ஆர்வம் மிக்கவர்களுக்கு ஜியாலஜிஸ்ட் படிப்பு

By ஜெயபிரகாஷ் காந்தி

அரிதுனும் அரிதாய், பலர் அறியாத படிப்பாக இருக்க கூடிய பி.எஸ்சி. ஜியாலஜிஸ்ட் பட்டப் படிப்பை பற்றி தெரிந்துக் கொள்வோம். இந்தியாவில் மட்டு மல்லாமல் அயல்நாடுகளிலும் இப் படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மிகவும் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்து படிக்க வேண்டிய படிப்பு. பி.எஸ்சி. ஜியாலஜிஸ்ட் மட்டும் படித்து விட்டு வேலை தேடுவதைக் காட்டிலும், எம்.எஸ்சி. ஜியாலஜிஸ்ட்டில் உள்ள சிறப்பு பாடப்பிரிவை தேர்வு செய்து, படிப்பதன் மூலம் அரசு, தனியார் துறைகளில் பணி வாய்ப்பு பெறலாம்.

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பிரசிடென்ஸி கல்லூரி, சேலம் அரசுக் கலைக்கல்லூரி, திருச்சி நேஷனல் கல்லூரி, தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரி, மீனாட்சி மகளிர் அரசுக் கல்லூரி, மதுரை என மாநிலம் முழுவதும் ஒன்பது கல்லூரிகளில் பி.எஸ்சி. ஜியாலஜிஸ்ட் படிக்க முடியும்.

உலகின் இயற்கை மாற்றம் குறித்த படிப்பு. சுனாமி, பூகம்பம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடரை முன் கூட்டியே தெரிந்து கொள்வது பற்றி கற்பிக்கப்படுகிறது.

எம்.எஸ்சி. மேற்படிப்பில் சிறப்பு பாடங்களாக பெட்ரோலியம் ஜியாலஜிஸ்ட், மரைன் ஜியாலஜிஸ்ட், வல்கோனாலஜி, செரிக்கல்ச்சர் என்வராமென்ட்டல் ஜியாலஜிஸ்ட், ஹைட்ராலஜிஸ்ட், எர்த் சிஸ்டம் சைன்ஸ், மினராலஜி, கிரிஸ்டலோ கிராஃபி உள்ளன. இந்த படிப்பின் அருமை தெரியாததால், வெகு சொற்பமானவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். நகரப் பகுதியில் வேலைவாய்ப்பு குறைவு. புறநகர் பகுதியில், ஆழ்கடல், எரிமலை, கிராமப்புறம், மலைப் பகுதிகளில் பணி வாய்ப்புக்கு செல்ல தயாராக உள்ளவர்கள், இப்படிப்பை தேர்வு செய்யலாம். பெண்களுக்கும் ஏற்றம் தரக்கூடிய படிப்பாக உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் தாராளமாக எடுத்து படிக்கலாம்.

மத்திய அரசுத் துறைகளான நீர்வளத்துறை, கனிமவளம், ஐ.எஸ்.ஆர்.ஓ., பாடா அட்டாமிக் ரிசர்ச் சென்ட்டர், நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன், நேஷனல் தெர்மல் கார்ப்பரேஷன் உள்பட பல்வேறு இடங்களில் பணி வாய்ப்பு காத்திருக்கிறது. தனியார் துறைகளான ரிலையன்ஸ் பவர் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில், இப்படிப்பு முடித்தவர்களின் தேவை மிகுதியாக உள்ளது. மலேசியா, குவைத், இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் விமான நிலையங்கள் கட்டுமானம், நெடுஞ்சாலை கட்டுமானங்களில் ஜியாலஜிஸ்ட் பணிக்கு வாய்ப்பு உள்ளது.

எம்.எஸ்சி. ஜியாலஜிஸ்ட் முடித்தவர்கள் மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதி, அரசுப் பணிக்கு செல்லலாம். பிற படிப்புகளை போன்று நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லாததால், எளிதில் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். பிளஸ் 2 வகுப்பில் இயற்பியலை முக்கிய பாட மாக எடுத்தவர்கள் மட்டும் பி.எஸ்சி. ஜியாலஜிஸ்ட் எடுத்து படிக்க முடியும். இது ஆர்வம் உள்ளவர்களுக்கு சிறந்த படிப்பாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்