ஆங்கிலம் அறிவோமே 87: உலகத்தின் உச்சியா நீங்கள்?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

ஒரு வாசகர் “Cloud பற்றி எழுதினீர்கள். Cloud nine என்பது குறித்தும் எழுதி இருக்கலாமே” என்கிறார். அதனால் என்ன, இப்போது எழுதிவிட்டால் போகிறது. ‘On cloud nine’ என்றால் மிக மிக மகிழ்ச்சியான ஒரு நிலை எனலாம். பரவச நிலை என்றாலும் தவறில்லை. He was on cloud nine after winning the competition. I was on cloud nine once I achieved it.

எதனால் பரவசத்தைக் குறிக்க மேகத்தையும், குறிப்பிட்ட எண்ணையும் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஆராய்ச்சியாளர்கள் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்கிறார்கள். சர்வதேச மேகங்கள் குறித்த அட்லஸில் பத்து வகை மேகங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவற்றில் ஒன்பதாவது வகை மேகங்கள் cumulonimbus என்ற வகையைச் சேர்ந்தவை. இவைதான் மிகப் பெரியவை. மிகவும் ஊதிய (பருத்த) வடிவத்தில் காட்சி தருபவை. அந்த அளவுக்கு எக்கச்சக்க மகிழ்ச்சி என்பதைக் குறிப்பிட இப்படிப் பயன்படுத்தினார்கள். ஒற்றை எழுத்து எண்களில் மிகப் பெரியது என்ற காரணத்தினாலும் ஒன்பதைப் பயன்படுத்தி இருக்கக்கூடும்.

Euphoria என்ற வார்த்தைக்கும் பரவசம் என்றுதான் அர்த்தம். A state of intense excitement and happiness. பேச்சுவழக்கில் ‘top of the world’ என்று நான் குறிப்பிடுவது இந்த நிலையை எனலாம்.

Ectasy, Frenzy ஆகிய இரு வார்த்தைகளும்கூடப் பரவச நிலையைக் குறிப்பவைதான். என்றாலும் Frenzy என்பதைக் கொஞ்சம் மலினமான பொருளில் பயன்படுத்துகிறார்கள். அதாவது தன்னை மறந்த நிலையில் கண்ணியமானவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத உடல் மொழியையோ, வார்த்தைகளையோ வெளிப்படுத்துவது. Ecstasy, Euphoria ஆகியவை கிட்டத்தட்ட ஒரே அர்த்தம் கொண்டவை. Frenzy என்பதற்கு இணையாக derangement, hysteria போன்றவற்றைக் கூறலாம்.

மற்றவர் கோணத்திலிருந்து ஒன்றைப் பார்ப்பதை Empathy என்பார்கள். அதாவது பிறரின் உணர்வுகளை அவர்கள் நிலையிலிருந்து யோசித்துப் புரிந்துகொள்வது. இது தொடர்பாக எனக்கு உண்டான ஒரு சுவாரசியமான அனுபவம் இது.

“செகப்பிரியர் ஒரு முறை கூறியதுபோல தைரியம்தானே நகைச்சுவையின் ஆத்துமா?’’ என்று ஒரு நண்பர் எனக்கனுப்பிய அஞ்சலில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பகுதியில் ஆங்காங்கே காணப்படும் நகைச்சுவை அணுகுமுறையைப் பாராட்டிவிட்டு முத்தாய்ப்பாகக் கடைசியில் அந்த வாக்கியத்தை எழுதியிருந்தார் அவர்.

அந்த வாக்கியத்தின் இறுதியில் அவர் ஒரே ஒரு கேள்விக்குறியைப் போட்டிருந்தாலும் என் மனதுக்குள் நிறைய கேள்விக்குறிகள் எட்டிப் பார்த்தன.

செகப்பிரியர்? ஷேக்ஸ்பியரை இப்படியும் சிலர் குறிப்பிடுவதுண்டு. (ஆங்கிலேயர்கள் நமது ஊர்களின் பெயர்களையெல்லாம் ஆங்கிலமாக்கவில்லையா அதுபோல). ஆனால் தைரியத்தையும் நகைச்சுவையையும் இணைத்து ஷேக்ஸ்பியர் கூறிய punch எனக்கு விளங்கவில்லை. அவரையே கேட்டுவிடலாமே (ஷேக்ஸ்பியரை அல்ல, அந்த நண்பரை) என நினைத்தபோது “வேண்டாம், நீயே யோசித்துக் கண்டுபிடி. உன் மூளையில் ஒரு பல்ப் எரியாமலா போய்விடும்?’’ என்று கார்ட்டூன்தனமாகக் கூறியது என் மனம்.

அப்போதுதான் Empathy-ஐப் பயன்படுத்தினேன். ஒருவேளை ஷேக்ஸ்பியரின் ஆங்கில வார்த்தை எதையாவது வாசகர் தவறாகப் புரிந்துகொண்டிருப்பாரோ?... பளிச். (பல்பு எரிந்தது).

இதைப் பின்னர் நண்பரிடம் பகிர்ந்துகொண்டபோது என் ஊகம் சரி என்பது தெரிந்தது. அவரது புரிதலிலுள்ள தவறுகளைக் குறிப்பிட்டபோது அவற்றை ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, இதை ‘ஆங்கிலம் அறிவோமே’ பகுதியில் நான் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றும் கூறினார் பெருந்தன்மையுடன்.

ஹாம்லெட் என்ற படைப்பில் ஷேக்ஸ்பியர் கூறியிருப்பது ‘Brevity is the soul of wit’. இதில் Brevity என்ற வார்த்தையை (Brave என்ற வார்த்தையுடன் தொடர்புபடுத்தி) தைரியம் என்று கருதியிருக்கிறார் நண்பர்.

ஆத்துமா என்பதை முதலில் ஆஸ்துமாவாகப் புரிந்துகொண்டு குழப்பமடைந்து பிறகு சரியான சொல்லை உணர்ந்துகொண்டது என் ஆத்மா.

Wit? ‘நகைச்சுவை’. அவன் நிறைய விட் அடிப்பான் என்று சிலர் கூறுவது இந்த அர்த்தத்தில்தானே? ஆக ‘தைரியம்தான் நகைச்சுவையின் ஆத்மா’ என்ற முடிவுக்கு ஷேக்ஸ்பியர் வந்துவிட்டதாக நண்பர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

ஆனால் இதில் உள்ள சில தவறுகளை நீங்கள் உணர்ந்தீர்களா?

Brave என்றால் தைரியமான அல்லது துணிச்சலான. அதன் noun வடிவம் braveness என்பது. Bravery என்பதும்தான்.

ஆனால் brevity என்பது வேறு. வளவளவென்று வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் சுருக் நறுக்கென்று பேசுவது அல்லது எழுதுவது. Shortness, crispness போன்றவற்றை brevity என்பதற்கு இணையான வார்த்தைகளாகக் குறிப்பிடலாம். சில சமயம் நேரக் குறைவைக் கொஞ்சம் தத்துவார்த்தமாகக் குறிப்பிடவும் brevity பயன்படுத்தப்படுகிறது. The brevity of human life.

Wit என்றால் நகைச்சுவை என்பதாகச் சிலர் புரிந்துகொண்டிருக்கிறோம் (என்னமா wit அடிச்சான்). ஆனால் wit என்பது நகைச்சுவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சட்டென்று புத்திசாலித்தனமாக ஒன்றைக் கூறுவது wit. இது நகைச்சுவையாகவும் இருக்கலாம். His sarcastic wit created laughter.

ஓர் எடுத்துக்காட்டு. எப்போதும் கிண்டலடிக்கும் ஒருவரை எதிர்பாராமல் இன்னொருவர் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். திகைத்து நிற்கும் முதல் நபரிடம் மூன்றாமவர், “Accept that some days you are the pigeon, and some days you are the statue” என்று கூறினால் அது wit.

இன்னொரு எடுத்துக்காட்டு ‘’நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா? அது stupid question ஆகக்கூட இருக்கலாம்” என்று ஒருவர் கூற, “The only stupid question is the question you don’t ask” என்ற மற்றவரின் வாக்கியம்.சொல்லப்போனால் கூற வேண்டுமென்பதுகூட இல்லை. வித்தியாசமாக யோசிப்பது, உடனுக்குடன் ஒன்றைப் புரிந்துகொள்வது ஆகியவை கூட wit-தான். He needed all his wits to decode the message.

Be at one’s wits’ end என்று ஒரு phrase உண்டு. இதற்குப் பொருள் எக்கச்சக்க பிரச்சினைகள் சுமையாக அழுத்துவதால் அடுத்து என்ன செய்வது என்றே தோன்றாத ஒரு நிலை. I am almost at my wits’ end trying to match my meagre income with expenditure.

Empathy எனக்கு உதவியது என்றேன். இதோ சிலர் கூறிய வாக்கியங்கள். எந்த அர்த்தத்தில் இவர்கள் இப்படிக் கூறியிருப்பார்கள் என்பதை empathyயோடு புரிந்துகொண்டு புன்னகைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவை சரியான விதத்தில் எப்படிக் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் யோசியுங்கள்.

1. I have taken many leaves in this month.

2. There is no enough wind in the football.

3. I talk. He talks. Why you middle middle talk?

4. Do not worry. I will catch an auto and go.

5. Keep quiet. The supervisor is rotating in the corridor.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்