாமல்போனது. அதுபோன்ற நேரத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் சுண்ணாம்பைச் சூடுபடுத்தினார். அதில் தோன்றிய ஒளியை வைத்து, அவர், தூரத்தைக் கணக்கிட்டு, வரைபடம் தயாரித்தார்.
பின்னாட்களில் இப்படி சுண்ணாம்பைச் சூடுபடுத்தும் உத்தியை அடிப்படையாக வைத்து, கலங்கரை விளக்கம், நாடகங்களில் ‘ஸ்பாட்லைட்’ ஆகப் பயன்படுத்தும் ஒளி எனப் பலவிதமான ‘லைட்டிங்’ விஷயங்கள் உருவாக்கப்பட்டன.
அன்றைய நாட்களில், மேடை நாடகங்களில் ஒரு குறிப்பிட்ட காட்சியில், குறிப்பிட்ட கதாபாத்திரம்தான் ‘பெர்ஃபார்ம்’ செய்கிறார் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக, அவர் மீது ‘ஒளி’ விழ வைக்கப்பட்டது. அதாவது, அந்தக் காட்சியில் அவர்தான் ‘சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்’ என்பதைப் புரிய வைப்பதற்காக அப்படி ஒரு உத்தி.
அப்படி ‘லைம்லைட்டில்’ இருந்தபோது அன்றைய நடிகர்களுக்குக் கண்கள் கூசியதோ இல்லையோ… இன்றைக்கு ‘லைம்லைட்டில்’ இருக்கும் நடிகர்களின் ‘நடிப்பை’ பார்த்து நமக்குக் கண்கள் ரொம்பத்தான் கூசுதுப்பா!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago