எப்போது “God என்ற வார்த்தையை எழுதினாலும் அதன் முதல் எழுத்தான ‘G’ என்பது capital ஆக இருக்க வேண்டுமா?’’ இது ஒரு வாசகரின் கேள்வி. பொதுவாகக் கடவுள் என்று குறிக்கும்போது ‘G’ என்பதைக் capital-லில் குறிக்க வேண்டும்.
We all worship God.
Thank God.
May God bless you.
பன்மையில் குறிப்பிடும்போது ‘G’ என்பது சிறிய எழுத்தில் இருந்தால்போதும்.
We can see the idols of many gods and goddesses in this temple.
God என்று தொடங்கும் compound வார்த்தைகளும் உண்டு. இவற்றிலெல்லாம் ’G’ என்பது சிறிய எழுத்தாக இருக்கும்.
He is a godfather to him.
We are all god-fearing.
This is a godsend opportunity
FLAMMABLE INFLAMMABLE
பல பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் மேலே உள்ள இரண்டு வார்த்தைகளுக்கும் என்ன வித்தியாசமென்று கேட்டிருக்கிறார்கள். இந்தக் குழப்பம் இயல்பாக எழக்கூடிய ஒன்றுதான்.
இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். அது ‘எளிதில் தீப்பற்றக்கூடிய’ என்பது.
இதைச் சொன்னாலும் குழப்பம் முழுவதும் தீராது. “அது எப்படி? ஒரு வார்த்தைக்கு முன்னால் ‘in’ என்று சேர்த்தால் அது எதிர்மறைப் பொருளைத்தானே கொடுக்கும்? Adequate என்பதன் எதிர்ச்சொல்தானே inadequate? Visible என்பதன் எதிர்ச்சொல்தானே invisible? Ability என்பதன் எதிர்ச்சொல்தானே inability. Capable என்பதன் எதிர்ச்சொல் அல்லவா incapable?’’.
உண்மைதான். ஆனால், எப்போதுமே அப்படியில்லையே. Valuable என்ற வார்த்தையும், invaluable என்ற வார்த்தையும் ‘மதிப்புமிக்க’ என்ற ஒரே அர்த்தத்தைத்தானே தருகின்றன? Scribe என்ற சொல்லுக்கும் inscribe என்ற சொல்லுக்கும் ‘எழுதுவது’ என்ற ஒரே பொருள் உண்டே!
எனினும் இலக்கியத் தன்மையுடன் பயன்படுத்தப்படும்போது inflammable என்ற வார்த்தைதான் கையாளப்படுகிறது. Inflammable situation, inflammable speech.
**************
“My brother was shocked at the hotel tariff. It really shocked him to see what it would cost. He was in fact very shocked about it. “Do not be shocked’’, I said. My younger brother was shocked that we might not stay in the hotel. We found a cheaper hotel”.
இப்படி ஒரு பகுதியை அனுப்பியுள்ள வாசகர் எல்லா இடங்களிலும் shocked என்ற வார்த்தையையே பயன்படுத்துவது எரிச்சலாக இருக்கிறதே என்கிறார். ஐயா, இதற்காக நீங்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடைய வேண்டாம். கீழே உள்ளபடி எழுதலாமே.
“My elder brother was SHOCKED at the hotel tariff. It really STARTLED him to see what it would cost. He was in fact very HORRIFIED about it. “Do not be UPSET’’, I said. My younger brother was APPALLED that we might not stay in the hotel. We found a cheaper hotel’’.
“Encounter என்றால் சுடுவதா? காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டை மட்டும்தான் அப்படிக் குறிப்பிடுவார்களா?” என்று ஒரு நண்பர் கேட்டார்.
அடடா, காவல்துறையினர் அந்த வார்த்தைக்கு இப்படி ஒரு பரிணாம வளர்ச்சியைக் கொடுத்துவிட்டார்களே! ஆனால், உண்மையான அர்த்தம் அதுவல்ல.
