கேள்வி மூலை 09: வெயில் ஏன் சோர்வடைய வைக்கிறது?

By ஆதி

மனிதர்கள் வெப்ப ரத்தப் பிராணிகள். அதனால் நம்முடைய உடல் எப்போதும் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும். பாம்பு, தவளை போன்ற குளிர் ரத்தப் பிராணிகளின் உடல் வெப்பநிலை, சூரியன் இருக்கும்போது வெப்பமாகவும், சூரியன் மறைந்த பிறகு குளிராகவும் மாறிவிடும்.

தண்ணீர் வறட்சி

வெயிலில் நாம் வெளியே செல்லும்போது நம்முடைய உடல் வெப்பத்தைப் பெறும். அதேநேரம் அதிகம் வெப்பமடைந்துவிடவும் கூடாது. அப்படி அதிக வெப்பமடைந்தால் வெப்ப மயக்கம் (Heat Stroke) போன்ற பிரச்சினை உடலைக் கடுமையாகப் பாதிக்கலாம். வெயிலில் மட்டுமல்லாமல் கடுமையாக உழைக்கும்போதும் உடல் வெப்பமடையும்.

இப்படி அதிக வெப்பமடைவதைத் தடுப்பதற்கு, வியர்வையை வெளியேற்றி உடல் தன்னையே குளுமைப்படுத்தித் தற்காத்துக்கொள்கிறது. அதிகமாக வியர்த்த பிறகு போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், ஒரு புள்ளியில் உடலில் உள்ள தண்ணீர் பெருமளவு வற்றிப் போய் உடலின் உள்ளுறுப்புகள் வறண்டுவிடும். இதனால்தான் உடல் சோர்வும் மந்தமும் அடைகிறது. அப்போது சாதாரண வேலையைச் செய்யவும், நடக்கவும், கையைத் தூக்கவும்கூட மிகவும் கஷ்டமாக இருக்கும்.

உள்ளே ஒரு கடிகாரம்

வெப்பம் மட்டுமில்லாமல், குளிரும் மக்களைச் சோர்வுறச் செய்யும். நாம் வெப்பரத்தப் பிராணியாக இருப்பதால்தான் இதுவும் நடக்கிறது. குளிர்காலத்தில் உடல் தன் இயல்பான வெப்பநிலையைப் பராமரிப்பதற்கு நிறைய ஆற்றலைச் செலவழிக்கும். உடல் நடுக்கம், பற்கள் கிட்டிப்பதுகூட, குளிரிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கு உடல் ஆற்றலைச் செலவழிக்கும் ஒரு வழிதான்.

அப்புறம் சூரியன் நம் உடலைச் சோர்வடைய மட்டுமே வைக்கிறது என்று நினைப்பதும், தவறான நம்பிக்கை. நமது உடலுக்குள் Circadian rhythm என்றொரு கடிகாரம் கண்ணுக்குத் தெரியாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கடிகாரத்தை இயக்குவது சூரியனே. காலை ஆனவுடன் எழுந்திருக்க வேண்டும் என்ற தூண்டுதலைத் தருவதும், மாலை ஆனவுடன் தூங்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதும் இந்தக் கடிகாரம்தான். இந்தக் கடிகாரத்தின் பேச்சைக் கேட்டு நடந்தாலே, நம் உடலில் பாதி விஷயம் ஒழுங்காக நடக்கும். ஆனால், நாம் கேட்கிறோமா என்ன?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்