சட்டப்பேரவையின் வரலாறும் சாதனைகளும்

By ஆதி

நேற்று நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், நாடு விடுதலை பெற்ற பிறகு நடைபெற்ற 15-வது சட்டப்பேரவைத் தேர்தல். தமிழக சட்டப்பேரவை நீண்ட வரலாற்றைக் கடந்து வந்துள்ளது, இந்தக் காலத்தில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது. இரண்டையும் பார்க்கலாம்

கொஞ்சம் சாதனைகள்

# நாட்டிலேயே சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சமூகசேவகரான டாக்டர் முத்துலெட்சுமி. 1927-ல் மதராஸ் மாகாண ஆளுநர் விஸ்கவுன்ட் காஷென், மதராஸ் சட்ட மேலவைக்கு முத்துலெட்சுமியை நியமனம் செய்தார். அப்போது சட்ட மேலவையின் துணைத் தலைவராகவும் டாக்டர் முத்துலெட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

# ராஜாஜி எனப்பட்ட சி.ராஜகோபாலாச்சாரி, மதராஸ் மாகாணத்துக்கு 1937-ல் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதல்வர் (அப்போது அதிபர்) என்ற பெருமையைப் பெற்றார். அதேபோல நாடு விடுதலை பெற்ற பிறகு 1952-ல் மீண்டும் அவர் முதல்வரானபோது, சட்டப்பேரவைக்குப் போட்டியிடாமலேயே முதல்வர் ஆனார். சட்ட மேலவையில் நியமன உறுப்பினராக இருந்ததன் மூலம், அவரால் இப்படி ஆக முடிந்தது.

# சட்டப்பேரவைக்கு (அன்றைய கீழவை) போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் ருக்மிணி லட்சுமிபதி. 1937 முதல் 1945 வரையிலான காலத்துக்குச் சட்டப்பேரவையின் துணை சபாநாயகராகவும் அவர் செயல்பட்டுள்ளார். 1946-ல் டி.பிரகாசம் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் ஆனதன் மூலம், மதராஸ் மாகாணத்தின் முதல் மற்றும் ஒரே பெண் அமைச்சர் அவரே. பின்னால், தமிழக மாநில எல்லையும் சட்டப்பேரவையும் மாறியதால் இப்படியானது.

# நாடு விடுதலை பெற்றபோது மதராஸ் மாகாண முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி, அவரது பெயரிலேயே ‘சென்னை அரசுத் தோட்டம்’ இப்போதும் அழைக்கப்படுகிறது.

# முதல்முறையாக அடுத்தடுத்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வர் ஆனவர் காமராஜர். அவர் வெற்றி பெற்ற தேர்தல்கள்: 1957, 1962.

கொஞ்சம் வரலாறு

# தமிழக சட்டப்பேரவை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தற்போது கூடிவருகிறது. சட்டப்பேரவையின் முன்னோடி அவையான சட்ட மேலவை, கோட்டைக்குள் இருக்கும் சபை அறையில் (counci# chambers) 1921-ல் முதன்முதலில் கூடியது.

# நாடு விடுதலை பெற்ற வெள்ளி விழாவைக் கொண்டாடும் விதமாக 1972 ஆகஸ்ட் 14-ம் தேதி சட்டப்பேரவையும் (கீழவை) சட்ட மேலவையும் கூடிய விழா நள்ளிரவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதைய ஆளுநர் கே.கே. ஷா உறுப்பினர்களிடையே பேசினார். விடுதலை நள்ளிரவில் வழங்கப்பட்டதால், இப்படிக் கொண்டாடப்பட்டது.

# 1997-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் வைர விழா, மாநிலச் சட்டப்பேரவையின் பவள விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், மாநில முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சி. சுப்ரமணியம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

# முதல்வர் பதவிக் காலத்திலேயே இறந்தவர்கள் அண்ணாவும் எம்ஜிஆரும். அண்ணா இரண்டு ஆண்டுகளும், எம்.ஜி.ஆர். 4 மாத இடைவெளியுடன் 10 ஆண்டுகளும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்கள்.

# தமிழகத்தில் இதுவரை ஐந்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்களில் முதல்வர் பதவி வகித்தவர் மு. கருணாநிதி மட்டுமே.

# இளம் வயதில் முதல்வர் பதவியை ஏற்றவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜெ. ஜெயலலிதா. 1991-ல் அவர் முதல்வர் பதவியேற்றபோது வயது 43. 1969-ல் மு.கருணாநிதி முதன்முறையாக முதல்வர் பதவியேற்றபோது அவருடைய வயது 44.

# தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் சென்னை மாநகராட்சி மேயராகவும் ஒரே நேரத்தில் (1996-2002) இருந்த பெருமையைப் பெற்றவர் மு.க. ஸ்டாலின்.

# இந்திய அரசாணை 1935-ன் படி, சென்னை மாகாண சட்டமாக்க அவை, சட்டமேலவை மற்றும் சட்டப்பேரவை என இரண்டு அவைகளாகப் பிரித்து உருவாக்கப்பட்டது. இதன் ஆயுட்காலம் 5 வருடங்கள் என வரையறுக்கப்பட்டது.

# 1965-ல் வெளியான நாடாளுமன்ற, சட்டப்பேரவை தொகுதிப் பங்கீடு ஆணையை அடுத்துத் தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 234 ஆக மாற்றப்பட்டது. இப்போதுவரை அது 234 ஆகவே தொடர்கிறது. பாதிக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி / கூட்டணி ஆட்சி அமைக்கும்.

# தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் குறைந்தபட்சமாக 24 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சருக்குரிய தகுதியைப் பெறுவார்.

# தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களைத் தவிர, ஆங்கிலோ-இந்திய நியமன உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்படுவார். விவாதங்களிலோ, பேரவை வாக்களிப்புகளிலோ அவர் பங்கேற்பதில்லை.

# ‘மதராஸ் மாநிலம்’ என்று அழைக்கப்பட்டுவந்ததைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் 1967 மார்ச் 1-ல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்டது. ‘மதராஸ் சட்டசபை’ எனும் பெயரும் ‘தமிழ்நாடு சட்டப்பேரவை’ என மாற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்