Encounter என்றால் எதிர்பாராமல் ஒரு எதிர்ப்புச் சூழலைச் சந்திக்க நேர்வது. We have encountered a problem.
யாரையாவது எதிர்பாராமல் சந்திக்க நேர்வதையும் encounter என்பதுண்டு. We do not know about the people we encounter daily.
**************
“It is heavily raining”, “It is raining heavily” இரண்டுமே சரிதானே என்று கருத்து கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.
எப்படி (அதாவது how) என்ற கேள்விக்கு விடையாக ஒரு adverb இடம் பெறுகிறது என்றால் அந்த adverb-ஐ verb-க்குப் பின்னால் பயன்படுத்த வேண்டும்.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். He speaks.
அவன் எப்படிப் பேசுகிறான்? He speaks well. (He well speaks அல்ல).
அந்தப் பேருந்து செல்கிறது. The bus is moving.
அந்தப் பேருந்து எப்படிச் செல்கிறது? The bus is moving slowly. (The bus is slowly moving அல்ல).
எனவே It is raining heavily என்பதே சரியானது.
ஒரு வாக்கியத்தில் இரண்டு adverbகள் இருந்தால் எதை முதலில் போடுவது? எதை அடுத்து? அறிந்துகொள்வோம்.
அவள் நன்றாகப் பாடினாள் She sang well.
அவள் கச்சேரியில் பாடினாள். She sang in the concert.
இரண்டையும் சேர்த்து ‘அவள் கச்சேரியில் நன்றாகப் பாடினாள்’ என்பதை எப்படி எழுதுவது? She sang well in the concert என்பது சரியா? அல்லது She sang in the concert well என்பதா? இதற்கான விடையை அறிய adverb-ன் தன்மையை ஒரு குறிப்பிட்ட வரிசையில் மூன்றாகப் பிரித்துக்கொள்ளலாம்.
1. எப்படி என்ற கேள்விக்கான adverb. (Adverb of manner).
2. எங்கே என்ற கேள்விக்கான adverb. (Adverb of place).
3. எப்போது என்ற கேள்விக்கான adverb (Adverb of time).
முதல் வகை adverb-ஐ verb-க்கு மிக அருகிலும், மற்றவற்றை அடுத்தடுத்தும் பயன்படுத்த வேண்டும்.
I shall happily go there tomorrow என்பது எடுத்துக்காட்டு.
Adverbs-ன் வேறு சில கோணங்களைப் பிறகு அறிந்துகொள்வோம்.
# Cruise செய்வது என்றால் என்ன?
கடற்பயணம். அதுவும் திட்டவட்டமாக இங்கு செல்ல வேண்டும் என்றில்லாமல் ஜாலியாக மேற்கொள்ளப்படுவது.
# Destiny-destination வித்தியாசம் உண்டா?
Destiny என்பது தலைவிதி. Destination என்பது செல்ல வேண்டிய இடம் (குறிக்கோள்).
# Surfaced என்றால் என்ன?
தலைகாட்டியது. A dolphin surfaced. A problem surfaced.
ஆங்கிலம் அறிவோமே 101 பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் இவை.
1. CONE
2. CLONE
3. TONE
4. POSTPONE
5. STONE
6. THRONE
7. BACKBONE
8. ANYONE
9. HONE
10. OZONE
கேள்விகள் வெளியான அன்றே அத்தனை விடைகளையும் சரியாக எழுதி அனுப்பிய வாசகர்கள் பட்டியல் இது. பாராட்டுகள்.
(1) செண்பகம்,
(2) மரியா ஜோசப் ஜான் பாஸ்கோ,
(3) அகமது இஸ்மாயில், தூத்துக்குடி
(4) துரைராஜ் செல்லத்துரை, மாடம்பாக்கம், சென்னை
(5) ஆசன் ஜெசீமா
(வாசகர்கள் மின்னஞ்சலில் விடை அனுப்பும்போது தங்கள் ஊரின் பெயரையும் எழுதலாமே).
- தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago