ஆங்கிலம் அறிவோமே 174: சேனலை மாத்திக்கிட்டே இருந்தா!

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

சுற்றுலாப் பேருந்துகளில் ‘Incredible India’ என்ற சொற்கள் இடம் பெறுகின்றன. இது எதிர்மறை அர்த்தத்தை அளிக்கிறதே!.

‘Incredible’ என்றால் நம்ப முடியாத என்ற பொருள் உண்டுதான்.

அதற்காகச் சுற்றுலாத் துறையின் விளம்பர வாசகம் இந்தியாவின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கவில்லை.

“சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவ்வளவு அற்புதங்கள் இங்கு உள்ளன” என்று அதற்குப் பொருள். அதாவது incredible என்ற சொல் இங்கு extraordinary என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

***********************

Yeoman service என்றால் என்ன?

இலவசமாகவும், தாராளமாகவும் செய்யப்படும் உதவி எனலாம். இந்த வார்த்தையின் மூலத்தைக் குறித்துத் தெளிவு இல்லை. சிலர் youngman என்பதன் சுருக்கமாக இது இருக்கலாம் என்கிறார்கள். சொந்த நிலம் வைத்துள்ள சாமானியரை ஒரு காலத்தில் yeoman என்று அழைத்தார்கள். பின்னர் ராணுவத்தில் ஓர் இடைப்பட்ட பதவியை வகித்தவர்களை yeoman என்றார்கள்.

தேவைப்படும்போது உருப்படியான உதவியைச் செய்வதை yeoman service என்று அழைப்பது வழக்கமாகிவிட்டது. The rotary club is doing a yeoman service to the poor and needy.

Zapper என்றால் என்ன?

தொலைக்காட்சி செட், வீடியோ போன்றவற்றுக்கான ரிமோட்டைத்தான் zapper என்கிறார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சேனலை ஒழுங்காகப் பார்க்காமல் மாறி மாறி எல்லா சேனல்களையும் மாற்றிக் கொண்டிருக்கும் நபரை zapper என்கிறார்கள்.

மணிக்கணக்கில் டி.வி.க்கு முன்பாக உட்கார்ந்துகொண்டு எந்தவித உடற் பயிற்சிக்கும் இடம் கொடுக்காதவர்களை Couch Potato என்கிறார்கள். (Couch என்றால் சோஃபா). உடலுக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை என்றால் உடல் உருளைக்கிழங்குபோல ஆகும் என்பதாலோ என்னவோ potato என்ற சொல்லைச் சேர்த்துச் சொல்கிறார்கள்.

***********************

அவர்கள் கொஞ்சம் காய்கறிகளை வாங்குவதற்காக மட்டுமே கடைக்குச் சென்றார்கள். இதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?

They just went to the shop to buy some vegetables. இப்படிக் குறிப்பிட்டால் அர்த்தம் மாறிவிடுகிறது. அதாவது ‘just’ என்ற சொல்லை எங்கே குறிப்பிட்டிருக்கிறோம் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் இப்போதுதான் (அதாவது சிறிது நேரத்துக்கு முன்புதான்) கடைக்குச் சென்றார்கள் என்றாகிறது.

மாறாக They went to the shop just to buy some vegetables எனும்போது நமக்குத் தேவைப்படும் அர்த்தம் அதில் வந்து விடுகிறது.

இதேபோன்ற தவறை ‘only’ என்ற சொல்லைப் பயன்படுத்தும்போதும் சிலர் செய்கிறார்கள்.

“நீண்ட சிந்தனைக்குப் பிறகே என் சகோதரர் இந்த நூலை எழுதினார்” என்பதை ஆங்கிலத்தில் “My brother only wrote this book after years of deep thought” என்று குறிப்பிடக் கூடாது. அப்படிக் குறிப்பிட்டால் “வேறு யாரும் அல்ல, என் சகோதரர்தான் அந்த நூலை எழுதினார்” என்பதுபோல் அர்த்தமாகிறது. அல்லது only என்ற சொல்லை நான் குறிப்பிட்டிருக்கும் இடத்தை மனதில் கொண்டு பார்த்தால் நீண்ட சிந்தனைக்குப் பிறகு இந்தப் புத்தகத்தை மட்டுமே எழுதினார் என்றாகிறது.

My brother wrote this book only after years of deep thought எனும்போது நாம் நினைக்கும் அர்த்தம் வெளி வருகிறது.

***********************

Nouns-ஐ விளக்குவது adjectives. Verbs-ஐ விளக்குவது adverbs. இப்படி எளிமையாகக் கூறிவிடலாம் அல்லவா?

நண்பரே, அப்படிக் கூறலாம்தான். ஆனால் இதைத் தாண்டியும் இவை செயல்பட முடியும். சில சமயம் adjective-ஐ மேலும் தெளிவுபடுத்தவும் வரையறுக்கவும் adverbs பயன்படுத்தப்படுவதுண்டு.

He is a poor man என்பதில் poor adjective. He is an extremely poor man என்பதில் poor என்ற adjective-ஐ மேலும் தெளிவாக்குவதற்கு extremely என்ற adverb பயன்படுத்தப்படுகிறது.

Clearly incorrect, surprisingly popular போன்ற பயன்பாடுகளைக் கவனியுங்கள்.

***********************

சிப்ஸ்

Robber, thief இருவருக்கும் என்ன வேறுபாடு?

Robber வன்முறையைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பவர். Thief யாருக்கும் தெரியாமல் கொள்ளையடிப்பவர்.

We are going there this night. சரியா?

தவறு. We are going there tonight.

Spade என்றால் மண்வெட்டி. Spadework என்றால்?

ஒரு செயலைச் செய்யத் தேவைப்படும் அடிப்படை வேலைகள். ஒரு திட்டம் தீட்டுகிறோம் என்றால் அதற்கான அடிப்படை விவரங்களைச் சேகரிப்பதும் spadework.
 

Placoniajpg100
 

தொடக்கம் இதுதான்

Laconic என்றால் சுருக்கமாக, செறிவாக என்று பொருள். Laconic speech என்றால் வளவளவென்று இல்லாத பேச்சு என்ற அர்த்தம்.

நவீன கிரேக்கத்தின் ஒரு பகுதியாக விளங்கியது லாகோனியா (Laconia). இதை ஆண்டு வந்தவர்கள் ஸ்பார்டா நகரவாசிகள். லாகோனியாவின் குடிமக்கள் அதிகம் பேசாதவர்கள். அவர்கள் பேசும் குறைந்த சொற்களில் மிகுந்த பொருள் இருக்கும். இதற்குப் பல உரையாடல்களை உதாரணமாகச் சொல்வார்கள்.

மாசிடோனைச் சேர்ந்த மன்னர் இரண்டாம் பிலிப் இப்படியொரு ஓலையை அனுப்பினாராம். “If I enter Laconia, I will level it to ground”. தங்கள் பகுதிக்குள் அண்டை நாட்டு மன்னன் நுழைவான், தங்கள் தேசத்தைத் தரைமட்டமாக்குவான் என்றால் எவ்வளவு கோபமாகவும், நீளமாகவும் பதில் ஓலை அனுப்பியிருக்க வேண்டும்? (வெள்ளைக் கொடியைப் பறக்க விட்டால் அது வேறு விஷயம்).

தங்கள் கோபம் முழுவதையும் பதிலுக்குத் தாங்கள் அனுப்பிய ஓலையில் காட்டியது Loconia. அந்த ஓலையில் ஒரே வார்த்தை இருந்தது - ‘If’. (அதாவது ‘உன்னால் லாகோனியாவில் நுழைய முடிந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்ற அர்த்தத்தில்).

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்