உங்கள் பயோடேட்டா தகுதியானதா?

By சைபர் சிம்மன்

உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா? என்று ஒரு பற்பசை விளம்பரத்தில் கேட்கப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். பற்பசைக்கும் உப்புக்கும் உள்ள தொடர்பை விட்டு விடுங்கள், நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் உங்கள் பயோடேட்டாவில் தேவையான குறிச்சொற்கள் இருக்கின்றனவா? என்று பார்த்துக்கொள்ளுங்கள். சரியான குறிச்சொற்கள் (கீ வேர்ட்ஸ்) இடம்பெற்றிருப்பதும் இல்லாமல் இருப்பதும் அநேகமாக உங்களுக்கு வேலை கிடைப்பதையும் கிடைக்காமல் இருப்பதையும் தீர்மானிக்கலாம். ஆகவே அடுத்த முறை வேலைக்கான விண்ணப்பம் அனுப்பும்போது, பயோடேட்டாவில் சரியான குறிச்சொற்கள் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான

குறிச்சொற்கள் என்றால் நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை மற்றும் உங்கள் திறமை தொடர்பான குறிச்சொற்கள்.

வேலைக்கு ஏற்ற குறிச் சொற்கள்

வேலைக்காக விண்ணப்பிக்கும் போது, உங்கள் விண்ணப்பம் முதல் தடையைத் தாண்டிச் செல்வதற்குக் குறிச்சொற்கள் அவசியம். அதாவது பெரும்பாலான நேரங்களில் அதிலும் குறிப்பாகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் வேலைக்கான விண்ணப்பங்களை சாப்ட்வேரே முதலில் படித்துப்பார்க்கிறது. வந்து குவிந்த விண்ணப்பங்களில் இருந்து இந்த சாப்ட்வேர் தேர்வு செய்து தரும் விண்ணப்பங்களைத்தான் நிறுவன மேலதிகாரி கவனத்தில் எடுத்துக்கொள்வார். ஆக, சாப்ட்வேர் கண்ணுக்கு உங்கள் பயோடேட்டா சிறந்ததாக (அதாவது வேண்டிய வேலைக்குத் தொடர்புடையதாக) தோன்றாவிட்டால், அது நிராகரித்துவிடும். நீங்கள் உண்மையிலேயே தகுதியான நபராக இருந்தாலும் பயனில்லாமல் போக நேரிடும்.

சரி, நிறுவனங்கள் ஏன் இப்படி சாப்ட்வேரை நம்புகின்றன என்று கேட்கலாம். இதற்கான பதில் மிகவும் எளிதானது. யோசித்துப்பாருங்கள், பெரிய நிறுவனத்திற்கு நூற்றுக்கணக்கில், ஏன் ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்து குவியலாம். அவற்றில் தகுதியான நபர்களின் பயோடேட்டாக்களைத் தேர்வு செய்வது எளிதான விஷயமல்ல. அதுமட்டுமல்ல பல நேரங்களில் பொறுமையைச் சோதித்துவிடக்கூடும். அதனால்தான், நிறுவனங்கள் முதல் கட்டத்தேர்வை சாப்ட்வேரிடம் ஒப்படைத்து விடுகின்றன. இந்த சாப்ட்வேர்களிடம் பணிக்கான தகுதியைத் தீர்மானிக்கும் குறிச்சொற்களைச் சமர்ப்பித்தால் போதும். அவை விண்ணப்பங்களில் அந்தக் குறிச்சொற்களைத் தேடிப்பார்த்துப் பொருத்தமானவற்றை வடிகட்டித் தந்துவிடும். இதனால் மேலதிகாரியின் சுமை குறையும். அதன் பிறகு மேலதிகாரி அவற்றைச் சுலபமாகப் பரிசீலித்துக்கொள்வார்.

பயனுள்ள இணையதளம்

தமக்குத் தேவையான வேலைத் திறன்களுக்குள்ளான குறிச்சொற்களை சாப்ட்வேருக்கு வழங்கிவிடுவார்கள். இத்தகைய குறிச்சொற்களுடன் உங்கள் பயோடேட்டா பொருந்திப் போனால் சாப்ட்வேரின் கண்ணுக்கு நீங்கள் தகுதியானவராகத் தோன்றுவீர்கள்.

இப்போது பயோடேட்டாவில் வேலைக்குப் பொருத்தமான குறிச்சொற்கள் இருப்பதன் அவசியம் புரிந்திருக்கும். வேலைக்கான குறிச்சொற்களைத் தெரிந்துகொள்வது எப்படி? கவலையே வேண்டாம். வேலைக்கு விண்ணப்பிக்க உதவுவதற்காக இணையதளங்கள் இருப்பதுபோல, இதற்காகவும் இணையதளங்கள் இருக்கின்றன. இந்த இணையதளங்களில் பயோ டேட்டாவைச் சமர்ப்பித்தால் அதில் தேவையான குறிச்சொற்கள் இருக் கின்றனவா என்று பரிசோதித்துச் சொல்கின்றன. ஜாப்ஸ்கேன்

(http://www.jobscan.co/ ) இணையதளம் இந்தச் சேவையைச் செய்கிறது. 90 சதவீதப் பெரிய நிறுவனங்கள் பயோடேட்டாக்களைப் பரிசீலிக்க சாப்ட்வேரைத்தான் பயன்படுத்துகின்றன என்று எச்சரிக்கும் இந்தத் தளம் இரண்டே நொடிகளில் உங்கள் பயோடேட்டாவை அலசிப்பார்த்து அது சரியாக இருக்கிறதா என்று சொல்லிவிடுவதாக உறுதி அளிக்கிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பயோடேட்டாவை அதற்குறிய கட்டத்தில் சமர்ப்பித்து அருகே உள்ள கட்டத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கான வரையறையைக் குறிப்பிட வேண்டும். பின்னர் 2 நொடியில் உங்கள் பயோடேட்டா எந்த அளவுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது எனும் அறிக்கையைத் தருகிறது. அதை வைத்துக்கொண்டு உங்கள் பயோடேட்டா சரியாக இருக்கிறதா, இல்லை அதில் மாற்றங்கள் தேவையா எனத் தீர்மானித்துக்கொள்ளலாம். இந்தத் தளத்திலேயே, பயோடேட்டா சரியான குறிச்சொற்களைச் சேர்ப்பது தொடர்பான ஆலோசனை வழங்கும் கட்டுரைகளுக்கான இணைப்புகளும் தரப்பட்டுள்ளன.

சரியான குறிச்சொற்களைக் கண்டுகொள்ள நிபுணர்கள் எளிமையான வழிகளையும் சுட்டிக்காட்டுகின்றனர். முதலில் வேலைக்கான விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிக்கான வரையறைகளைப் படித்துப்பார்த்து அவை தொடர்பான கல்வித் தகுதி மற்றும் திறமையைக் குறிக்கும் சொற்கள் இடம்பெற வேண்டும் என்கின்றனர். அதேபோல உங்கள் துறை சார்ந்த பொதுவான வார்த்தைகள் மற்றும் நிறுவன அதிகாரி எதிர்பார்க்கும் தகுதி தொடர்பான சொற்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்தக் குறிச்சொற்கள் திறமை சார்ந்ததாக இருக்க வேண்டும். மானே தேனே பாணியில் சேர்த்துக்கொண்டால் நிராகரிக்கப்படலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்