ஆங்கிலம் அறிவோமே 281: அறியாமையால் கற்பனை செய்கிறார்!

By செய்திப்பிரிவு

கேட்டாரே ஒரு கேள்வி

“பாராட்டும் வகையில் நாம் அளிக்கும் பூங்கொத்தை wreath என்றும் குறிப்பிடலாமா?”

‘என்றும்’ என்று நீங்கள் குறிப்பிடுவதால் பூங்கொத்தைப் பொதுவாக bouquet என்று குறிப்பிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.

Wreath என்பது வட்ட வடிவிலுள்ள கொத்து. இதில் பூக்களோடு இலைகளும் (சில கனிகளும்கூட) இருக்கலாம். கொண்டாட்டங்களுக்கும் இதைப் பயன்படுத்துவதுண்டு. என்றாலும் இங்கு ‘மலர் வளையம்’ என்பதை எதோடு இணைத்துப் பார்க்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்.

*********************

“Duck என்றாலும், duckling என்றாலும் ஒன்றுதானே?”

நண்பரே. duck என்பது பெண் வாத்து. Duckling என்பது ‘குஞ்சு வாத்தைக்’ குறிக்கிறது. அப்படியானால் ஆண் வாத்துக்குத் தனிப்பெயர் உண்டா என்கிற உங்கள் mind voice எனக்குக் கேட்கிறது. ஆண் வாத்தை Drake என்பார்கள்.

வேறு சில விலங்குகளின் குடும்பப் பெயர்களையும் அறிந்துகொள்வோமே. சிங்கக் குட்டி, கரடி குட்டி, புலிக்குட்டி, நரிக்குட்டி எல்லாவற்றையுமே cub என்றுதான் அழைப்பார்கள்.

கன்றுக்குட்டியின் பெயர் என்ன என்றால் calf என்று கூறிவிடுவீர்கள். யானைக்குட்டியின் பெயர் என்ன தெரியுமா? அதுவும் calfதான்.

கர்ணப் பரம்பரைக் கதையின்படி ஆமையிடம் போட்டியில் தோற்ற முயலை hare என்று பொதுவாகச் சொல்வோம். அது ஆண் முயலாக இருந்தால் buck என்றும், பெண் முயலாக இருந்தால் doe என்றும் குறிப்பிடுவோம்.

*********************

“Kidding என்றால் என்ன?’’

Are you kidding? என்றாலோ, You are kidding, right? என்றாலோ ‘’என்ன கிண்டலா?’’ என்பதற்குச் சமம்.

Kid என்பது ஆட்டைக் குறிக்கும் சொல்.

Transfer, transmit இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?” என்கிறார் ஒரு வாசகர்.

Transmit என்றால் எதையோ அனுப்புவது. சிலநேரம் அது எங்கு சென்றடையும் என்பதுகூடத் தெளிவுபடாமல் இருக்கலாம். எடுத்துக்காட்டு, TV Transmission.

Receive என்பது transmit என்ற தொடக்கத்தின் அடுத்த கட்டம்.

Transmit, receive இரண்டும் இணையும்போது அது transfer. அதாவது transfer என்றால் அதில் transmission, reception இரண்டுமே அடக்கம். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்தை சென்றடையும் செயல்முறை வெற்றிகரமாக நடந்துவிட்டது என்று பொருள்.

*********************

She is one of the women that HAS ever lived என்பது சரியா அல்லது

She is one of the women that HAVE ever lived என்பது சரியா?

Singular என்றால் has வரும். Plural என்றால் have வரும்.

வாக்கியத்தைத் தமிழில் எழுதுங்கள். இதுவரை வாழ்ந்த பெண்களில் அவளும் ஒருத்தி. ஆக ‘வாழ்ந்த பெண்களில்’ என்றுதான் வருகிறது. எனவே அது plural. எனவே வாக்கியம் She is one of the women that HAVE ever lived.

*********************

Fiction is an imaginary story என்று நான் கூறியபோது ‘அப்படிச் சொல்லக் கூடாது. Fiction என்றால் imaginative story’ என்கிறார் நண்பர். எதனால்?”

அறியாமையினால்தான்! Imaginary என்றால் கற்பனையான அதாவது உண்மையில் நடக்காத. Imaginative என்றால் ஒரு creativity-ஐ வெளிக்காட்டுவது.

*********************

பல அகராதிகளில் sb, sth என்றெல்லாம் பலவிதங்களில் குறிப்பிடுகிறார்களே, இதற்குப் பொருள் என்ன?

Someone (somebody) என்பதைக் குறிக்கிறது sb. Something என்பதைக் குறிக்கிறது sth. அதாவது shut off (sth) என்று குறிப்பிட்டால் எதையோ shut off செய்வது (shut off something) என்று பொருள். Wrestle with (sb) என்றால் யாருடனோ குத்துச்சண்டை போடுவது என்று அர்த்தம். Swh என்றால் somewhere என்று பொருள்.

*********************

போட்டியில் கேட்டுவிட்டால்

The bus stand is directly _________ the police station.
(a) around
(b) in
(c) away
(d) nearby
(e) behind

Directly away என்று இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் away from என்று இருந்தாக வேண்டும்.

காவல் நிலையத்துக்குள் பேருந்து நிலையம் இருக்க முடியாது. எனவே in என்பதும் தவறாகிறது.

Directly என்பது நேர் என்பதைக் குறிக்கிறது. அப்படி இருக்கும்போது nearby என்ற தோராயமான வார்த்தை அதனுடன் ஒத்துப் போகாது. இதே அடிப்படையில் around என்பதையும் ஏற்க முடியாது.

எனவே பேருந்து நிலையம் காவல் நிலையத்துக்கு நேர் பின்னால் இருக்கிறது என்ற பொருள்படும் The bus stand is directly behind the police station என்பதுதான் சரியானது.

சிப்ஸ்

# Ransom என்றால்?
பணயக் கைதியை விடுவிப்பதற்காகக் கேட்கப்படும் தொகை.

# Loose cannon என்று ஒருவரைக் கூறினால் அவர் எப்படிப்பட்டவர்?
நம்ப முடியாதவர், அபத்தமானவர்

# I looked at me​in the mirror என்பது சரியா?
I looked at myself in the mirror என்பதுதான் சரி.


- ஜி.எஸ்.எஸ்.,
தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்