உலகின் மிகப் பெரிய டைனோசர்

By பவித்ரா

சமீபத்தில், ஸ்பெயின் நாட்டில் காஸலான் மாகாணத்தைச் சேர்ந்த புராதன நகரமான மொரலியாவில் 20 மீட்டர் நீளமுள்ள டைனோசரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜோஸ் மிகுவல் கஸூல்லா, பிரான்சிஸ்கோ ஓர்டெகா, பெர்னாண்டோ எஸ்காகோ ஆகிய தொல்லுயிர் அறிஞர்கள் சேர்ந்து இரண்டு தொடை எலும்புகள், ஒரு மேல் கால் எலும்பு, தண்டுவட எலும்பு உள்ளிட்ட 80 எலும்புகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

பிராகியசாரஸ் (Brachiosaurus) பேரின வகையைச் சேர்ந்த சாரோபாட் டைனோசர் வகை ஒன்றின் எலும்புகள் இவை என்று கூறப்படுகிறது. தொடை எலும்பின் நீளம் மட்டும் 5 அடி 3 அங்குலம். ஒட்டகச்சிவிங்கியைப் போல நீண்ட கழுத்துள்ள தாவர உண்ணி டைனோசர்தான் சாரோபாட்கள். இதுவரை பூமியில் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட பேருயிர்கள் சாரோபாட் டைனோசர்கள்தான்.

இந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மொரலியா பிராந்தியத்தில் பிராகிய சாரஸ் டைனோசர்கள் 12 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துவந்தன. கண்டுபிடிக்கப்பட்ட எலும்பின் அளவுவை வைத்துப் பார்க்கும்போது, அந்த டைனோசர்கள் நீளம் 65 அடி 7 அங்குல நீளமும் பத்து மீட்டர் உயரத்தையும் கொண்டிருந்திருக்க வேண்டும். இந்தப் புதிய எலும்புகளின் கண்டுபிடிப்பு 12 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்த பிற தொல்லுயிர்கள் பற்றிய ஆய்வுக்கும் உற்சாகமூட்டுகிறது.

அத்துடன் மொரலியாவுக்கு அருகிலுள்ள பிராந்தியத்தில் வாழ்ந்த டைனோசர்களுக்கும் இங்குள்ள டைனோசர்களுக்கும் இடையிலான உறவையும் புரிந்துகொள்வதற்கு விஞ்ஞானிகள் முயன்றுவருகின்றனர்.

இப்போதைக்கு மொரலியாவில் உள்ள அருங்காட்சியகத்துக்கு எலும்புகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. தொல்லுயிர் ஆய்வுகளுக்கான (Paleontology) முக்கியத்துவம் வாய்ந்த தலமாக மொரலியா பிராந்தியம் மாறியுள்ளதாக ஆய்வாளர் குழுவில் ஒருவரான கஸுல்லா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்