சென்னை மார்கழி சீசன் ஒன்றேபோதும், இசைத் துறையில் கால் பதிப்பவர்கள் எப்படிப்பட்ட எதிர்காலத்தைப் பெற முடியும் என்பதை எடுத்துச் சொல்வதற்கு. இன்றைக்குத் தொழிற்படிப்புகளை வெற்றிகரமாக முடித்த பலரும், கலை மீது உள்ள ஆர்வம் காரணமாகவும், அது வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் தன்மை காரணமாகவும் இசைத் துறையிலேயே முழுமூச்சுடன் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
உங்களுக்குப் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். ஆனால், அதை ஒரு படிப்பாகப் படித்து வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி இருக்கும். இசைப் படிப்புகளைப் பற்றி அறிந்து கொண்டால், இந்தச் சந்தேகம் எட்டி பார்க்காது.
தமிழகத்திற்கான தலைநகரம் மட்டுமல்ல, இசை படிப்புகளுக்கான தலைநகரமும் சென்னைதான். எச்.ஏ.பாப்லே என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதன்முதலில் சம்மர் ஸ்கூல் ஆப் மியூசிக் என்ற பெயரில் கோடைகால இசைப் பயிற்சியை 1914ஆம் ஆண்டில் தொடங்கினார். இந்த வகுப்புகளில் இசை ஆசிரியர்கள், மாண வர்கள் என அனைவருமே கற்றுக்கொண்டார்கள்.
எப்போது பாடமானது?
அதே ஆண்டுதான் ராணி மேரிக் கல்லூரி இசைத் துறையைத் தொடங்கியது. இந்தத் துறை அடுத்த ஆண்டு நூற்றாண்டைக் கொண்டாடவுள்ளது.
மேலே கூறப்பட்ட கோடை வகுப்புகளில் சாம்பமூர்த்தி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இசையாளர் இசை விளக்கவுரை அளித்துவந்தார். அவர்தான் இந்தத் துறையின் முதல் தலைவர். 1927ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறை ஆரம்பிக்கப்பட்டது.
அதுவரை பட்டயப் படிப்பாக இருந்து வந்தது இசைப் படிப்பு. 1930களில் ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது. இன்றைக்கு முனைவர் பட்ட ஆராய்ச்சி வரை அனைத்து வகைப் படிப்புகளும் உள்ளன. இசையில் பி.ஏ.; எம்.ஏ. போன்ற பட்டப்படிப்புகளைத் தொலைக்கல்வி மூலமா கவும் கற்கலாம். முனைவர் பட்டமும் பெறலாம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சற்குரு சமாஜம் இருக்கிறது. இங்குப் பட்டப் படிப்புகளைப் படிக்கலாம். சிரோன்மணி என்ற பட்டயப் படிப்பும் உண்டு. திருவையாறு இசைக் கல்லூரியிலும் இந்தப் படிப்புகள் உள்ளன.
சென்னை தமிழிசைச் சங்க கல்லூரியில் பேச்லர் ஆஃப் மியூசிக், மாஸ்டர் ஆஃ மியூசிக் படிப்புகள் உள்ளன. திருச்சி கலைக்காவிரியில் பி.எஸ்சி; எம்.எஸ்சி. படிப்புகளை நேரடியாகவும் தொலைக் கல்வியிலும் கற்கலாம். முனைவர் ஆராய்ச்சி படிப்பும் அங்கு உள்ளது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறை உள்ளது. இங்கு முனைவர் பட்டம் பெறலாம். பி.ஏ.; எம்.ஏவும் படிக்கலாம். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ.; எம்.ஏவும் பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இசைக் கருவி படிப்புகளும் உண்டு.
நுண்கலைப் படிப்பு
பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் பேச்சிலர் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் என்ற இசை நுண்கலைப் படிப்பும் இருக்கிறது. அங்கு நிகழ்கலைத் துறையில் கிராமியக் கலைகள் குறித்த படிப்புகளும் உள்ளன. இங்கு முனைவர் பட்டம் வரை தொடர்ந்து படிக்கலாம்.
தொலைக் கல்வியில் மட்டுமே சிறப்பாகக் கற்றுக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் வரலாம். காண்டாக்ட் வகுப்புகள் உண்டு என்றா லும், சிடிகள் மற்றும் டேப்கள் மூலமும் பாடப் பகுதிகள் அனுப்பப்படுகின்றன.
- ராணி மேரிக் கல்லூரி இசைத் துறைத் தலைவர் முனைவர் எம்.ஏ.பாகீரதி உதவியுடன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago