அத்தை மகளா, மாமன் மகளா ?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

நாம் ‘டைலமா’ என்ற சொல்லை விதவிதமான ​சூழல்களில் பயன்படுத்துகிறோம்.

‘மா​மா பொண்ணைக் கல்யாணம் செய்துக்கிறதா? இல்ல அத்தை பெண்ணைக் கல்யாணம் செய்துக்கிறதா? ரொம்ப டைலமாவா இருக்கு’.

‘ஒரே ​டென்ஷன். ரிலாக்ஸ் ஆக டி. ராஜேந்தர் நடிச்ச படம் பார்க்கலாமா? அல்லது பவர் ஸ்டார் நடிச்ச படம் பார்க்கலாமான்னு டைலமாவா இருக்கு’.

ஆக டைலமா என்பது இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற குழப்ப நிலையைக் குறிக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் dilemma என்ற வார்த்தைக்கு வேறொரு பரிமாணம் உண்டு.

‘இரண்டுமே (முழுமையாக) ஏற்க முடியாதவை. ஆனாலும் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்’. இந்த நிலையைத்தான் டைலமா என்போம்.

அப்படிப் பார்த்தால் நாட்டுக்குத் தேவை கட்டுப்பாடுகளா சுதந்திரமா என்பதுகூட டைலமாதான் இல்லையா?

அத்தை மகளையும் பிடிக்கவில்லை, மாமன் மகளை​யும் பிடிக்கவில்லை. ஆனாலும் இருவரில் ஒருத்தியை மணந்தாக வேண்டும் என்பதுதான் டைலமா.

பெர்னார்ட் ஷா எழுதிய ‘டாக்டர்ஸ் டைலமா’ என்ற ​நூல் பட்டப் படிப்பில் துணைப் பாடமாக எங்களுக்கு வைக்கப்பட்டிருந்தது (இன்னொரு துணைப் பாடம் ஷேக்ஸ்பியரின் ‘As you like it’. இந்த இரண்டு தலைப்புகளுமேகூட முரணாக இருக்கின்றன இல்லையா?)

இதில் டாக்டர் ஒருவர் தான் புதிதாகக் கண்டுபிடித்த காச நோய்க்கான மருந்தைச் சிலருக்கு அளிக்கத் தீர்மானிக்கிறார். இன்னும் ஒரே ஒருவருக்குத்தான் அந்த மருந்தை அளித்துக் குணப்படுத்த முடியும் என்னும் நிலை. ஒரு புறம் அவரது ஏழையான,

ச​மூகத்துக்குப் பயனில்லாத ஆனால் நல்லவரான நண்பர். இன்னொரு புறம் மட்டமான நடத்தை கொண்ட ஆனால் மிகச் சிறந்த ஓவியரான இன்னொருவர். (போதாக்குறைக்கு ஓவியனின் மனைவிமீதும் ஆர்வம் வந்து விடுகிறது டாக்டருக்கு!)

‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன், நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று’ என்கிற திரைப்பாடல் வரிகள்கூட ஒருவிதத்தில் டைலமாவைத்தான் வெளிப்படுத்துகின்றன.

டைலமாவோடு paradox என்ற வார்த்தையைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ‘அபத்தமாகவும் தோன்றுகிறது, உண்மையாகவும் இருக்கக்கூடும்’ என்பதுதான் paradox. ‘நடப்பதைவிட நின்றுகொண்டே இருப்பதுதான் அதிகக் களைப்பை உண்டு பண்ணும்’ என்பது இந்த வகை வாக்கியம்தான்.

‘இந்த வாக்கியம் பொய்யானது’ இதுவும் ஒரு paradox தான். ஏனென்று நீங்களே யோசியுங்கள்.

‘நலம் நலம் அறிய ஆவல்’ என்று தொடங்கும் பாடல் வரியின் அடுத்த வரியான ‘நீ இங்கு சுகமே, நான் அங்கு சுகமா?’ என்பதும் இந்த வகைதானே?

டைலமா, பாரடாக்ஸ் ஆகியவற்றின் சாயல் கொண்ட ஆனால் வேறு மாதிரி பொருள்களைத் தரும் வேறு சில வார்த்தைப் பயன்பாடுகளைப் பார்ப்போம்.

ஆங்கிலத்தில் Hobson’s Choice என்று ஒன்று உண்டு. உண்மையில் இதில் நமக்குத் தேர்வு செய்யும் உரிமையே கிடையாது. ‘வேணும்னா எடுத்துக்க. இல்லேன்னா போய்ட்டே இரு’ என்பது போன்ற நிலையைத்தான் நாம் எதிர்கொள்வதாக அர்த்தம். ஒரு பழைய திரைப்படத்தில் ‘என் பொண்டாட்டி கத்த நான் சும்மாயிருக்க, அப்புறம் நான் சும்மாயிருக்க அவ கத்த, வீட்ல ஒரே சண்டைதான்’ என்று ஒரு வசனம் வரும். அந்த மனைவி அளித்தது ஹாப்ஸன்ஸ் சாய்ஸ்!

இன்னொரு விசித்திரமான சொற்றொடரைப் பார்ப்போம்...

ஜான் மார்ட்டன் என்று ஒருவர் இருந்தார். இவர் கேன்டர்பரி என்ற பகுதிக்குப் பொறுப்பாளர். வரி வசூலிப்பது இவரது கடமை. அவர் இட்ட ஆணை இது:

‘யார் யாரெல்லாம் அதிகம் சேமிக்கிறார்களோ, அவர்களிடமிருந்து வரி வசூலிக்கலாம். அவர்களிடம்தான் சேமிப்பு இருக்கிறதே.

யார் யாரெல்லாம் தாராளமாகச் செலவு செய்கிறார்களோ அவர்களிடமிருந்தெல்லாம் வரி வசூலிக்கலாம். பணம் இருப்பதால்தானே அதிகமாகச் செலவழிக்கிறார்கள்’.

இது எப்படி இருக்கு? இதைத்தான் ஆங்கிலத்தில் Morton’s Fork என்பார்கள். அதாவது எதிரெதிர் வாதங்கள்தான். ஆனால் ஒரே முடிவுக்குதான் இரண்டும் வருகின்றன.

Morton’s Forkக்கு இதோ இன்னொரு எடுத்துக்காட்டு. எங்கள் பகுதியில் ஒரு பிரம்மாண்டமான speed breaker உண்டு. அதைக் கடக்கும்போது ஸ்கூட்டரை ஓட்டிய ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டார். ‘உன்னை வச்சுகிட்டு ஸ்பீட் பிரேக்கரைத் தாண்டுவது க​ஷ்டமா இருக்கு’ என்றார். பருமனான உடல்வாகு கொண்ட அவர் மனைவிக்கு இதில் கடும் கோபம். ‘அதோ பாருங்க அத்தனை பேரும் அவங்கவங்க மனைவியைப் பின்னாலே வச்சுகிட்டு எவ்வளவு சுலபமா இந்த ஸ்பீட் ப்ரேக்கரை தாண்டுறாங்க!’ என்றாள். அந்தப் பெண்மணி கூறியது (அவரையும் அறியாமல்) அவர் கணவர் கூறியதை நியாயப்படுத்துவது போல் அமைந்துவிட்டது இல்லையா? ஆக எதிரெதிரான வாதங்கள் ஒரே முடிவுக்கு வந்துள்ளன.

Beside - Besides

Beside என்பதை By the side of என்று கொள்ளலாம். அருகில் அல்லது அடுத்துள்ள என்பது இதற்குப் பொருள்.

The pen was beside the telephone என்றால் தொலைபேசிக்கு அருகில் அந்தப் பேனா இருந்தது என்று பொருள்.

Besides என்பதை, ‘தவிர’ அல்லது ‘மேலும்’ என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். He offered sweets besides ice cream எனும்போது இனிப்புகள் தவிர அவன் ​ ஐஸ்க்ரீமும் வழங்கினான் என்கிறோம். இதோ இன்னொரு எடுத்துக்காட்டு.

He is not a good match for our daughter. He is lean​​; Besides he is short too.

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்