ஒரு பேச்சாளர் ‘‘ Pick up steam’’ என்று குறிப்பிட்டார். இதற்கு என்ன பொருள்? இது ஒரு வாசகரின் கேள்வி.
ஜலதோஷம் வந்தால் ‘வேடு பிடிப்பது’ என்ற பெயரில் முகத்தில் நீராவி தொடர்ந்து படுமாறு சிறிது நேரம் வைத்துக்கொள்வார்கள். அழகு நிலையங்களில் கூட steam bath என்று ஒன்று உண்டு. அதாவது நீராவிக் குளியல். நீராவி உடலில் படும்போது தோல் துவாரங்களில் உள்ள அடைப்புகளும், அழுக்குகளும் நீங்கித் தோல் புத்துணர்ச்சி பெறும் என்று நம்பிக்கை.
ஆனால் pick up steam என்பது உடல் தொடர்பானது அல்ல. மனம் தொடர்பானது. Do not feel depressed. Pick up steam in your life. இதற்கு உறுதியாகவும், உற்சாகமாகவும் மாறிக் கொள்ளுதல் என்று பொருள். The economy should pick up steam next year என்றால் அடுத்த வருடம் பொருளாதாரம் சீர்பட்டு முன்னேற வேண்டும் என்று அர்த்தம்.
Steam என்பது வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதைப் பார்ப்போம்.
Running out of steam என்பது picking up steam என்பதற்கு நேரெதிரானது. பலவீனம் அடைவதையும், உற்சாகம் குறைவதையும் run out of steam என்று குறிப்பிடுவதுண்டு.
“ Let off steam’’ என்றோ, “Blow off steam’’ என்றோ யாராவது உங்களிடம் சொன்னால், உங்கள் மனதில் இருப்பதை அவர்களிடம் கொட்டிவிடலாம். ஏனென்றால் அதைத்தான் அவர்கள் தங்கள் ஆலோசனையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
“Do something under your own steam’’ என்றால் பிறருடைய உதவி இல்லாமல் நீங்களாகவே செய்ய வேண்டும் என்ற அர்த்தம்.
Steam என்றால் நீராவி என்பது தெரிந்திருக்கும் உங்களுக்கு Stream என்றால் மெல்லிய நீரோடை என்பதும் தெரிந்திருக்கும். Scream என்றால் அலறுதல். திகில் திரைப்படங்களில் திரையிலும் யாராவது scream செய்வார்கள். திரையரங்கிலும் யாராவது மெல்லிதயம் கொண்டவர்கள் scream செய்யலாம்.
REGULAR VERBS IRREGULAR VERBS
Verbs-ன் இரண்டு வடிவங்களை இப்போது அறிந்துகொள்வோம். (அப்போதுதான் Participle குறித்துப் பிறகு தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்). அவை regular verbs, irregular verbs ஆகியவை.
பள்ளியில் புரிந்தோ, புரியாமலோ verbs-ஐ மூன்று பகுதிகளாக மனப்பாடம் செய்திருக்க வாய்ப்பு உண்டு. சில எடுத்துக்காட்டுகள்.
1)stand-stood-stood
2)sit-sat-sat
3)borrow-borrowed-borrowed
இந்த மூன்றும் முறையே present, past, past participle ஆகியவற்றைக் குறிக்கின்றன. இவற்றில் எல்லாம் past tense-ம், past participle-ம் ஒன்றாகவே உள்ளன. இவற்றை regular verbs என்பார்கள்.
ஆனால் கீழே உள்ளவற்றைப் பாருங்கள்.
1)come-came-come
2)take-took-taken
3)give-gave-given
இவற்றில் எல்லாம் past tense verb-ம், past participle verb-ம் மாறுபடுகின்றன. இவை irregular verbs.
கீழே உள்ள verbs regular-ஆ, irregular-ஆ என்பதில் தெளிவு இருக்கட்டும்.
1) make
2) mean
3) run
4) awake
5) become
6) begin
7) build
8) forget
9) prove
10) quit
இவற்றில் கீழே உள்ளவை regular verbs :-
make (made - made)
mean (meant - meant)
build (built - built)
quit (quit - quit)
கீழே உள்ளவை irregular verbs :
run (ran- run)
awake (awoke- awoken)
become (became - become)
begin (began- begun)
forget (forgot- forgotten)
Prove என்பது regular, irregular ஆகிய இரண்டு வகை verbs ஆகவும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது past participle ஆக proved என்றும் பயன்படுத்தலாம், proven என்றும் பயன்படுத்தலாம். இதே போல் show என்ற verbக்கான past participle shown என்றும் இருக்கலாம் showed என்றும் இருக்கலாம்.
ANAGRAMS
சென்ற முறை கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான anagrams இதோ.
1) A Rope Ends It - Desperation
2) Often Sheds Tears- Softheartedness
3) Got A Clue- Catalogues
4) Made Sure - Measured
இந்த Anagrams-ன் அர்த்தங்கள் ஓரளவு நெருங்கி வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?
Anagramsல் இதற்கு நேரெதிரான இன்னொரு வகை உண்டு. அது அடுத்த இதழில்.
RATION RATIONAL - RATIONALE
Ration என்றால் ஒருவருக்கு இவ்வளவு என்று அதிகாரப் பூர்வமாக அனுமதிக்கப்பட்ட பொருளின் அளவு.
Rational என்றால் தர்க்கத்தை அடிப் படையாகக் கொண்டது என்று அர்த்தம்.
He has a perfectly rational explanation for his argument.
Don’t be superstitious Be rational.
Rationale என்றால் தர்க்க ரீதியான காரணங்களின் பொருள் என்று கூறலாம். He explained the rationale behind his action.
‘அடிப்படைக் காரணம்’ என்றும் இதைக் கூறலாம். The rationale for providing free noon meals is that children will attend schools.
Rationalist என்றால் பகுத்தறிவுவாதி.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago