பேசும் புத்தகம் எனும் வரப்பிரசாதம்

By முகமது ஹுசைன்

காட்சிகளைக் காண பார்வை ஒன்றே போதும். ஆனால், உணர்வுகளையும் சிந்தனைகளையும் உள்வாங்குவதற்கு வாசிப்பு அவசியம். இதனால்தான் புத்தகம் மனிதனின் சிறந்த துணையாகிறது. நெடுங்காலமாக அச்சு வடிவில் மட்டுமே இருந்துவந்த புத்தகம், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய வடிவங்களைப் பெற்றுவருகிறது. மின்னணுப் புத்தகங்கள், பேசும் புத்தகங்கள் போன்ற வடிவங்களில் கிடைக்கிறது. பேசும் புத்தகம் ஒலிநாடாவிலிருந்து ஒலித்தட்டுக்கு மாறி இப்போது கைபேசி, கையடக்க மீடியா பிளேயர் போன்றவற்றில்கூடத் தரவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் மின்னணு வடிவில் கிடைக்கிறது.

பிரைல் புத்தகத்துடன் ஒப்பிடுகையில், இந்தப் பேசும் புத்தகம் எடுத்துச் செல்வதற்கும், படிப்பதற்கும் மிகவும் எளிதானது. பார்வையற்ற மாணவர்களின் கல்விக்கு இந்தப் பேசும் புத்தகத்தின் பங்களிப்பை அளவிட முடியாதது.

முதல் பேசும் புத்தகம்

1870-ல் தாமஸ் எடிசன் ‘Mary had a little lamp’ என்ற குழந்தைப் பாடலை வாசித்துப் பதிவு செய்த நிகழ்வே, பேசும் புத்தகத்தின் ஆரம்பமாகும். போரால் பார்வையை இழந்த வீரர்கள், பார்வையற்றோர் வாசிப்பதற்கு உதவும் நோக்கில், 1931-ல் அமெரிக்கா பவுண்டேசன் ஆஃப் பிளைன்ட் (AFB), லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் ஆகிய இரு அமைப்புகளும் சேர்ந்து ‘பேசும் புத்தகம்’ எனும் திட்டத்தைச் செயல்படுத்தின. இந்தியாவில் 1963-ல் பார்வையற்றோருக்கான தேசிய அமைப்பு (NAB) எனும் தொண்டு நிறுவனம் அமெரிக்க அரசு உதவியுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால், 1952-ல் ‘கேட்மான்’ (caedmon) நிறுவனம், டைலான் தாமஸின் ‘A Child’s Christmas in Wales’ ஒலிப்பேழையை வெளியிடும்வரை, இந்த வடிவம் பரவலாக அறியப்படவில்லை.

புத்தக வறட்சியை ஒழிப்போம்!

பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் அச்சு வடிவில் உள்ளவற்றை வாசிக்க முடியாதவர்களும் டிஜிட்டல் வசதிகள் மூலமாக வாசிக்க டெய்ஸி மன்றம் (DAISY forum) 2007-ல் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு வெளிக்கொண்டுவந்துள்ள டிஜிட்டல் பேசும் நூலகத்தில் தங்களுக்குத் தேவையான பக்கம், வாக்கியம், தலைப்பு ஆகியவற்றை மாணவர்கள் எளிதாகத் தேடிப் படிக்கலாம்.

ஆனாலும் இன்றுவரை ஒரு சதவீதத்துக்கும் குறைவான அச்சுப் புத்தகங்கள் மட்டுமே வேறு வடிவங்களில் மாற்றப்பட்டுள்ளன. இதனால் அச்சில் வாசிக்க முடியாதவர்கள் ‘புத்தக வறட்சி’யால் தவிக்கின்றனர். அத்தகைய புத்தக வறட்சியை ஒழிப்பதுதான் டெய்ஸியின் முதன்மையான நோக்கம்.

மத்திய அரசு இதற்காக 2015-ல் ‘சுகம்யா பாரத் அபியான்’ என்ற திட்டத்தைப் புதுடெல்லியில் தொடங்கி வைத்தது. இதன் ஒரு பகுதியாக டெய்ஸி, பெருநிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் ‘சுகமயா புஸ்தகாலயா’எனும் இணைய நூலகத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இங்கு இந்தியாவில் அனைத்து நூலகங்களில் உள்ள புத்தங்களும் கிடைக்கும். அது மட்டுமின்றி சில பன்னாட்டுப் புத்தக நிறுவனங்களின் புத்தகங்களும் இங்குக் கிடைக்கின்றன.

பலதரப்பட்ட பிரிவுகளின் கீழ், பல்வேறு மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னணுப் புத்தகங்கள் இங்குப் பல விதமான வடிவங்களில் கிடைக்கின்றன. பார்வையற்ற, வாசிப்புக் குறைபாடுள்ள மாணவர்கள் ஒரு கை அசைவில் எளிதாகப் பதிவுசெய்து, இலவசமாக இங்கு படிக்கலாம். இவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து தங்கள் விருப்பப்படி கைபேசியிலோ டேப்லெட்டிலோ கணினியிலோ டெய்ஸி பிளேயரிலோ அல்லது பிரைலியிலோகூடப் படிக்கலாம்.

கூடுதல் விவரங்களைக் கீழ்க்கண்ட இணைப்புகளில் பெறலாம்:
> https://library.daisyindia.org/NALP/welcomeLink.action
> http://www.nabindia.org/talking-books/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்