எல்லையற்றதா கடவுளின் கருணை? ஆங்கிலம் அறிவோமே - 43

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

வீடு ஒன்றை வாங்கியதைத் தொடர்ந்து என் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கினேன். “எப்போ வாங்கினீங்க?’’ என்று இனிப்பை கையில் எடுத்தபடி ஒருவர் கேட்டார். “ஒரு மணி நேரத்துக்கு முன்னாலே” என்றேன். “வீடு வாங்கி ஒரு மணி நேரம்தான் ஆச்சா?’’ என்றார் திகைப்புடன்.

“வீடு அல்ல, ஸ்வீட்டை வாங்கித்தான் ஒரு மணி நேரமானது” என்றேன். அடுத்ததாக “எவ்வளவு ஆச்சு சார்?’’ என்றார் அவர். எவ்வளவு லட்சங்கள் தேவைப்பட்டன என்று சொன்னதில் அவர் முகத்தில் மீண்டும் அதிர்ச்சி. இப்போது அவர் கேட்டது இனிப்பின் விலையையாம்!

வாக்கியங்களில் தெளிவு இல்லையென்றால் இப்படித்தான் ஆகும். எங்கே தேவையோ அங்கே உரிய வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும். ஒரு வாக்கியம் இலக்கணப்படி சரியாக இருந்தால் மட்டும் போதாது. வார்த்தைகளை எந்த வரிசையில் கொடுக்கிறோம் என்பதும்கூட மிக முக்கியம்.

ஒரு பேராசிரியர் “Students, I will not take you classes next week because I will be going to my village to sell my land along with my wife” என்றாராம். அவர் சொல்ல நினைத்தது நில விற்பனை பற்றியதுதான். ஆனால் அவர் சொன்ன விதத்தில் அவர் மனைவியையும் சேர்த்து விற்பனை செய்வது போல அமைந்துவிட்டது.

பல வருடங்களுக்கு முன்னர் ஓர் ஆங்கில இதழில் “உண்மையாகவே வெளிவந்த சில அறிவிப்புகளும் விளம்பரங்களும்” என்ற தலைப்பில் சிலவற்றை வெளியிட்டிருந்தார்கள். அவற்றை நினைவிலிருந்து கொடுத்திருக்கிறேன்.

உயிரியல் பூங்காவின் ஸஃபாரி ஒன்றில் அறிவிப்பு - Elephants please stay in your car.

நான்கு மாடி அலுவலகம் ஒன்றில் மூன்றாம் மாடியில் உள்ள கழிப்பறை வாசலில் காணப்பட்ட அறிவிப்பு - Toilet out of order. Please use floor below.

நாளிதழ் விளம்பரம் - Dogs for sale: Eats anything and fond of children.

வார்த்தைகள் சரியாக அமைக்கப்படாததால் எவ்வளவு விபரீதமான அர்த்தங்கள்!

“Being an experienced doctor, I am sure you can help us”. இப்படி ஒரு வாக்கியம் இருந்தால் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதில்லையா? யார் அனுபவம் மிக்க மருத்துவர்? நீங்களா, நானா?

இந்தக் குழப்பத்தை இப்படி எழுதுவதன் மூலம் தீர்க்கலாம். Being an experienced doctor, you can surely help us.

மாறாக “As you are an experienced doctor, I am sure you can help us’’ என்றும் குறிப்பிடலாம்.

He purchased furniture items for his house that cost Rs.60,000/-. இந்தத் தொகை குறிப்பது என்ன? பர்னிச்சரின் விலையா? அல்லது வீட்டின் விலையா? எனவே வாக்கியத்தில் தெளிவு இருக்கலாமே. “For his house, he purchased furniture items that cost Rs.60,000”.

AUXILIARY VERB

வாசகர் ஒருவர் “Auxilary Verb என்றால் என்ன? வழக்கமான Verb-லிருந்து அது வித்தியாசமானதா?” என்று கேட்டிருக்கிறார்.

Verbகளில் பெரும்பாலானவை Main Verbs என்ற பிரிவில் அடங்கிவிடும். Stand, Runs, Forgot, Allow என்பவை சில உதாரணங்கள்.

Auxiliary Verb என்பது Main Verb-உடன் காணப்படுவது. அதாவது Tense, Voice போன்றவற்றைச் சுட்டிக் காட்டி வாக்கியத்தை இலக்கணப்படி அமைக்க உதவுபவை Auxiliary Verbs.

I am Coming என்ற வாக்கியத்தில் Coming என்பது Main Verb. Am என்பது Auxiliary Verb.

They Have Arrived என்ற வாக்கியத்தில் Arrived என்பது Main Verb. Have என்பது Auxiliary Verb.

He May Arrive என்ற வாக்கியத்தில் Arrive என்பது Main Verb. May என்பது Auxiliary Verb.

Auxiliary Verbs என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் - am, has, can, may, are, was, have, does, will, could.

Infinite Indefinite

Infinite என்றால் எல்லையற்ற என்று அர்த்தம். விண்வெளி என்பது infinite. கடவுளின் கருணை என்பது infinite.

Infinite என்றால் அது தெளிவில்லாததையும் குறிக்கும். அதாவது வரையறுக்க முடியாது. An infinite number of people attended the meeting.

Myriad என்றால் கணக்கில்லாத என்று அர்த்தம். There are myriads of insects. He thought about the myriad reasons for his decision. ஆக myriad என்பதை noun ஆகவும் பயன்படுத்தலாம், adjective ஆகவும் பயன்படுத்தலாம்.

Indefinite என்றால் நிச்சயமில்லாத அல்லது காலவரம்பற்ற என்று அர்த்தம். He was imprisoned for an indefinite period. The college students announced an indefinite strike.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்