யுரேனஸ், சூரியக் குடும்பத்தின் ஏழாவது கோள். இது பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் இருக்கும். யுரேனஸ் கோள் கண்டுபிடிக்கப்பட்டுப் பல வருடங்கள் கழித்துதான் அதைச் சுற்றி குறுகிய வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை கண்டுபிடிக்கப்பட்டதும் சுவாரசியமான நிகழ்வுதான்.
1977ஆம் ஆண்டு இதே நாள் (மார்ச் 10) வானியல் நிகழ்வுகளை வழக்கம்போல வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது யுரேனஸ் கோள், ஒரு நட்சத்திரத்தின் அருகே சென்று அதை மறைத்தது. அப்போது நட்சத்திரத்தின் ஒளியில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். இந்த எற்ற இறக்கங்கள், யுரேனஸ் கோளைச் சுற்றியிருக்கும் வளையங்களால் எற்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அது தொடர்பான ஆராய்ச்சியில் முதலில் ஐந்து வளையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. யுரேனஸ் கோளில் இருந்து அவை இருக்கும் தூரத்தை வைத்து அவற்றுக்கு ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, எப்சிலான் என்று பெயர் வைத்தார்கள்.
நட்சத்திரத்தின் ஒளியைப் பயன்படுத்திக் கோள்களை ஆராய்ச்சி செய்யும் முறையைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவர் ஜேம்ஸ் எலியட். யுரேனஸ் வளையங்களைக் கண்டுபிடித்ததில் இவருக்கும் பங்கு உண்டு.
பிறகு 1986ஆம் ஆண்டு வாயேஜர் 2 விண்கலத்தின் உதவியுடன் யுரேனஸைச் சுற்றி மொத்தம் 11 வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மேலும் இரண்டு வெளி வளையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
வளையங்களின் நிலா
இந்த வளையங்கள் அனைத்தும் மெல்லிய துகள்களைக் கொண்டவை. கோள்களின் வயதோடு ஒப்பிடும்போது இவற்றின் வயது குறைவு. வளையங்கள் தோன்றி 600 மில்லியன் ஆண்டுகளே ஆகியிருக்கலாம் என்று ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். யுரேனஸைச் சுற்றி இருந்த எண்ணற்ற நிலாக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்ததாலேயே இந்த வளையங்கள் தோன்றியிருக்கக்கூடும் என்பது அவர்களின் கணிப்பு. உடைந்த நிலாக்கள் சிறு துகள்களாகச் சிதறி, ஒளிரும் ஆற்றலுடன் நிலைப்புத்தன்மை கொண்ட பகுதியில் வளையங்களாக நின்றிருக்கலாம் என்கிறார்கள்.
இவை யூகங்களே தவிர வளையங்கள் தோன்றியதன் காரணத்தைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. நிலாக்களின் மோதல் என்கிற கருத்துக்கு வலு சேர்ப்பது போல வாயேஜர் விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்களில் யுரேனஸ் வளையங்களில் ஒளி மிகுந்த ஒரு வளையத்தின் உள்புறமும் வெளிப்புறமும் ஒரு நிலா இருப்பது தெரியவந்தது.
(மார்ச் 10: யுரேனஸ் வளையங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தினம்)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago