உங்களை நீங்களே விளம்பரப்படுத்துங்கள்!

By முகமது ஹுசைன்

செ

ன்னை வெள்ளத்தில் தத்தளித்தபோது, “வணக்கம். உங்கள் அன்புச் சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்” என்று 2015-ல் வாட்ஸ் அப்பில் முன்னாள் முதல்வர், பேசியதைக் கேட்டிருப்பீர்கள். ஏன் நாளிதழில் எழுதாமல், வானொலி, தொலைக்காட்சியில் பேசாமல் வாட்ஸ் அப்பில் பேசினார்? குறைந்தகால அவகாசத்தில் மக்களைச் சென்றடையும் டிஜிட்டல் மீடியாவின் சக்தியை உணர்ந்ததே காரணமாயிருக்க வேண்டும்.

இன்றைய தேதியில் இந்தியாவில் கிட்டத்தட்ட 55 கோடிப் பேர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இவர்களைக் குறிவைத்துத்தான் பெரிய, சிறிய நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்துக்கு டிஜிட்டல் மீடியாவைப் பயன்படுத்துகின்றன. இந்த டிஜிட்டல் விளம்பரத்தின் மூலம் பாரம்பரிய விளம்பரங்களுக்கு ஆகும் செலவைவிட மிகக் குறைந்த செலவில் அதிக மக்களைச் சென்றடைய முடிகிறது.

உலக அளவில் அதிவேகமாக வளரும் துறைகளில் இதுவும் ஒன்று. எல்லா நிறுவனங்களும் இந்த டிஜிட்டல் யுகத்தில் தங்களை முன்னிறுத்துவதற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். எனவே, இத்துறையில் வேலைவாய்ப்பு மிகவும் அதிகமாகிவருகிறது. ஆனால், இதற்கான கல்வி பரவலாகாத காரணத்தால் தகுதியான ஆட்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். சரியான படிப்பைப் படித்து, முறையான தகுதியை வளர்த்துக்கொண்டால் அதிகச் சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

நீங்கள் நுழையலாமா?

தேவையிருக்கிறது என்பதற்காக இத்துறையில் நுழைவதற்கு முன்னதாக, உங்களுக்குக் கற்பனைத் திறன் உள்ளதா, படைப்பாற்றலுண்டா, எழுத்தில் ஆர்வமுண்டா, கலை ஆர்வமுண்டா, வாசிப்பதில் ஆர்வமுண்டா என்று நேர்மையாக உங்களைச் சுயமதிப்பீடு செய்துகொள்ள வேண்டியது அவசியம். உண்டு என்று தெரிந்தால் நீங்கள் தாராளமாக இத்துறையில் நுழைந்து மிளிரலாம்.

என்ன தேவை?

விஸ்காம் அல்லது கவின்கலைப் பட்டதாரிகள் நேரிடையாகக் களத்தில் குதிக்கலாம். மற்றவர்கள் udemy, coursera, hubspot போன்ற ஆன்லைன் வகுப்புகளில் இலவசப் பயிற்சி பெறலாம். இல்லையென்றால் Digital Vidya போன்ற வேலைக்கு உத்தரவாதமளிக்கும் பயிற்சியகங்களில் 3 முதல் 6 மாதங்கள் படித்து அரசாங்கச் சான்றிதழ் பெறலாம். இது தவிர HubSpot, Google Adwords, Google Analytics, Bing Ads போன்றவற்றிலும் பயிற்சிபெற்றுச் சான்றிதழ்கள் பெறலாம். Loyola கல்லூரியிலும் இத்துறையில் சான்றிதழுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

Content உருவாக்கம், படைப்பூக்கம், wordpress மேலாண்மை, வடிவமைப்பு, Analytics போன்றவைகளில் திறமை இருக்க வேண்டும். முக்கியமாக உங்களுக்கு இவற்றைக் கற்றுக்கொள்ளப் பேரார்வம் இருக்கவேண்டும். வாசிக்கும் பழக்கம் இயல்பிலேயே இருக்க வேண்டும். இது தவிர முக்கியமாக இத்துறை வல்லுநர்களின் வலைப்பூக்களைத் (Blog) தொடர்ந்து படிக்க வேண்டும்.

இத்துறையில் நுழைவது எப்படி?

இத்துறையில் நுழையப் பல வழிகள் உள்ளன. எளிய வழி, உங்களுக்கென்று ஒரு வலைப்பூவை உருவாக்குங்கள். அதை கூகுள் போன்ற ஆன்லைன் வலைத்தளங்களில் விளம்பரம் செய்யுங்கள். உங்கள் வலைப்பூவுக்கான பார்வையாளர்களை அதன் மூலம் அதிகப்படுத்துங்கள். பின்னர் ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் உங்கள் பார்வையாளர்களை அதிகப்படுத்துவதன் மூலம் பயிற்சி பெறலாம்.

அதாவது உங்களை நீங்களே விளம்பரப்படுத்துவதன் மூலம் இத்துறையில் நுழையலாம். உங்கள் வெற்றி இத்துறையில் உங்களுக்குள்ள திறமையைச் சார்ந்து இருக்கும். இதனுடன் ஏதாவது ஒரு சிறிய நிறுவனத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டு அனுபவம் பெறலாம்.

தேர்ந்தெடுக்க வேண்டிய நிறுவனம்

200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட Dentsu Network, Ogilvy, WatConsult, Mirum India போன்ற பெரிய நிறுவனங்களும் உள்ளன, குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்ட echoVME, SocialBeat, Digitally Inspired Media, WindChimes போன்ற நிறுவனங்களும் உள்ளன.

பெரிய நிறுவனங்கள் என்றால் சம்பளம் அதிகமாக இருக்கும், ஆனால் உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பிரிவிலுள்ள வேலையை மட்டும்தான் செய்ய முடியும். சிறிய நிறுவனங்கள் என்றால் சம்பளம் குறைவாக இருந்தாலும், நீங்கள் எல்லாப் பிரிவுகளிலும் எல்லா வேலையையும் செய்ய முடியும். அதாவது முழுமையாக எல்லாவற்றையும் நீங்கள் கற்றுத் தேறலாம். அதேநேரத்தில் எந்த நிறுவனமாக இருந்தாலும் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே உங்களுக்கு முழுமையான பயிற்சி கிடைக்கும்.

வேலை தேடுவது எப்படி? 

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் ஆள் பற்றாக்குறை இருப்பதால் வேலை கிடைப்பது பெரிய சிரமமில்லை. Naukri, Monster, Indeed போன்ற வேலைவாய்ப்பு இணையதளங்களில் பதிவுசெய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே வேலை தேடலாம். இது தவிர வேலை தேடுவதற்கு LinkedIn மிகவும் கைகொடுக்கும்.

வேலைவாய்ப்புகள்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் எக்சிகியூடிவ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜிஸ்ட், காப்பிரைட்டர், எழுத்தாளர், ஆர்ட் டைரக்டர் எனப் பல வாய்ப்புகள் இந்தப் பிரிவில் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்