துறை அறிமுகம்: இது உயிரோட்டமான தகவலியல்!

By சங்கர்

நோய் எதிர்ப்பு தொடங்கி புதிய விதைகளை உருவாக்குவதுவரை அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் துறைகளில் ஒன்றாக உயிரித் தொழில்நுட்பம் (பயோடெக்னாலஜி) உள்ளது. இந்த உயிரித் தொழில்நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுதான் உயிரித் தகவலியல் என்னும் பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ். அனுபவம் வாய்ந்த உயிரித் தொழில்நுட்பவியலாளர்களால் உலகெங்கும் தொகுக்கப்பட்ட உயிரியல் தரவுகளிலிருந்து வேண்டிய தகவலை எடுக்க உதவும் கணிப்பொறி மென்பொருள் பயன்பாடு உயிரித் தகவலியலில் முக்கியமான பணியாகும்.

உயிரித் தகவலியல் என்ன செய்கிறது?

உயிரியல் சார்ந்த உலகளாவிய புள்ளிவிவரங்களையும் தகவல் களையும் கொண்டு கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பகுப்பாய்வு செய்வதே இத்துறையின் ஆதாரப் பணி. மரபணுக்களின் செயல்பாடுகள், செல்கள் முறைப்பாடு, சரியான மருந்துப் பொருள் தேர்ந்தெடுப்பு, மருந்து வடிவமைப்பு, நோயைப் புரிந்துகொள்வது ஆகியவைதான் உயிரித் தகவலியலின் பிரதான நோக்கங்கள். நமது வாழ்க்கையின் சகல அம்சங்கள் மீதும் தாக்கம் செலுத்தும் இத்துறை இப்போது பிரபலமாக மாறிவருகிறது.

உயிரித் தகவலியலின் கூறுகள்

மரபணுக்களில் உள்ள அமினோ அமிலத்தின் வரிசைத் தொடரையும் (amino acids sequences), புரதத்தின் அமைப்பையும் பகுத்தாய்ந்து விளக்குவது. புதிய மரபுசார் படிமுறைத் தீர்வுகளையும் புள்ளிவிவரங்களையும் உருவாக்குதல். வெவ்வேறு விதமான தகவல் நிரல்களை எளிதாகவும் செயல்திறனுடனும் பயன்படுத்து வதற்கும், தீர்வுகளை ஒருங்கிணைத்துத் தருவதற்குமான கருவிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துதல்.

தேவைப்படும் திறன்கள்

மூலக்கூறு உயிரியல் சார்ந்து பயன்படுத்தப்படும் பிரபல மென்பொருள்களான ஜி.சி.ஜி., பி.எல்.ஏ.எஸ்.டி. (GCG, BLAST) ஆகியவற்றில் சரளமான அறிவு அவசியமானது. எச்.டி.எம்.எல்., பெர்ள் (Perl), ஜாவா, சி++ ஆகியவற்றிலும் பரிச்சயம் இருத்தல் வேண்டும். விதவிதமான ஆபரேட்டிங் சிஸ்டம்களில் பணிபுரியும் திறன்கள் அமைந்திருப்பதும் அவசியம். குறிப்பாக யுனிக்ஸில் நல்ல தேர்ச்சி இருக்க வேண்டும். டேட்டாபேஸ் திறன்கள் அத்தியாவசியத் தேவையாக கருதப்படுகின்றன. சைபேஸ் (Sybase) அல்லது ஆரக்கிள்-ல் (Oracle) புலமை சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.

என்ன படித்திருக்க வேண்டும்?

அறிவியலை மூலப் பாடமாகக் கொண்டு பிளஸ் 2-ல் தேர்வு பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் சில கல்லூரிகளில் மட்டுமே பி.டெக். உயிரித் தகவலியல் துறை உள்ளது. பெரும்பாலானவர்கள் இளங்கலையில் உயிரித் தொழில்நுட்பம் அல்லது பிற அறிவியல் துறைகளில் தேர்வு பெற்ற பின்னரே முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம் பெறுவதற்குத்தான் உயிர்தகவலியலுக்கு வருகிறார்கள்.

