ஆங்கிலம் அறிவோமே - 89: மிதக்கும் நகரம் எது?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

ஒரு வாசகர் “மதுவிலக்கு தொடர்பான செய்திகளில் sober என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். Sober என்றால் என்ன?’’ என்றுள்ளார்.

Sober என்றால் சீரியசாக இருப்பது என்று பொருள். மதுவின் ஆதிக்கம் இல்லாமை என்ற அர்த்தத்திலும் இதைப் பயன்படுத்துகிறார்கள். Sober colour என்றால் பளிச்சென்று இல்லாத மென்மையான வண்ணம் எனலாம். Sober என்பதை ஸோபெர் என்று உச்சரிக்க வேண்டும்.

போக்குவரத்துக் காவலர்கள், வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளை ‘ஊத’ வைத்து அவர்கள் மது அருந்தியிருக்கிறார்களா என்பதை ஒரு கருவியின் மூலம் கண்டுபிடிக்கச் செய்யும் சோதனையை Sobriety test என்பார்கள்.

இதைக் குறிப்பிடும்போது Sobriquet என்ற வார்த்தை குறித்தும் விளக்கத் தோன்றுகிறது. இந்த வார்த்தைக்கு செல்லப் பெயர் அல்லது காரணப் பெயர் என்று அர்த்தம் கொள்ளலாம். அதாவது அதிகாரபூர்வமான பெயர் அல்ல. ஆனால் இதைக் குறிப்பிட்டாலே பெரிய விளக்கம் தேவைப்படாமல் மக்கள் புரிந்து கொள்வார்கள். ‘‘கர்மவீரர் யார்?’’ என்றால் “காமராஜர்” என்பார்கள். ‘‘நைல் நதியின் கொடை எது?’’ என்று கேட்டால் “எகிப்து” என்பார்கள். ‘‘உலகின் சர்க்கரைக் கிண்ணம் எது?’ என்றால் “கியூபா” என்பார்கள். ஆனால் இன்னும் கொஞ்ச நாளைக்கு ‘‘மிதக்கும் நகரம் எது?’’ என்று கேட்டுவிட்டு, ‘‘வெனிஸ்’’ என்ற பதிலை தமிழகத்தின் தலைநகரவாசியிடம் எதிர்பார்க்காதீர்கள்.

Pseudonym என்பதற்கும் Sobriquet என்பதற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. Pseudonym நாமே வைத்துக் கொள்வது. தனது அடையாளம் வெளியே தெரிய வேண்டாம் எனும் காரணத்துக்காகக்கூட Pseudonym வைத்துக் கொள்பவர்கள் உண்டு. (Pseudo என்றால் பொய். nym என்பது name என்பதன் திரிபு). Sobriquet என்பது. பிறர் வைக்கும் பெயர். Nickname எனப்படுவதும் இதுதான்.

EXPECT HOPE LOOK FORWARD

‘Expect’ என்ற வார்த்தையும் ‘Look forward to’ என்ற வார்த்தையும் ஒரே பொருள் கொண்டவையா என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகசர். ‘Hope’ என்ற வார்த்தைகூட இந்த இரண்டுடன் சேர்த்து சிறிது குழப்பத்தைத் தரக்கூடியது என்பதால், மூன்றைப் பற்றியுமே அறிந்து கொள்வோமே!

I hope I get admission in that college.

I hope our baby is a girl.

Let us hope for the best.

இந்த வாக்கியங்களைப் படிக்கும்போது ‘hope’ என்பதன் பொருள் தெளிவாக விளங்கிறதல்லவா?. அதாவது ஒன்று நடைபெற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். ஆனால் அது நடக்கும் அல்லது நடக்காமலும் போகலாம்.

Expect என்ற வார்த்தையின் பயன்பாடு வேறுமாதிரி. Indian team is expected to win this match because it has practised well. நீங்கள் ஏதோ ஒன்று நடக்கும் என்று நினைக்கிறீர்கள். அதே சமயம் அது நடைபெற வேண்டும் என்பது உங்கள் ஆசை என்பதில்லை. The case is expected to last two years.

I hope to meet you next week in Chennai என்பதற்கும் I expect to meet you next week in Chennai என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிகிறதா?

Looking forward to என்பதன் பயன்பாடு வேறுமாதிரி. He is looking forward to inheriting his father’s property. I am looking forward to your eighteenth birthday.

நடந்தாலும் நடக்கும் என்பது போன்ற நிகழ்வுகளைக் குறிக்கும்போது ‘I look forward to’ என்பதைப் பயன்படுத்துவதில்லை. நிச்சயம் நடக்கப்போகிறது. அதற்காக நீங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது I look forward.

India is playing against South Africa today. I HOPE India can manage a victory. But South Africa is a stronger team; so I EXPECT its victory. Anyhow I am ‘LOOKING FORWARD’ to watch the game.

அதாவது

Hope - இப்படி நடந்தால் நன்றாக இருக்கும்

Expect - இப்படி நடக்கும் என்ற எதிர்பார்ப்பு (பிடிக்கிறதோ இல்லையோ)

Look forward to - இப்படி நிச்சயம் நடக்கப்போகிறது. அதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

“Atheist, Heretic ஆகிய இருவரில் சமூகத்துக்கு அதிகம் ஊறு விளைவிப்பவர் யார்?’’ இப்படி ஒரு கேள்வி வந்திருக்கிறது. ‘ஊறு’ என்பது அவர் செயல்படும் விதம் மற்றும் பார்ப்பவர் கண்ணோட்டத்தைப் பொருத்தது. மற்றபடி இந்த வார்த்தைகளின் அர்த்தங்களை அறிந்துகொள்வோம். Atheist என்பவர் நாத்திகர். கடவுளை நம்பாதவர். Heretic என்பவரும் அப்படித்தான். “ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் இவருக்குத் தனி வழி’’ என்பார்களே அப்படிப்பட்டவர்களைக் கூட heretic என்று அழைப்பதுண்டு. மதங்களுக்கு எதிராகச் செயல்படுபவரையும் heretic என்பார்கள்.

Iconoclast எனப்படுபவர் மேலும் ஒரு படி அதிகம். (தெய்வ) உருவங்களை உடைத்துத் தள்ளுபவர். (விக்ரக விநாசகர் என்று சொல்லலாம்)

VERACITY VORACITY

VERACITY என்பது துல்லியம். அதாவது உண்மையான, ஆதாரமான தகவல்களுக்கு பொருத்தமாக இருப்பது. Conformity to facts, accuracy:

He expressed doubts concerning the veracity of the story.

A veracious account என்றால் தில்லுமுல்லு இல்லாத கணக்கு என்று பொருள் கொள்ளலாம்.

VORACITY என்பது பேராசை அல்லது பெருவெறி.

Exposure to more and more oxygen increases the voracity of fire.

எனினும் இந்த வார்த்தையை எக்கச்சக்கமான உணவை உட்கொள்வதையோ அப்படிப்பட்ட வெறி கொண்டிருப்பதையோ குறிக்கும் வகையில்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

Voracious என்பதை நுட்பமாகவும் பயன்படுத்துவது உண்டு. She is a voracious reader என்றால் அவள் படிப்பதில் பேரார்வம் கொண்டவள் என்று அர்த்தம். தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவள் என்று அர்த்தம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்