உங்கள் கைகளை தூக்குங்கள்

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

கட்டிடம் உலகின் உயரமான கட்டிடம். துபாயில் உள்ள இதன் உயரம் 2,723 அடி. இந்தக் கட்டிடத்தை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?

This is a tall building எனலாமா? சரிதான்.

This is a high building எனலாமா? தவறில்லையே எனத் தோன்றுகிறதா? .

This is a large building என்று குறிப்பிடலாமா? அது விசாலமான கட்டிடமாகவும் இருந்தால் அப்படியும் சொல்லலாம் என்கிறீர்களா?

ஆனால் மற்ற எல்லாக் கட்டிடங்களையும்விட இது உயரமானது என்பதை உணர்த்தும் வாக்கியம் இவற்றில் எதுவும் இல்லையே. அப்படி உணர்த்தும் வகையில் கீழே உள்ள மூன்று வாக்கியங்களில் எது அமைந்திருக்கிறது?

(a) This is tallest building.

(b) This is highest building

(c) This is largest building.

தேர்ந்தெடுத்துவிட்டீர்களா? இவற்றில் எது உங்கள் விடையாக இருந்தாலும் அது தவறுதான். Superlative ஆகப் பயன்படுத்தப்படும் வார்த்தைக்கு (அதாவது ஒப்பிடுகையில் மிக உச்சமாக அல்லது மிகக் கீழானதாகக் கருதப்படும் வார்த்தைக்கு) முன்னால் ‘the’ என்பதைப் பயன்படுத்த வேண்டும்.

Tallest, highest, smallest, shortest, biggest, best, worst இப்படி எதுவாக இருந்தாலும், முன்னால் ‘the’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். Superlatives என்பவற்றின் இறுதி யில் -est என்ற எழுத்துகள் இருக்கும். அல்லது அது விவரிக்கும் வார்த்தைக்கு முன்னால் most என்ற வார்த்தை காணப்படும்.

‘Wish you all the very best என்பது சரியா?’ இப்படி ஒரு கேள்வியை மின்னஞ்சல் மூலம் கேட்டிருக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான வாசகர் ஒருவர்.

மனிதவள வகுப்புகளை நடத்தும்போது ‘உங்களால் முடிந்தவரை மிக அதிகமான உயரத்துக்கு உங்கள் இரு கைகளையும் தூக்குங்கள்’ என்று நான் கூறுவதுண்டு. அப்படி அவர்கள் தூக்கியவுடன் ‘மேலும் கொஞ்சம் உயரத்துக்குத் தூக்குங்கள்’ என்று சொல்லும் போது மிக அதிகமான முயற்சி எடுத்து அவர்கள் தங்கள் கைகளை மேலும் தூக்குவார்கள்.

உடனே நான், ‘அப்படியானால் முதல் முறை நீங்கள் முழுமையான முயற்சியை எடுக்கவில்லை என்று அர்த்தம் ஆகிறது. இப்படித்தான் பல விஷயங்களில் நாம் முழு முயற்சி எடுப்பதாக நினைத்துக் கொண்டு அப்படி எடுக்காமல் இருக்கிறோம்’ என்பதுண்டு.

Best என்பது என்ன? அது ஒரு உச்சத்தைக் குறிக்கும் வார்த்தை. அப்படியிருக்க very best எதற்காக? அப்படியானால் best-ஐ விட அதிகமாக ஒன்று இருக்க முடியுமா? இது முரணாக இருக்கிறதல்லவா? எனவே All the best போது மானது.

Awesome என்பதற்குப் பதிலாக awful என்று கூறி விட்டால் அது the worst mistake ஆகிவிடக் கூடும்.

இரண்டு வார்த்தைக்கும் அடிப்படையான awe என்பதற்கு வியப்பு கலந்த மரியாதை என்று பொருள். ‘They looked in awe’ என்பது இந்தப் பொருளில்தான். பின் எப்படி awesome, aweful போன்றவற்றின் அர்த்தங்கள் சம்பந்தமில்லாமல் மாறுபடுகின்றன என்று கேட்டால், அதுதான் ஆங்கிலம் என்றுதான் சொல்ல வேண்டும்!

Fair - Fare

Fair, Fare ஆகிய இரண்டு வார்த்தைகளும் சிலருக்குக் குழப்பம் அளிக்கக் கூடியவை. கண்காட்சி என்பதைக் குறிப்பிட எதைப் பயன்படுத்துவது? கட்டணம் என்பதைக் குறிக்க இவற்றில் எந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்? ‘நியாயமான’ என்பதைக் குறிக்க ஃபேர் என்கிறோம். இது அந்த இரண்டில் எது?

Fair என்றால் அது நியாய மான, திருப்தி அளிக்கக் கூடிய என்பதைக் குறிக்கும். This is a fair deal.

Fairness cream எனும் போது Fair என்பதைச் சிவப்பு என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம். (சிவப்பான, நியாயமான ஆகிய இரண்டுக்கும் ஒரே வார்த்தையைப் பயன்படுத்துவது ஆங்கி லேயரின் தோலின் நிறம் சார்ந்த மேலாதிக்க மனப் பான்மையைக் குறிப்பதாக இருக்க வாய்ப்பு உண்டு என்பது வேறு விஷயம்).

கண்காட்சியைக் குறிக்கவும் Fair என்பதைத்தான் பயன் படுத்துகிறோம். They went to the fair at island ground.

Fare என்பது கட்டணத்தைக் குறிக்கிறது. The bus fare is very high என்பது போல.

இதையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா என நினைத்து ‘Life is never fair’ என்று புலம்ப வேண்டாம். ஓரிரு முறை கவனமாகக் கையாண்டால் இது பழக்கமாகி விடும்.

அப்புறம் வழியனுப்பு நிகழ்ச்சியானது (அது ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ என்றோ ‘ஓ மனமே, ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்?’ என்றோ பாடியபடி நெகிழ்ச்சி யு டன் பிரிவதாகவும் இருக்கலாம்) farewell எனப்படுகிறது.

ஆனால் இதே ஆங்கில வார்த்தையைப் பிரித்துப் படித்தால் அதாவது fare well என்றால் அதன் அர்த்தம் வேறு. தேர்வுக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து ‘Fare well’ என்றால் ‘நன்றாகத் தேர்வு எழுது’ போட்டியில் நன்கு செயல்படுஎன்று பொருள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்