1. இந்தியாவில் விநாடி வினா போட்டிகள் பிரபலமடைய முதல் காரணமாக இருந்தவர். இந்தியாவின் மிகச் சிறந்த குவிஸ் மாஸ்டர். தேசிய அளவில் மிகவும் பிரபலமடைந்த முதல் விநாடி வினா போட்டி 1985-ல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘குவிஸ் டைம்’; அதற்குப் பிறகு ‘இந்தியா குவிஸ்’, ‘மாஸ்டர்மைண்ட் இந்தியா’ போன்ற பிரபல விநாடி வினா நிகழ்ச்சிகளையும் நடத்திய அவர் யார்?
2. 1791-ல் டப்ளின் நகரின் நாடக அரங்க உரிமையாளர் ரிச்சர்டு டாலி 24 மணி நேரத்தில் அந்த நகரத்தில் ஒரு வார்த்தையைப் பிரபலப்படுத்துவதாகச் சவால் விடுத்தார். தெருவோரக் குழந்தைகளைப் பயன்படுத்தி நகரெங்கும் அந்த வார்த்தையை எழுதச் செய்தார். யாருக்குமே அந்த வார்த்தையின் அர்த்தம் புரியாததால், அது ஏதோ புதிய சோதனை என்றே நினைத்துக்கொண்டார்கள். இதனால் ரிச்சர்டுக்கு வருமானம் அதிகரித்தது என்று ஆதாரமற்ற ஒரு கதை இருக்கிறது. அவர் எழுத வைத்ததாகக் கூறப்படும் வார்த்தை என்ன?
3. இந்தியில் அமிதாப்பச்சன் நடத்திய ‘கோன் பனேகா குரோர்பதி’, தமிழில் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ எனப் பெரும் பணத்தைப் பரிசாகக் கொண்ட டிவி கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அடிப்படையாக இருந்த வெளிநாட்டு நிகழ்ச்சியின் பெயர் என்ன, அது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
16CH_neil-obrienright4. இந்தியாவின் முதல் விநாடி-வினா நிகழ்ச்சியை கொல்கத்தாவில் உள்ள ‘கிறைஸ்ட் தி கிங் சர்ச்’ அரங்கில் நீல் ஓ பிரைன் 1967-ல் நடத்தினார். இங்கிலாந்து மதுபான விடுதி விநாடி-வினா நிகழ்ச்சிகளால் கவரப்பட்டு அவர் அதைத் தொடங்கினார். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸின் நிர்வாக இயக்குநராக இருந்த நீல் ஓ பிரைனுடைய மகனும் ஒரு பிரபலம், அவர் யார்?
5. இந்தியாவில் நடைபெற்ற ஒரு டிவி கேள்வி-பதில் நிகழ்ச்சியை அடிப்படையாகக்கொண்டு ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் திரைப்படம் எது?
6. ஐரோப்பிய நாட்டு அரசு டிவி அலைவரிசைகளில் ஒன்றான அது, பிரிட்டனுக்கு அடுத்ததாக இந்தியாவில் மட்டுமே ஒரு பிரபல விநாடி வினா நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது. அந்த டிவி அலைவரிசையின் பெயர், அந்த நிகழ்ச்சியின் பெயர் என்ன?
7. நாட்டின் மிகவும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான அவர் ‘ஸ்கூல் குவிஸ் ஒலிம்பியாட்’, ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ போன்ற விநாடி வினா நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். கிரிக்கெட் வீரர் அல்லாத கிரிக்கெட் வர்ணனையாளரான அவருடைய பெயர் என்ன?
8. இந்தியாவின் சிறந்த விளையாட்டு குவிஸ் மாஸ்டராக அறியப்பட்டவர் நரோத்தம் புரி. தூர்தர்ஷனில் அவருடைய விளையாட்டு விநாடி வினா நிகழ்ச்சிகள் ரொம்பவும் பிரபலம். அவருடைய முதன்மையான தொழில் என்ன?
9. நாட்டின் மிகப் பெரிய விநாடி வினா அமைப்பு அது. அந்த அமைப்பில் 2,000 பேர் உறுப்பினர்கள். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் ‘ASKQANCE’ என்கிற மிகப் பிரபலமான விநாடி வினா நிகழ்ச்சியைத் தங்கள் மாநிலத்தின் தலைநகரில் அந்த அமைப்பு நடத்துகிறது. அது எந்த மாநிலம், அந்த அமைப்பின் பெயர் என்ன?
10. விநாடி வினா போட்டிகளுக்கும் ஓர் ஆயுதத்துக்கும் தொடர்பு உண்டு. அது எந்த ஆயுதம், எதற்காக அந்தப் பெயர் விநாடி வினாவுடன் தொடர்புபடுத்தப்பட்டது?
விடைகள்:
1. சித்தார்த்த பாசு
2. QUIZ
3. ஹூ வான்ட்ஸ் டு பீ எ மில்லியனர், பிரிட்டன்
4. டெரிக் ஓ பிரைன், தந்தை வழியில் இவரும் ஒரு குவிஸ் மாஸ்டர். திரிணமூல் காங்கிரஸின் ராஜ்ய சபா எம்.பி.யும்கூட.
5. ஸ்லம் டாக் மில்லியனர்
6. பி.பி.சி., மாஸ்டர் மைண்ட் இந்தியா
7. ஹர்ஷா போக்ளே
8. காது-மூக்கு-தொண்டை மருத்துவ நிபுணர்
9. கர்நாடகம், கர்நாடகா குவிஸ் அசோசியேஷன்
10. ராபிட் ஃபயர் துப்பாக்கி. ஒருவரைத் திணறடிக்கும் வகையில் அடுத்தடுத்து கேள்விக்கணைகளைத் தொடுக்கும் கடைசி சுற்றுக்கான பெயர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago