ஒரு வாசகர் தன்னுடைய கடிதத்தில் Even Homer Nods என்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி என்றால் என்ன?
ஹோமர் என்பவர் கிரேக்க நாட்டில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் பிரபலமான கவிஞர். காவியங்களாகக் கருதப்படும் இலியட், ஒடிஸி போன்றவற்றை எழுதியவர். ஹொரேஸ் என்பவர் ஹோமரின் நூலில் ஒரு தவறைக் கண்டுபிடித்தார். கொலை செய்யப்பட்ட ஒரு கதாபாத்திரம் பின்னொரு பகுதியில் உயிரோடு இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. இதுபற்றிக் குறிப்பிடும்போது லத்தீனில் ஒரு வாக்கியத்தை வெளிப்படுத்தினார் ஹொரேஸ். அதன் பொருள் ‘மகாகனம் பொருந்திய ஹோமர் கூட தலையசைக்கிறார்’ என்பது. இங்கே தலை அசைவு என்பது தூங்கிவிழும் தலையை குறிக்கிறது. ‘யானைக்கும் அடி சறுக்கும்’ எனும் தமிழ் பழமொழியின் பொருளில் பொதுவாக இது பயன்படுத்தப்படுகிறது.
கீழே சில ஆங்கிலப் பழமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான தமிழ்ப் பழமொழிகளை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.
1.Walls have ears.
2.Spare the rod and spoil the child.
3.Make hay while the sun shines.
4.Face is the index of mind.
5.Too much of anything is good for nothing.
6.A bird in the hand is worth two in the bush.
7.Pride comes before fall.
8.Every dog has its day.
9.Different strokes for different folks.
10.Habits die hard.
TISSUE
Tissue என்பது நம் உடலின் பகுதி. உயிரினங்களின் உடலிலுள்ள ஒரே மாதிரியான செல்களை tissue என்போம். அதை திசு என்கிறோம்.
tissue என்பது ஒருமையா, பன்மையா ? அதன் பன்மைச்சொல் tissueவா? அல்லது tissuesஆ?
குறிப்பிட்ட வகை திசுக்களை மட்டுமே குறிக்கும்போது tissue என்கிறோம். Cardiac tissue, scar tissue என்பதுபோல. பலவகை திசுக்களை இணைத்துக் குறிக்கும்போது tissues என்கிறோம். The accident damaged the tissues in his legs.
அந்தக் காலத்து பிரெஞ்ச் மொழியில் இடம் பெற்ற ‘tissu’ என்ற வார்த்தைக்கு ரிப்பன் அல்லது பெல்ட் அல்லது நெய்த பொருள் என்று அர்த்தம். திசு என்ற அர்த்தத்தில் நாம் பயன்படுத்தும்போது tissue என்பது ஒரே மாதிரியான செல்களால் ‘நெய்யப்பட்டது’ என்பதைக் குறிப்பிடுகிறோம். Scar tissue protects a wound as it heels.
மூக்கையும் கண்களையும் கைகளையும் துடைத்துக்கொள்ளும் மிக மிருதுவான தாளையும் tissue (Tissue paper!) என்கிறோம். அர்த்தத்தை யோசித்தால் ஒற்றுமை விளங்கிவிடும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகள் இதோ. இணையான வேறு தமிழ்ப் பழமொழிகளை நீங்கள் கண்டுபிடித்திருந்தாலும் ஓகேதான்.
1. அக்கம் பக்கம் பார்த்துப் பேசு.
2. அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவார்களா?
3. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்.
4. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
5. அளவுக்கு மீறினால் அமுதமும் விஷம்.
6. மரத்தில் உள்ள பலாக்காயைவிட கையில் உள்ள களாக்காயே மேல்.
7. கேடு வரும் பின்னே மதி கெட்டுவரும் முன்னே.
8. யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கு ஒரு காலம்.
9. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும். பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்.
10. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
PRESCRIBE PROSCRIBE
Prescribe என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் - ஒன்றைப் பரிந்துரைப்பது. டாக்டரின் prescription என்பது அவர் பரிந்துரைக்கும் மருந்துகள்.
Impose என்ற அர்த்தத்தில் (பரிந்துரை என்பதைவிடவும் அதிகப்படி. கட்டாயம் செயலாக்கப்பட வேண்டும் என்பதுபோல்) கூட prescribe என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதுண்டு. Rules prescribed by the government have to be carried out.
This medicine is proscribed in this country என்று ஒரு வெளிநாட்டு விளம்பரத்தைக் கண்டால் அந்த நாட்டுக்குச் செல்லும்போது மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துச் சென்றுவிடாதீர்கள். Proscribe என்றால் தடை செய்யப்பட்டது என்று அர்த்தம். இங்குள்ள டாக்டர்கள் அதை prescribe செய்திருந்தாலும், அந்த நாட்டில் அது proscribe செய்யப்பட்டிருப்பதால் உள்ளே தள்ளிவிடுவார்கள், கவனம்.
ஒரு நண்பர் “Sabbatical leave என்றால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார்.
ஒவ்வொரு ஏழாவது வருடமும் நிலத்தை (விவசாயம் செய்யாமல்) அப்படியே விட்டுவிட வேண்டும். Sabbatical year எனப்படும் இந்த வருடத்தில் தானாகவே ஏதாவது விளைச்சல் உண்டானால் அதை நிலத்தின் சொந்தக்காரர் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதை ஏழைகளுக்கு அளித்துவிட வேண்டும். இது பத்து கட்டளைகளைச் சுமந்து வந்த மோசஸின் ஒரு விதி எனப்படுகிறது.
வழக்கத்தில் நீண்டகால ஓய்வு என்பதை Sabbatical leave என்கிறார்கள்.
தொடக்கத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்குத்தான் இது வழங்கப்பட்டது. அதாவது மேற்படிப்புக்காக அவர்கள் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொள்வார்கள். அந்தக் காலகட்டத்துக்கு அவர்களுக்குச் சம்பளமும் உண்டு.
இப்போது சில நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு Sabbatical leave அளிக்கின்றன. பிரசவத்துக்குப் பிறகு ஓரிரு வருடங்களுக்கு பெண் ஊழியர் தன் குழந்தையை முழுவதுமாக கவனித்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். அல்லது மேற்படிப்பு படிக்க விரும்பும் ஓர் ஊழியரை முழுவதும் இழக்க விரும்பாத எண்ணம் நிறுவனத்துக்கு இருக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு நீண்டகால விடுப்பு கொடுக்கிறார்கள். விடுப்பு காலத்தில் ஓரளவு ஊதியம் வழங்கப்படலாம் அல்லது ஊதியம் நிறுத்தப்படலாம். ஆனாலும் அவர் அந்த நிறுவனத்தின் ஊழியராகத் தொடர்கிறார்.
ஒரு வாசகர் He is the personification of laziness எனும் வாக்கியத்தில் personification என்றால் என்ன அர்த்தம் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
Personification என்றால் உயிரற்ற ஒரு பொருள் அல்லது தன்மையை உருவ(க)ப்படுத்துவது. அதாவது வாசகர் குறிப்பிட்ட வாக்கியத்துக்கு “அவன் சோம்பலின் மொத்த உருவம்” என்று அர்த்தம். அதாவது ஒவ்வொரு அணுவிலும் சோம்பல் என்றால் அது அவன்தான் என்று அர்த்தம்.
“மேகங்கள் கண்கலங்கும். மின்னல் வந்து துடிதுடிக்கும். வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்”. எம்.ஜி.ஆர். மரணப்படுக்கையில் இருக்கும்போது தெருவுக்குத் தெரு ஒலித்த மேற்படி திரைப்படப் பாடல் வரிகளில் காணப்படுவது personificationதான். (‘கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது’ என்பது கூட personificationதானே என்று கேட்கக் கூடாது.)
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago