ஆங்கிலம் அறிவோமே - 85: காட்சிப் பிழையா, கானல் நீரா?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

நம் நாட்டின் பெயரைக் குறிப்பிடும்போது India என்கிறோம். அதற்கு முன்னால் the சேர்ப்பதில்லை. We live in India. மாறாக We live in the India என்பதில்லை. அப்படித்தான் பிற நாடுகளையும் (முன்னால் the சேர்க்காமல்) குறிப்பிடுகிறோம். ஆனால் அமெரிக்காவை மட்டும் எதற்காக the United States of America என்று குறிப்பிட வேண்டும்?

இந்தக் கேள்வியைச் சிலர் கேட்டிருக்கிறார்கள். அதற்கான விளக்கம் இதோ.

நீங்கள் இப்படிச் சொல்வதாக வைத்துக் கொள்வோம். “I met a tennis player yesterday. The tennis player smiled at me.”

இதில் ‘the’ என்பது எதைக் குறிக்கிறது? நேற்று நீங்கள் சந்தித்த அந்தக் குறிப்பிட்ட டென்னிஸ் விளையாட்டுக்காரர் உங்களைப் பார்த்துப் புன்னகைத்தார் என்பதைத்தான். (வேறு யாரோ ஒரு டென்னிஸ் வீரர் அல்ல).

அதாவது ‘the’ என்பது ஒருவிதத்தில் தனிமைப்படுத்தி அடிக்கோடிடும் வார்த்தை. ‘ரோஜாப்பூக்கள் எனக்குப் பிடிக்கும்’ என்றால் I like roses. I like the roses என்றால் குறிப்பிட்ட ரோஜாப் பூக்கள் எனக்குப் பிடிக்கும் என்று அர்த்தம். அவை அப்போது அவர் கண்களில் படும் குறிப்பிட்ட ரோஜாக்களாக இருக்கலாம்.

பொதுவாக அமெரிக்கா என்று நாம் USA என்ற தேசத்தைக் குறிப்பிடுகிறோம். ஆனால் அமெரிக்கா என்பது ஒரு பெரிய நிலப்பரப்பு. அது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று இரண்டு கண்டங்களாக இருக்கிறது.

ஆக அமெரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர் ஆகியவையெல்லாம் proper nouns. எனவே இவற்றை எழுதும்போது முன்னால் ‘the’ சேர்ப்பதில்லை.

தொடக்கத்தில் வட அமெரிக்காவில் இருந்த 13 காலனிகள் ஒன்றாக இணைந்தன. தங்களை ‘the United States of America’ என்று குறிப்பிட்டுக் கொண்டன. அதாவது இவை அமெரிக்காவிலுள்ள குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே. (The roses என்றால் குறிப்பிட்ட ரோஜாக்கள் போல. The tennis player என்றால் குறிப்பிட்ட டென்னிஸ் விளையாட்டுக்காரர் போல)

United States of America என்பதும் ஒரு வகையில் proper nounதான். ஆனால் ஒருவிதத்தில் அது description- கூட. எனவேதான் மேற்கூறிய அர்த்தத்தில் the United States of America என்று கூறப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயத்தை கவனித்தீர்களா? அந்த நாட்டின் பெயரை எழுதும்போது ‘the United States of America’ என்றுதான் குறிப்பிடுகிறோம். ‘The United States of America’ அல்ல. அதாவது ‘the’ என்ற வார்த்தையில் ‘t’யை capitalஆகப் பயன்படுத்தவில்லை.

STAFF

“Staffs என்பது சரியா? ஒரு கல்லூரியில் இந்த வார்த்தையை அறிவிப்புப் பலவையில் படித்தேன். கல்விச் சாலையிலேயே இப்படி ஒரு தவறா?’’ என்று நெஞ்சம் கொதித்திருக்கிறார் ஒரு வாசகர்.

ஊழியர்களைக் குறிப்பிட staff என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். Medical staff, teaching staff, members of staff, staff training. வட அமெரிக்காவில் கல்விச் சாலைகளில் (school, college, university) பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்களை இப்படிக் குறிப்பிடுகிறார்கள். Students, faculty and staff of this college. இப்படி staff என்ற ஒருமை போன்ற வார்த்தையைத்தான் நாம் நெடுங்காலமாகப் பயன்படுத்திவந்திருக்கிறோம்.

Collective Noun என்பது ஒருமை போலக் காட்சியளிக்கும் பெயர்ச்சொல் எனினும் பலரை அடக்கியது. சில எடுத்துக்காட்டுகள் family, army, crowd. இந்த வரிசையில் இடம் பெறக் கூடிய மற்றொரு வார்த்தை staff. இது போன்ற வார்த்தைகளை ஒருமையாக எண்ணி வாக்கியங்களை அமைக்க வேண்டுமா? அல்லது பன்மை போலவா? ஒருமையாகத்தான்.

The family is very happy. The family consists of four members. The crowd has disbursed.

(Collective Nouns பற்றி வரும் பகுதிகளில் மேலும் விரிவாகப் பார்ப்போம்)

அப்படியானால் staff என்பதையும் ஒருமை போலத்தான் பயன்படுத்த வேண்டுமா? பொதுவாக அப்படித்தான். The staff IS very efficient.

ஆனால் அதிலுள்ள தனி நபர்களின் வெவ்வேறு செயல்களைக் குறிக்கும்போது பன்மையில் குறிப்பிடுவோம். The staff ARE working on many projects.

இப்போது வாசகரைக் கொதிக்க வைத்த பகுதிக்கு வருவோம். Staffs என்ற வார்த்தையே இல்லையா? உண்டு.

STAFF என்ற வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு.

முதியவர்கள் நடக்கும்போதும், படியேறும்போதும் உதவும் தடியை staff என்று குறிப்பிடுவதுண்டு. காவல் துறையினர் உபயோகப்படுத்தும் லத்தி எனப்படும் தடியையும் staff என்பாரகள். கொடி ஏற்றப்படும் கொடி மரத்தையும் staff என்று குறிப்பிடுவதுண்டு. மேற்படி அர்த்தங்களில் staffs என்ற பயன்பாடு உண்டு. Flagstaffs எனலாம்.

Humbleness Humility

Humbleness, Humility என்பதில் எது சரி? இரண்டுமே வழக்கத்தில் உள்ள வார்த்தைகள். இரண்டுக்குமே அடிப்படை வார்த்தை Humble. இரண்டுமே nouns- தான். என்றாலும் பயன்பாட்டில் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.

Humbleness என்றால் பணிவு. அதாவது இயல்பாகவே ஒருவருக்கு இருக்கும் நல்ல குணம். Please accept my humble apologies. சமூக அளவிலோ பொருளாதார அளவிலோ கொஞ்சம் பின்தங்கிய பிரிவினரை He comes from a humble background என்பதுபோல் குறிப்பிடுவதுண்டு.

ஒருவர் கர்வம் பிடித்தவராக இருக்கிறார். சரியான பதிலடி மூலம் அவருக்கு ‘கற்றுத்தரப்பட்ட பணிவு’ என்றால் அது humility. Humiliation என்றால் கவுரவம் இழத்தல். Humbleness இல்லாமல் இருப்பவர்களுக்கு humiliation நேரலாம்.

Mirage என்பது பாலைவனச் சோலையைக் குறிக்கிறதா என்று ஒருவர் கேட்டிருக்கிறார். இல்லை. அது கானல் நீரைக் குறிக்கிறது.

பாலைவனத்தில் தொலைவில் ஓரிடத்தில் தண்ணீர் இருப்பதைப் போலத் தோன்றும். ஆனால், அருகில் போனால் அப்படி எதுவும் இருக்காது. டக்கென்று பார்த்தால் ஏமாற்றம் தருகிற தோற்றத்தைக்கூட (Optical Illustion) Mirage என்போம்.

Mirage என்பதை ‘மிராஜ்’ என்றுதான் உச்சரிக்கவேண்டும்.

Mirage என்பதைத் தோற்றப் பிழை எனலாம். Optical illusion.

அடைய முடியாத ஆசையைக் கூட Mirage என்பார்கள். Democracy In Afghanistan Seems To Be A Mirage என்றும் அதைச் சொல்லலாம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்