கட்டுப்பாடின்றி வரையலாம்!

By குள.சண்முகசுந்தரம்

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருக்கும். அவர்களின் போக்கிலேயே விட்டால்தான் அதை வெளிக்கொணர முடியும். அதிலும் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் இருக்கும் கற்பனைத் திறன் வளரச் சுதந்திர வெளி மிகவும் முக்கியம். மதிப்பெண் மயமாகிவிட்ட இன்றைய கல்விச் சூழலில் இதையெல்லாம் யோசிக்காததால் குழந்தை களும் இளைஞர்களும் மிகுந்த மன உளைச் சலுக்கு ஆளாகிறார்கள். அவர்களை மன இறுக்கத்திலிருந்து விடுவிக்கிறார்கள் சென்னை பெரம்பூரில் ‘மகேந்திரா ஆர்ட் மிஷன்’என்னும் அமைப்பை நடத்தும் ஓவிய ஆசிரியரான மகேந்திரனும் அவரது சகாக்களும்.

மனதில் தோன்றியதை

ஆரம்பத்தில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கும் தனியார் அமைப்புகளுக்கும் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று இலவசமாக வரையச் சொல்லிக்கொடுத்தார்கள். அதைச் சற்றே மாற்றி இப்போது தங்களைத் தேடி வருபவர்களுக்குச் சொல்லித்தருகிறார்கள். “இங்கு வருபவர்கள் தங்கள் மனதில் பட்டதையெல்லாம் வரையச் சொல்வோம், வரைந்து முடித்த பிறகு பாராட்டி அவர்களின் படைப்பாற்றலை அங்கீகரிப்போம். இப்படிச் செய்வதன் மூலம் அவர்களின் படைப்பாற்றலை மட்டுமல்லாது மகிழ்ச்சியான மனநிலையில் அவர்களின் அறிவுத் திறனையும் மேம்படுத்த முடியும் என்பதுதான் மகேந்திரன் குழுவின் தியரி” என்கிறார் மகேந்திரன்.

மகேந்திரா ஆர்ட் மிஷனுக்கு இந்த நேரத்தில் வந்து போக வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் கிடையாது. இங்கு வருபவர்கள் தங்கள் மனதில் பட்டதை வரைந்துவிட்டு அதை வீட்டுக்கும் எடுத்துச் செல்லலாம். வரைகலை உபகரணங்கள் அத்தனையும் ஆர்ட்மிஷனில் இருக்கும். ஏதாவது சந்தேகம் இருந்தால் அதைத் தெளிவுபடுத்த ஆசான்களும் இருப்பார்கள். இதுமாத்திரமல்ல, குழந்தைகளுக்குப் பிடித்தமான தின்பண்டங்களும் இங்கு இருக்கும். இத்தனை வசதிகள் இருந்தாலும் ஓவியம் படிக்க வருபவர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை.

மொழியும் ஓவியமும்

ஓவியம் கற்றுக்கொள்வதற்காகத் தனியான பாடத் திட்டம் ஒன்றையும் இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். வரையும் திறன் இருந்தாலும் மொழித்திறன் இல்லாததால் பலர் ஜொலிக்க முடிவதில்லை. அந்தக் குறையைப் போக்க, ஓவியம் வரையும் பயிற்சியோடு மொழித் திறனும் பயிற்றுவிக்கப்படுகிறது. “மந்தமாக இருந்த குழந்தைகளின் அறிவுத்திறனும் இங்கு வந்தபிறகு மேம்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அவர்களை மன இறுக்கத்திலிருந்து விடுவித்து மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றியது தான்” என்கிறார் மகேந்திரன்.

கட்டணம் வைத்துச் சொல்லிக்கொடுத்தாலோ காலத்தை நிர்ணயித்தாலோ அது ஒரு சம்பிரதாயச் சடங்காக மாறிவிடும். ஒரு நாள் ஓவிய வகுப்புக்குப் போகவில்லை என்றால் மாதம் இவ்வளவு ரூபாய் கட்டியது வீண் என்று வீட்டில் சலித்துக்கொள்வார்கள். அந்த அர்ச்சனைக்குப் பயந்துகொண்டு குழந்தைகளும் இளைஞர்களும், ஓவியப் பள்ளிக்குப் போய்க் கடமைக்கு எதையோ கிறுக்கி வைத்துவிட்டு வருவதை வழக்கமாக்கிவிடுவார்கள் என்பதால் கட்டணத்தையும் காலத்தையும் தவிர்த்துவிட்டது மகேந்திரா ஆர்ட்மிஷன்.

வெளியே சுதந்திரமாக வரையலாம்

நான்கு சுவர்களுக்குள் மட்டும் வைத்து ஓவியம் சொல்லிக் கொடுக்காமல் குழந்தைகளைப் பொது இடங்களுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் பார்ப்பதை அந்த இடத்திலேயே வரையச் சொல்லி, ‘வரைந்து மகிழுங்கள்’ என்று பார்வையாளர்களையும் ஊக்கப்படுத்துகிறார்கள். இதுமாத்திரமல்லாமல் முக்கிய இடங்களுக்கு அனுப்பி, அங்குள்ள தலைவர்கள் சிலைகள், பிற வரலாற்று சின்னங்கள் குறித்த தகவல்களையும் திரட்டி வரவைத்து அவர்களின் அறிவுத் திறனையும் மேம்படுத்துகிறார்கள்.

எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லை என்பதாலும் திறமை யானவர்கள் அங்கீகரிக்கப் படுகிறார்கள் என்பதாலும் இங்கு பலர் இயல்பூக்கத்துடன் வருகிறார்கள். ஆர்ட்மிஷன் பெரம்பூரில் இருந்தாலும் சென்னையில் புரசைவாக்கம், சூளைமேடு, சேப்பாக்கம், ஆர்.ஏ.புரம், கொளத்தூர் ஆகிய இடங்களில் தொடர்பு மையங்களையும் வைத்திருக் கிறார்கள்.

“தொடக்கத்தில் ஒரு புள்ளியில் தங்களது ஓவியத் திறனை வெளிப் படுத்து பவர்கள், அது கோடாக மாறும்போது தங்களையும் அறியாமல் பரவசமடைகிறார்கள். அந்தப் பரவசம் அவர்களின் மன இறுக்கத்தைப் போக்குகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தினருக்கு மட்டுமே நாங்கள் தந்து கொண்டிருக்கும் இந்தத் தன்னார்வ ஊக்கச் சேவையை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதுதான் எங்களுடைய எதிர்காலத் திட்டம்” என்கிறார் மகேந்திரன்.

தொடர்புக்கு: 9677110998

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்