உயிரித் தகவலியலில் முதுகலை படிக்க விரும்புபவர்கள் பி.எஸ்சி., பி.எஸ்சி.(வேளாண்மை), பி.சி.எஸ்., பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பி.ஃபார்ம், பி.ஏ.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., பி.வி.எஸ்சி. படித்திருக்க வேண்டும்.

மருத்துவம் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை

மருந்துகள் கண்டுபிடிப்பு, மருந்துகள் மேம்பாடு, மரபணு மற்றும் மரபணு அமைப்பு ரீதியான மருந்து வடிவமைப்புகளில் உயிரித் தகவலியல் படித்தவர்களுக்கு நிறைந்த வாய்ப்புகள் உள்ளன. வேளாண்மையில் பயிர்களுக்கு வரும் நோய்களைத் தடுப்பது, வறட்சியைத் தாக்குப்பிடிக்கும் புதிய பயிரினங்களையும் அதிக மகசூல் தரக்கூடிய பயிர்களையும் உருவாக்குவதிலும் இத்துறையில் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் நிறைய உள்ளன.

உயிரியல் மற்றும் மருத்துவ ஆய்வுகங்களின் பிரம்மாண்டமான தகவல்நிரல்களை நிர்வகிக்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களிலும் உயிரித் தகவலியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உயிரித் தகவலியலின் உதவியின்றி உயிரியல் மற்றும் மருத்துவ ஆய்வுகளும் மேம்பாட்டுப் பணிகளும் தற்போது சாத்தியமேயில்லை.

உயிர்தகவலியல் படிப்புகள்

> பி.டெக்.- பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ்

> பி.இ.- பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ்

> எம்.எஸ்சி.- பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ்

> எம்.டெக்.- பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ்

> எம்.பில்- பயோஇன்பர்மேட்டிக்ஸ்

> பி.எச்டி. – பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ்

> அட்வான்ஸ்டு டிப்ளோமா இன் பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ்

> டிப்ளோமோ இன் பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ்

> போஸ்ட் கிராஜூவேட் டிப்ளோமா இன் பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ்

தமிழ்நாட்டில் எங்கெங்கே கற்றுத்தரப்படுகிறது?

> கோவையில் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பல தனியார் கல்லூரிகளில் பி.டெக். பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் பயிற்றுவிக்கப்படுகிறது.

> எம்.எஸ்சி. பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ், கோவையிலுள்ள அவிநாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகத்திலும் சென்னை கால்நடைக் கல்லூரியில் உள்ள பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் சென்டர் அண்ட் ஏரிஸ் செல் (Bioinformatics Centre and Aris Cell), இன்னும் சில தனியார் கல்லூரிகளிலும் கற்றுத்தரப்படுகிறது.

வேலை கிடைக்குமா?

சைன்டிஃபிக் க்யூரேட்டர், ரிசர்ச்சர், சீக்வென்ஸ் அனலிஸ்ட், கம்ப்யூட் டேஷனல் கெமிஸ்ட், கன்டென்ட் எடிட்டர், பயோஇன்ஃபர்மேட்டிசியன் என பல பொறுப்புகள் உயிரித்தகவலியல் படித்தவர்களுக்குக் காத்திருக்கின்றன.

எந்தெந்த நிறுவனங்கள் பணிக்கு எடுக்கின்றன?

> ரான்பாக்சி

> ஜிவிகே பயோசைன்சஸ்

> டோரண்ட் பார்மகியூட்டிகல்ஸ்

> ஆஸ்ட்ரா ஜெனகா ரிசர்ச் சென்டர்

> டாக்டர் ரெட்டி லேபரட்ரீஸ்

> அவஸ்தா கெங்கரெய்ன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்

உயிரித் தகவலியல் உயர்கல்வி நிலையங்கள்

> இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் அண்ட் அப்ளைடு பயோடெக்னாலஜி, பெங்களூரு.

> ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது டெல்லி

> மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

> பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, நொய்டா

> பாரதி வித்யாபீத் பல்கலைக்கழகம், புனே

> இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, அகமதாபாத்

> பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, நொய்டா

> ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், புது டெல்லி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்