கட்டுப்பாடு என்றால் Discipline என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ஒரு வாசகருக்கு ‘Disciplines such as football, hockey’ என்று ஒரு நாளிதழ் குறிப்பிட்டிருப்பது குழப்பத்தை அளித்திருக்க வேண்டும். அந்த வாசகர் விளக்கத்தைக் கோரியிருக்கிறார். நியாயம்தான். கால்பந்துப் போட்டிகள் என்ன அவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்தவையா? பல கடுமையான சண்டைகள் உண்டாகி ரத்த ஆறு ஓடக் காரணமான விளையாட்டுதானே அது!.
ஆனால் discipline என்பது இங்கே வேறொரு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது நண்பரே. அறிவாற்றல் பெறக்கூடிய எந்த ஒரு பிரிவையும் discipline என்று கூறலாம். பெரும்பாலும் உயர் கல்விப் பிரிவுகளை இப்படிக் குறிப்பிடுவதுண்டு - Nanotechnology is a new discipline என்பது போல. என்றாலும் வாசகர் கூறியது போல விளையாட்டுப் பிரிவுகள், கலைப் பிரிவுகள் போன்றவற்றைக் குறிக்கவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது
Disciple என்றால் சீடன் என்பது தெரியுமல்லவா? டிஸிப்ளினோடு இருப்பவன் டிஸைபிள். Discipline-க்குப் பயிற்சி தேவை.
‘என் வீட்டில் தரைத் தளத்தைத் தவிர மேலே இரண்டு தளங்கள் உள்ளன. அப்படியானால் என் வீட்டில் உள்ளவை two floors-ஆ, three floors-ஆ? ’. இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் மற்றொரு வாசகர்.
(Floor என்றால் தளம். Flour என்றால் மாவு. Floored என்பதன் அர்த்தம் வேறு. அது ஒருவித உணர்வால் திக்குமுக்காடிப் போவதைக் குறிக்கிறது. செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. I am completely floored by his argument என்றால் அவர் பேச்சில் மயங்கிவிட்டீர்கள் என்று பொருள்).
சரி, வாசகரின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?
உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் அது ஒருவிதத்தில் சரி. காலகாலமாக நாம் தரைத்தளத்தை ground floor என்றும், முதல் மாடியை first floor என்றும்தான் கூறுவது வழக்கம். ஆனால் அமெரிக்கர்கள் ground floor-ஐ first floor என்பார்கள். எனவே அமெரிக்கர்களைப் பொறுத்தவரை வாசகரின் வீட்டிற்கு three floors. ஆங்கிலேயர்களைப் பொறுத்தவரை two floors. நாம் ஆங்கிலேயர்களின் மொழி வழக்கத்தைப் பின்பற்றி வருவதால், வாசகரின் வீடு two floors-ஐக் கொண்டது எனலாம்.
ஆக முன்னொரு அத்தியாயத்தில் நான் குறிப்பிட்ட British American ஆங்கில வேறுபாடுகளை மீண்டும் இங்கே தொட வேண்டியிருக்கிறது.
புத்தகங்கள் விற்கும் கடையை ‘Book stall’ என்று நாம் குறிப்பிடுகிறோம். அமெரிக்கர்கள் ‘News stand’ என்பார்கள்.
அமெரிக்க ஆசிரியர் ஒரு மாணவனின் கட்டுரையைப் படித்துவிட்டு ‘இதோ பார் இங்கே Period விடணும்’ என்று ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டினால், அந்த மாணவர் பள்ளிக்கூட மணியை அடிக்க விரைந்தோடக் கூடாது. முற்றுப்புள்ளியான Full stop என்பதைத்தான் அமெரிக்கர்கள் period என்கிறார்கள்.
நமக்கு biscuit அவர் களுக்கு cookie. Lorry என்று நாம் சொல்லும் வாகனம்தான் அமெரிக்கர்களைப் பொறுத்த வரை Truck.
Return ticket என்று நாம் அழைப்பது அமெரிக்கர்களைப் பொறுத்தவரை Round trip ticket எனப்படும்.
‘நம்ம ராபின் இப்ப எங்கே இருக்கான்?’ என்று ஒரு பள்ளி நண்பரைப் பற்றி விசாரிக்கிறீர்கள். ‘Casket-ல் இருக்கான்’ என்று பதில் வந்தால் ‘ஓ அப்படியா, அவனைப் பார்த்து ரொம்ப நாளாச்சு, நாளைக்கே பார்க்கிறேன்’ என்று பதிலளிக்கக் கூடாது. அப்படிச் சொன்னால் அந்த அமெரிக்கர் விதிர்விதிர்த்துப் (இந்த வார்த்தையைக் கடைசியாக எப்போது படித்தீர்கள்?) போவார்.
அதே சமயம் மஸ்கட் என்ற வார்த்தையை நாம் Casket என்று தவறாகப் புரிந்து கொண்டு விட்டோமோ என்றும் குழம்பக் கூடாது. Casket என்றால் கல்லறைப் பெட்டி என்று அர்த்தம். நமக்கு coffin என்னும் பிரிட்டிஷ் ஆங்கில வார்த்தைதான் பழக்கம் இல்லையா?
Sensitive Sensible Sensuos
இந்த மூன்று வார்த்தை களுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். மாற்றிப் பயன்படுத்தினால் விபரீதங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.
Sensible என்றால் அர்த்தமுள்ள, ஏற்றுக் கொள்ளக்கூடிய என்று பொருள். This is a sensible film. She is a sensible lady என்பதுபோல.
Sensitive என்றால் மிக நுட்பமான என்று அர்த்தம். This is a sensitive decision என்பதுபோல. தொட்டால் சிணுங்கிகளை Sensitive persons என்று குறிப்பிடுவது உண்டு.
Sensuous என்றால் பாலியல் கவர்ச்சி நிரம்பிய என்று பொருள். She is a sensuous woman என்றால் பல ஆண்களும் அவள் திசையை நோக்கித் தூண்டில் வீசுவார்கள் அல்லது வீச ஆசைப்படுவார்கள்.
இவை Sensitive விஷயங்கள் என்பதால் sensible ஆக யோசியுங்கள். இந்த வார்த்தைகளை மாற்றிப் பயன்படுத்தினால் என்ன மாதிரி விபரீதங்கள் உண்டாகலாம் என்பது விளங்குகிறது அல்லவா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago