டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.
துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,064 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாள் ஆகும். கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணத்தை வருகிற 8-ந்தேதிக்குள் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இதுவரை ஏறத்தாழ 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 6 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஐந்தரை லட்சம் பேர்தான் தேர்வு எழுதினர். குருப்-2 முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago