ஆங்கிலம் அறிவோமே: குண்டக்க மண்டக்க வட்டார வழக்கா?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

திருச்சியைச் சேர்ந்த ராஜா என்ற வாசகர் ‘மதுரை ஸ்லாங், நெல்லை ஸ்லாங் என்பதுபோல் ஆங்கிலத்திலும் உண்டா?’ என்று கேட்டிருந்தார்.

வட்டார வழக்கு slang ஆகாது ராஜா. Dialect என்பதுதான் வட்டார வழக்கைக் குறிக்கும் சொல்.

இப்போது dialect என்பதற்கும் slang என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கலாம்.

எம்புட்டு, குண்டக்க மண்டக்க, ராவுறான், டுபுக்கு ஆகிய நான்கு வார்த்தைகளையும் மதுரையில் அதிகமாகக் கேட்கலாம். என்றாலும் எம்புட்டு, குண்டக்க மண்டக்க போன்றவற்றை dialect ஆகவும், ராவுறான், டுபுக்கு ஆகியவற்றை slang ஆகவும் கொள்ளலாம்.

பொதுவாக slang என்பது கொஞ்சம் தரம் குறைந்ததாகக் கருதப்படுகிறது. தங்களை உயர்வாகக் கருதிக் கொள்பவர்கள் இதுபோன்ற வார்த்தைகளைத் தவிர்க்க நினைப்பார்கள்.

Dialect-களைக் கிண்டல் செய்தால் சம்பந்தப் பட்டவர்களுக்குக் கோபம் வரும். ஏனென்றால் அந்த வார்த்தைகள் சம்பந்தப் பட்ட சமுதாயத்தின் தனித்தன்மையைக் குறிக் கின்றன. வட சென்னைக்குப் போய் ‘கலாய்த்தல்’ ‘இன்னாத்த’ போன்ற dialect-களைக் கலாய்த்தால் ஆண்கள் ‘காங்கிரஸ்’ சின்னத்தை ஓங்கக் கூடும். பெண்கள் ‘ஆம் ஆத்மி’ சின்னத்தைக் கையில் எடுக்கும் அபாயமும் உண்டு.

அதேபோல ‘செத்தநேரம் சும்மாயிருடா’ என்று நெல்லைக்காரர் கூறினால் ‘செத்த நேரம் சும்மாதானே இருக்க முடியும்!’ என்று ஜோக் அடிக்காதீர்கள். செத்த நேரம் என்றால் கொஞ்ச நேரம் வட்டார மொழி!

Dialect என்பது கிரேக்க வார்த்தையான dialectos என்பதிலிருந்து வந்தது. குறிப்பிட்ட ச மூகத்தினரால் சற்றே மாறுதல்களுடன் பயன்படுத்தப்படும் மொழி என்று இதற்குப் பொருள். Dialect-ஐ ‘colloquial’ என்றும் குறிப்பிடலாம்.

Slang என்பது பெரும்பாலும் சம வயதினருக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும் வார்த்தைகள்… இவற்றிற்கு அதிக ஆயுள் கிடையாது. அபேஸ் என்றால் திருட்டு. அபீட்டு என்றால் தோல்வியடைதல் ஆகியவையும் உதாரணங்கள்தாம்.

அதாவது slang என்பது குறிப்பிட்ட குழுக்கள் தங்களுக்கு மட்டுமே முழுமையாக விளங்கும்படி அமைத்துக் கொண்ட (அல்லது அப்படி அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும்) வார்த்தைகள். கல்லூரி வட்டாரத்தில் ‘மச்சி’ என்பதுபோல். இது தெரியாமல் எங்கும் ‘பல்பு’ வாங்கி விடாதீர்கள்.

பொதுவாக dialect, slang ஆகிய இரு பிரிவு வார்த்தைகளையுமே அகராதியில் காண முடியாது.

இவை இல்லாமல் வேறொரு வகையும் உண்டு. ‘இங்கே நீங்க வரீங்க ஏன்? மகிழ்ச்சி உங்களை எனக்குச் சந்திச்சதிலே’ இது என்ன தமிழ் சொல்லுங்கள் பார்க்கலாம். இது வட்டாரத் தமிழ் அல்ல. கொஞ்சம் மட்டரகத் தமிழ். நடுவயதைக் கடந்தவர்களுக்குத் தெரியும். இது ‘ஜு னூன் தமிழ்’ என்பது (இந்தப் பெயர் கொண்ட ஹிந்தி மெகா சீரியல் த மிழாக்கம் செய்யப்பட்டபோது உதட்டசைவுக்குப் பொருந்துவதற்காக இப்படியெல்லாம் தமிழைச் சித்திரவதை செய்தார்கள்).

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை முக்கியமாக வார்த்தைகளைப் பயன்படுத்தும் விதத்தில். அமெரிக்க ஆங்கிலத்துக்கும் பிரிட்டிஷ் ஆங்கிலத்துக்கும் வேறுபாடுகள் உண்டு நாம் பிரிட்டிஷ் ஆங்கிலத்தோடு நன்கு அறிமுகம் ஆனவர்கள் என்றாலும் அமெரிக்க ஆங்கிலமும் இங்கு பரவி வருவதால் அதையும் தெரிந்து கொள்வது நல்லது.

‘என் வண்டிக்கு gas தேவை’ என்று ஒருவர் கூறினால் அது LPG என்று மட்டுமே நினைக்க வேண்டாம். பெட்ரோலை அப்படிக் குறிப்பிடுவது அமெரிக்கர்களின் வழக்கம்.

ஒரு நண்பர் ‘நான் ஒரு apartment வாங்கப் போகிறேன்’ என்கிறார். இன்னொருவர் ‘நான் ஒரு flat வாங்கப் போகிறேன்’ என்கிறார். வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் இரண்டு பேரும் ஒன்றைத்தான் குறிக்கிறார்கள். அதாவது British ஆங்கிலத்தில் flat என்பதை அமெரிக்கர்கள் apartment என்கிறார்கள். அபார்ட்மென்ட் வாங்கக் கடன் வாங்கி ஃப்ளாட் ஆனவர்கள் (அதாவது கவிழ்ந்த வர்கள்) கதை வேறு!

இந்த இடத்தில் flat என்ற வார்த்தையைப் பற்றிய வேறு சில கோணங்களையும் அறிந்து கொள்வோம்.

Flat என்பதற்கு ‘ஏற்ற இறக்கமற்ற, உற்சாகமற்ற என்றும் அர்த்தம் உண்டு. Flat voice என்பது இந்தப் பொருளில் பயன்படுத்தப் படுகிறது.

Flat என்பதற்கு முழுமையாக என்ற அர்த்தமும் உண்டு. எடுத்துக்காட்டு: He turned me flat.

Why are you mad? என்று ஓர் அமெரிக்கர் கேட்டால் உங்கள் மனநிலையை அவர் சந்தேகிக்கிறார் என்று அர்த்தம் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை mad என்றால் angry என்று அர்த்தம்.

அதற்காக அமெரிக்கர்கள் கூறும் எதையுமே சாத்வீகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஓர் அமெரிக்கர் உங்களைப் பார்த்து ‘You are dumb’ என்றால் ‘ஆகா நான் ஓட்டைவாய் இல்லையென்று இவர் பாராட்டுகிறார். மெளனத்தி ன் மேன்மை அறிந்த ஞானி என்று புகழ்கிறார்’ என எண்ணி அகமகிழ வேண்டாம். Dumb என்பது இங்கே முட்டாள்தனத்தைக் குறிக்கிறது. அதாவது உங்களை stupid என்று அவர் சொல்வதாக அர்த்தம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்