எதிரும் புதிருமான சொற்கள்

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

ஒரு தொலைக்காட்சி சானலில் சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுக்கும் போட்டிக்கான மூன்று நீதிபதிகளில் ஒரு பின்னணிப் பாடகியும் உண்டு. யாராவது மிகச் சிறப்பாகப் பாடினால் முகத்தில் பரவசம் தோன்ற ‘It is too good’ என்று சொல்வது அவர் வழக்கம்.

ஆங்கிலத்தில் very, too ஆகிய சொற்களை ஒரே பொருளில் பயன்படுத்துவதில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுமே ஒருவர் அல்லது ஒரு பொருளைக் குறித்த நமது அதிகப்படியான உணர்வை வெளிப்படுத்துவதுபோல இருந்தாலும், இவற்றுக்கிடையே ஒரு முக்கிய வேறுபாடு உண்டு.

Very என்பதைப் பயன்படுத்தும்போது அது ஓர் இயல்பான வாக்கியம். அவ்வளவுதான்.

She is very tall என்பது ஒரு வாக்கியம், அவ்வளவே. வேண்டுமானால் ‘கூடைப் பந்து அணியில் அவளைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்’ என்பது போன்ற சற்றே ஆக்கபூர்வமான அர்த்தம் அதில் தொனிக்கலாம்.

She is too tall எனும் வாக்கியம் வெறும் வாக்கியம் மட்டும் அல்ல. அதில் மறைமுகமாக ஒரு குற்றச்சாட்டு அல்லது பிரச்சினை தொனிக்கிறது. அதாவது ‘இவ்வளவு உயரமாக இருந்தால், மாப்பிள்ளை தேடுவது கஷ்டம்’ என்பதுபோல.

‘The suitcase is very big’ என்பதற்கும் ‘The suitcase is too big’ என்பதற்கும் உள்ள வேறுபாடு இப்போது புரிகிறது அல்லவா?

முதல் வாக்கியம் அது ஒரு பெரிய பெட்டி என்பதைக் குறிப்பிடுகிறது. அதிகபட்சம் அதைப் பற்றிக் கொஞ்சம் உயர்வாகக் குறிக்கிறது எனலாம் (அதிகப் பொருட்களை அதில் திணிக்க முடியும்).

இரண்டாம் வாக்கியம் ‘ஐயோ, இது ரொம்ப பெரிய பெட்டி. இதைத் தூக்குவது ரொம்ப கஷ்டம்’ என்பதுபோல் பொருள் தருகிறது.

அதாவது ‘அவன் மிகவும் நேர்மையானவன்’ என்பதைக் குறிக்க very என்ற சொல்லையும், ‘அவன் ஆனாலும் நேர்மையானவன்!’ என்பதைக் குறிக்க too என்ற சொல்லையும் பயன்படுத்துவோம்.

இந்த விதத்தில் பார்த்தால் ‘The fruit is too sweet’ என்பதுகூட ‘அந்த இனிப்பு மிகவும் திகட்டுகிறது’ என்ற பொருள் தரும்படியான எதிர்மறை உணர்வை வெளிப்படுத்துகிறது. நமது தேவை அல்லது எதிர்பார்ப்புக்கு மேலாகவோ, கீழாகவோ இருக்கும்போது too என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட பாடகி ‘It is too good’ என்று கூறும்போது பாடியவரின் பாடலில் ஏதோ குறைபாடு உள்ளது என்பதை உணர்த்துகிறார். ஆனால் அது அவரது நோக்கம் அல்ல. Very good என்பதையும் தாண்டி அந்தப் பாடல் அவரை மயக்கியிருந்தால் very very good என்று கூறியிருக்கலாம்.

Adapt- Adept - Adopt

Adapt என்றால் அட்ஜஸ்ட் செய்து கொள்வது என்று அர்த்தம். ‘வாழ்க்கையிலே எல்லாச் சூழல்களுக்கும் அடாப்ட் செய்துக்கணும்’ என்று கூறும்போது அதில் இடம் பெறவேண்டிய சொல் Adapt.

Adapt என்ற சொல்லுக்குப் பதிலாக நாம் பயன்படுத்தக்கூடிய வேறு சில சொற்கள் harmonize, suit, acclimatise.

Adept என்றால் திறமையுள்ள என்பதுபோன்ற பொருள் தரும். He is adept in singing, She is adept in dancing என்பதுபோல.

Adept என்ற சொல்லுக்குப் பதிலாக masterly,proficient, skilful போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

Adopt என்ற உடனேயே பலருக்கும் ‘குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளுதல்’ நினைவுக்கு வரும். இது ஒருவிதத்தில் சரிதான். Adopt என்றால் ஒன்றை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் அல்லது சுவீகரித்தல் என்று பொருள். Adopting a child, adopting an idea என்பதுபோல.

Adopt என்பதற்குப் பதிலாக accept, endorse, approve போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.

இந்த மூன்று சொற்களுக்கும் antonym எவை தெரியுமா? (இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம். நிறைய பேர் opposite என்ற சொல்லைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். I live in the opposite house என்றால் எதிர் வீட்டில் இருக்கிறேன் என்று அர்த்தம். ஆனால் What is the opposite of tall? என்று கேட்கக் கூடாது. What is the antonym of tall? என்றுதான் கேட்க வேண்டும். (அர்த்தம் என்றால் synonym. எதிர்ப்பதம் என்றால் antonym).

Adapt என்பதன் எ திர்ச்சொல் deny. Adept என்பதன் எதிர்ச்சொல் incompetent. Adopt என்பதன் எதிர்ச்சொல் repudiate.

ஜி.எஸ். சுப்ரமணியன்- தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்